செம க்யூட்... அனோஷ்கோ உடன் ஷாலினி.. ஆத்விக் உடன் அஜித்.. வைரலாகும் ஃபேமிலி போட்டோ..
நடிகர் அஜித்தின் ஃபேமிலி போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித், தனக்கென லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்துள்ள அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.
Actor Ajith Kumar Vidaamuyarchi film update out
கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்த அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. இந்த படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சூழலில் அஜித் திரையுலகில் நுழைந்து 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி விடாமுயற்சி படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
shalini and anoshka
இந்த நிலையில் அஜித்தின் ஃபேமிலி போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாலினியும் அனோஷ்காவு ஒரு போட்டோவில் க்யூட்டா போஸ் கொடுக்கின்றனர்.
ajith with his son
அதே போல் மற்றொரு போட்டோவில் அஜித் ஆத்விக் உடன் இருக்கிறார். இந்த போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
ajith shalini
முன்னதாக கடந்த மாதம் ஷாலினி அறுவைசிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்த அஜித் உடனடியாக சென்னை வந்து மனைவியை கவனித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.