- Home
- Cinema
- வெள்ளை நிற கோட் சூட்... சால்ட் அண்ட் பெப்பர் லுக்! மாஸ் காட்டும் அஜித்தின் மிரட்டல் போட்டோஸ்!
வெள்ளை நிற கோட் சூட்... சால்ட் அண்ட் பெப்பர் லுக்! மாஸ் காட்டும் அஜித்தின் மிரட்டல் போட்டோஸ்!
Ajith Kumar latest classic look photos: தல அஜித் வெள்ளை நிற கோட் சூட்டில், செம்ம ஸ்டைலிஷாக எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற நடிகர்களிடம் இருந்து வேறுபட்டவர்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அறியப்படும் அஜித், நடிப்பை தாண்டி பல்வேறு விஷயங்களிலும் கவனம் செலுத்தி, ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார். ஒரு சில பிரபலங்கள் தங்களை சிறந்த நடிகராக மெருகேற்றிக்கொள்ளும் விதமாகவே சில பயிற்சிகள் எடுப்பது உண்டு. ஆனால் அஜித் அவர்களிடம் இருந்து வேறு பட்டவர். எந்த ஒரு பயிற்சிலும் அதீத தீவிரம் காட்டும் நபர்.
துப்பாக்கி சுடுதலில் மாநில அளவில் பதக்கம்:
உதாரணத்திற்கு, ஆக்ஷன் படங்களில் நடிப்பதற்காக... முன்னணி நடிகர்கள் சிலர், சண்டை பயிற்சி, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சியை எடுத்து கொள்வார்கள். ஆனால் மாநில அளவில், அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள். ஆனால் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டது மட்டும் இன்றி, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று குவித்தார்.
கார் ரேஸில் தீவிரம்:
அதே போல் கடந்த 6 மாதத்திற்கு மேலாக தீவிர கார் ரேஸிங் விளையாட்டில் கவனம் செலுத்திய அஜித், சிறு ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தயாராகி இருக்கிறார். அதன்படி இவர் குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து, நடிக்கும் படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார்.
அஜித்தின் அடுத்த படம்:
இந்த படத்தின் கதையை அஜித்திடம் கூறி ஓகே வாங்கிவிட்ட ஆதிக், ப்ரீ புரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படைப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க சில பாலிவுட் நடிகைகளிடம் கூட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஆனால் யார் நடிக்க போகிறார் என முடிவாகவில்லை.
காத்திருக்கும் ரசிகர்கள்:
இந்த படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் ஒருபுறம் கார்த்துக்கிடக்கும் நிலையில், தற்போது ஸ்வீட் சர்பிரைஸாக வெளியாகி உள்ளது அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்.
அஜித் போட்டோ ஷூட்:
இதில் அஜித், பில்லா படத்தின் கேரக்டரை ரீ-கிரியேட் செய்யும் விதமாக வெள்ளை நிற கோட் சூட்டில், சால்ட் அண்ட் பெப்பர் ஹார் ஸ்டைலிஷ் செம்ம மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.
வைரல் ஆகும் போட்டோஸ்:
அஜித்தின் கேசுவல் போட்டோஸ் வெளியானாலே அதை வெறித்தனமாக ஷேர் பண்ணும் ரசிகர்களுக்கு, அவருடைய போட்டோ ஷூட் வெளியானால் சொல்லவா வேண்டும், சமூக வலைத்தளத்தையே தெறிக்க விட்டு வருகிறார்கள்.