- Home
- Cinema
- அஜித்தின் தாயார் பாகிஸ்தானை சேர்ந்தவரா?... இந்தியா வந்தது எப்படி? - அஜித்தின் சகோதரர் விளக்கம்
அஜித்தின் தாயார் பாகிஸ்தானை சேர்ந்தவரா?... இந்தியா வந்தது எப்படி? - அஜித்தின் சகோதரர் விளக்கம்
Ajith Mother : நடிகர் அஜித்துக்கு அனில்குமார் என்கிற சகோதரர் இருக்கிறார். இவர் தனது குடும்பத்தினர் பற்றியும், நடிகர் அஜித் பற்றியும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் எந்தவித பின்புலமும் இன்றி சொந்த முயற்சியால் நடிக்க வந்த நடிக்க வந்த நடிகர் அஜித், பல்வேறு தடைகளைக் கடந்து இன்று கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட முன்னணி நடிகனாக உயர்ந்துள்ளார். மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த அஜித், மீடியா வெளிச்சத்தை விரும்பாதவர். அதனால் இவரைப் பற்றி யாரேனும் பேசினாலே அது வைரல் ஆகி விடும்.
நடிகர் அஜித்துக்கு அனில்குமார் என்கிற சகோதரர் இருக்கிறார். சொந்தமாக தொழில் செய்துவரும் இவர், அஜித்தை போலவே மிகவும் எளிமையான மனிதராக வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது குடும்பத்தினர் பற்றியும், நடிகர் அஜித் பற்றியும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், அப்பா தமிழன் என்றும் அம்மா சிந்தி எனவும் கூறினார். தனது தாய் கராச்சியில் வசித்து வந்ததாகவும் பிரிவினையின்போது அவர் இந்தியாவுக்கு வந்துவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து கொல்கத்தாவில் இருவருக்கு திருமணம் ஆனதாகவும், தந்தைக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் கிடைத்ததன் காரணமாக கான்பூர், லக்னோ, ஐதராபாத் என பல்வேறு இடங்களில் வசித்து வந்ததாகவும், இறுதியில் தமிழ்நாடு வந்து இங்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும் கூறினார்.
அனில் குமார் இந்த பேட்டியில், தனது தாய் கராச்சியில் இருந்து இந்தியா வந்தவர் என குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம் அஜித்தின் தாயார் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் என தெரியவந்துள்ளது. நடிகர் அஜித் தமிழனா? தெலுங்கரா? என கேள்வி எழுப்பி வந்த நெட்டிசன்களுக்கு அவரது தாயார் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்கிற தகவல் சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... KGF 3 Story : சுறா விஜய் பாணியில் தப்பித்தாரா ராக்கி பாய்?... இணையத்தில் தீயாய் பரவும் ‘கே.ஜி.எஃப் 3’ படக் கதை