MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Abhinay Kinger Liver Disease : வயிறு வீங்கி பரிதாப நிலையில் சிகிச்சை பெறும் 'துள்ளுவதோ இளமை' அபிநய்!

Abhinay Kinger Liver Disease : வயிறு வீங்கி பரிதாப நிலையில் சிகிச்சை பெறும் 'துள்ளுவதோ இளமை' அபிநய்!

நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் நடித்த நடிகர் அபிநய் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 07 2025, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Abhinay Kinger Liver Disease : திரையுலகில் குணச்சித்திர வேடத்திலும் - காமெடியனாகவும் நடிக்கும் சிலர், யாரும் எட்ட முடியாத உச்சத்தை அடைந்த கதையும் உண்டு. அதே போல் முன்னணி ஹீரோவாக இருந்து அதலபாதாளத்தில் வீழ்ந்த கதையும் உண்டு.  சினிமாவில் ஜெயிக்க திறமையும் - விடாமுயற்சியும் ஒருபக்கம் இருக்க வேண்டும் என்பது வாஸ்தவமாக இருந்தாலும், அதற்கான அதிஷ்டமும் கொஞ்சம் இருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.

26
துள்ளுவதோ இளமை படம் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டவர் அபிநய்

துள்ளுவதோ இளமை படம் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டவர் அபிநய்

கஸ்தூரி ராஜா இயக்கத்தில், 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் தனுஷ் அறிமுகமான போது, எந்த அளவுக்கு தனுஷின் தோற்றம் விமர்சனங்களுக்கு ஆளானதோ, அதே அளவுக்கு அனைவராலும் கவனிக்கப்பட்ட நடிகர் தான் அபிநய். அழகும் - திறமையும் இருந்ததால், அபிநய் கதாநாயகனாக ஒரு ரவுண்டு வருவார் என பலர் எதிர்பார்த்தனர். இதற்கு ஏற்ற போல், துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து முடித்த கையேடு, அபிநய் 'ஜங்ஷன்' படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இந்த படத்தின் தோல்வியால், ஹீரோ ட்ராக்கில் இருந்து நகர்ந்து குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

செம்ம ஸ்லிம்மாக மாறி... 'துள்ளுவதோ இளமை' கெட்டப்புக்கு மாறிய ஷெரின்! வைரலாகும் போட்டோஸ்!

 

36
20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்

அந்த வகையில், ஹீரோவின் நண்பர் மற்றும் அமெரிக்க மாப்பிள்ளை கெட்டப்பில் ஏராளமான படங்களில் நடித்தார். இதுவரை தமிழில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  கடைசியாக 2014 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் பிஸ்னஸ் மேனாக நடித்திருந்தார். இதன் பின்னர் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

46
அம்மா உணவகத்தில் தான் 3 வேலை சாப்பாடு;

அம்மா உணவகத்தில் தான் 3 வேலை சாப்பாடு;

எப்படியும் அடித்துப் பிடித்து நிலையான நடிகர் என்கிற இடத்தை அபிநய் பிடிப்பார் என எதிர்பார்ப்பக்கட்ட நிலையில், இவருடைய அம்மாவின் மறைவு அபிநயை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதன் பின்னர் வாய்ப்புகளும் இல்லாமல் போனதால், தன்னுடைய வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் விற்று தான் ஜீவனம் நடத்தியதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் அபிநய் தெரிவித்திருந்தார். அதை போல் தினமும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வருவதாகவும் இவர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துள்ளுவதோ இளமை ஷெரினா இது?... ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் அசத்தலான போட்டோ... அழகை வர்ணிக்க வார்த்தை இல்லாமல் திண்டாடும் பிக்பாஸ் ஃபேன்ஸ்...!

56
தொடர்ந்து வாய்ப்புக்காக போராடி வந்த அபிநய்:

தொடர்ந்து வாய்ப்புக்காக போராடி வந்த அபிநய்:

தொடர்ந்து வாய்ப்புக்காக போராடி வந்த இவருக்கு பிரபலங்கள் சிலர் கை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை இவருக்கு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்நிலையில் தற்போது கல்லீரல் பிரச்சனை ( liver cirrhosis) காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வயிறு வீங்கி எலும்பும் தோலுமாக மாறி உள்ள அபிநயின் சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

66
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி வேண்டும்:

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி வேண்டும்:

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இவர் போராடி வருவதாகவும், இதுவரை தன்னுடைய மருத்துவ செலவுக்கு மட்டுமே 15 லட்சம் செலவாகி உள்ளதாகவும் . இன்னும் 28.5  லட்சம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். திரை உலகை சேர்ந்தவர்கள் மற்றும் நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இவருக்கு உதவி செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் ஒருபுறம் கூறிவரும் நிலையில், அபினைக்கு உதவ ரசிகர்களும் முன்வந்துள்ளனர். எனினும் தனுஷ் போன்ற பெரிய நடிகர்கள் இவரின் உயிர் காக்க கை கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved