துள்ளுவதோ இளமை படம் மூலம் தனுஷுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் திரையுலகத்தை விட்டே காணாமல் போன ஷெரின்,  திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டார். இதுவரை 3 சீசன்களில் பங்கேற்ற பிக்பாஸ் போட்டியாளர்களை விட ஷெரின் தமிழக ரசிகர்களிடம் மிகுந்த நல்ல பெயரைப் பெற்றுள்ளார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த பின்னர், வெளியே வந்த போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து வருகின்றனர். அப்படியான சந்திப்பின் போது எடுக்கப்படும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டும் வருகின்றனர்.

சமீபத்தில் கூட சரவணன் அவரது அப்பாவிற்கு கோவில் கட்டிய நிகழ்ச்சியில் அனைத்து பிக்பாஸ் பிரபலங்களும் பங்கேற்றனர். அப்போது ஒருவருடன் ஒருவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களும், குரூப் செல்ஃபிக்களும் இணையத்தில் லைக்குகளை குவித்தது. அதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பிரபலங்கள் அவர்களது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் செம வைரலானது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து நீண்ட நாட்கள் ஆனாலும் அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீதான ரசிகர்களின் அன்பு இன்னும் குறையவில்லை. பிக்பாஸ் பிரபலங்கள் அங்கு சென்றேன், இங்கு சென்றேன், அவரைப் பார்த்தேன் என சோசியல் மீடியாவில் பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் செம ரெஸ்பான்ஸ் பெறுகிறது. 

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாக்‌ஷி உடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஷெரின். அவருடன் ஷாப்பிங், பார்ட்டிகளுக்கு செல்வது போன்ற புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார். தற்போது ஷெரின் தமிழ் நாட்டின் பாரம்பரிய உடையான புடவை கட்டி, அழகான போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நீங்க எங்கிருந்து வர்றீங்கன்னு சொல்லுங்கன்னு? கேள்வி எழுப்பியுள்ளார். பலரையும் கவர்ந்த அந்த புகைப்படம் ஆயிரக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.