அபிஷேக் பச்சனின் காதல் லீலைகள்; ஐஸ்வர்யா ராய்க்கு முன் இத்தனை நடிகைகளை காதலித்துள்ளாரா?
கரிஷ்மா கபூருடனான நிச்சயதார்த்தம் முறிவு முதல் ஐஸ்வர்யா ராயுடனான திருமணம் வரை 49 வயதாகும் அபிஷேக் பச்சனின் காதல் கதைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அபிஷேக் பச்சனின் காதல் கதைகள்
49 வயதாகும் அபிஷேக் பச்சன் 1974ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவரது காதல் கதைகளும் குறைவானதல்ல. சில நடிகைகளுடன் அவரது பெயர் கிசுகிசுவில் சிக்கியது. இருப்பினும், அவர் ஐஸ்வர்யா ராயை மணந்தார். அபிஷேக்கின் காதல் கதைகள் யார் யாருடன் இருந்தது என்பதை அறிந்து கொள்வோம்.
அபிஷேக் பச்சனின் திரைப்பயணம்
அபிஷேக் பச்சன் தனது திரைப்பட வாழ்க்கையில் வெற்றிப் படங்களை விட தோல்விப் படங்களையே அதிகம் கொடுத்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் ஜே.பி. தத்தாவின் 'ரெஃப்யூஜி' படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுகமான பிறகு அவரது தொடர்ச்சியான 16 படங்கள் தோல்வியடைந்தன.
கரிஷ்மாவுடன் நிச்சயதார்த்தம்
அபிஷேக் பச்சன் - கரிஷ்மா கபூர் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. ஜெயா பச்சன், கரிஷ்மாவை ஊடகங்களுக்கு முன்னால் தனது மருமகள் என்று அறிமுகப்படுத்தினார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்று போனது.
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா வழக்கு; கூகுளுக்கு நோட்டீஸ்; நீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?
ராணி முகர்ஜியுடன் காதல்?
ராணி முகர்ஜியும் அபிஷேக் பச்சனும் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். 'பண்டி அவுர் பப்ளி', 'யுவா' படப்பிடிப்பின் போது இருவரும் நெருக்கமானார்கள். இருப்பினும், இருவரும் தங்கள் உறவைப் பற்றி ஒருபோதும் வெளிப்படையாகப் பேசவில்லை. ஜெயாவுடனான மனக்கசப்பினால் உறவு முறிந்ததாகக் கூறப்படுகிறது.
தீபானிதா சர்மாவுடன் டேட்டிங்
பாலிவுட் வட்டாரம் வெளியிட்ட தகவலின்படி, அபிஷேக் பச்சனின் காதல் வலையில் நடிகை தீபானிதா சர்மாவும் விழுந்ததாக கூறப்படுகிறது. இருவரும் 10 மாதங்கள் டேட்டிங் செய்ததாகவும், பின்னர் பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நிமிரத் கவுருடன் கிசுகிசுக்கள்
அபிஷேக் பச்சனின் பெயர் நீண்ட காலமாக நிமிரத் கவுருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யாவின் உறவில் ஏற்பட்ட விரிசலுக்கு நிமிரத் கவுர் தான் காரணம் என்று கூறப்பட்டன. இருப்பினும், இதுகுறித்து அபிஷேக் இதுவரை எந்த ரிப்ளையும் கொடுக்கவில்லை.
ஐஸ்வர்யா ராயுடன் திருமணம்
அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் உறவு 'பண்டி அவுர் பப்ளி' படத்தில் இணைந்து பணியாற்றிய போது தொடங்கியது. இருவரும் மேலும் சில படங்களில் இணைந்து நடித்தனர், பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 2007 இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்கிற மகளும் உள்ளார்.
இதையும் படியுங்கள்... 51 வயதிலும் பேரழகு; ஐஸ்வர்யா ராய் அழகின் ரகசியம்!