MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரங்கா ரிட்டர்ன்ஸ்.. ஆவேசம் 2 அப்டேட்டை வெளியிட்ட பகத் பாசில்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

ரங்கா ரிட்டர்ன்ஸ்.. ஆவேசம் 2 அப்டேட்டை வெளியிட்ட பகத் பாசில்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

நடிகர் பகத் பாசில், தனது பிளாக்பஸ்டர் படமான 'ஆவேசம்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பால், ரங்கா கதாபாத்திரத்தை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 09 2026, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆவேசம் 2 படம் பற்றி பகத் பாசில்
Image Credit : Google

ஆவேசம் 2 படம் பற்றி பகத் பாசில்

தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான நடிகராக அறியப்படும் பகத் பாசில், தமிழ்த் திரைப்படங்களிலும் தன் நடிப்பால் தனி முத்திரை பதித்து வருகிறார். மலையாள சினிமாவில் இருந்து வந்தாலும், தமிழ் படங்களில் அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் எப்போதும் வித்தியாசமாகவும் நினைவில் நிற்கும் வகையிலும் இருக்கும் என்று கூறலாம். வேலைக்காரன் படத்தில் நடித்த வில்லன் வேடத்தின் மூலம் தமிழில் அவருக்கு பெரிய கவனம் கிடைத்தது.

25
தமிழ் சினிமாவில் பகத் பாசில்
Image Credit : our own

தமிழ் சினிமாவில் பகத் பாசில்

இதனைத் தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் போன்ற படங்களில் அவர் நடித்த, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் புதிய பரிமாணத்தை காட்டினார். குறிப்பாக விக்ரம் படத்தில் அவர் நடித்த ‘அமர்’ கதாபாத்திரம் தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்த்தது. ஹீரோ, வில்லன் என்ற எல்லைகளை கடந்து கதைக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களையே தேர்வு செய்வதே பகத் பாசிலின் பலம்.

Related Articles

Related image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Related image2
இனி டோலில் நிற்க வேண்டாம்.. வாகனம் ஓடும் போதே கட்டணம் எடுக்கப்படும்.. இந்தியாவே மாறப்போகுது
35
பகத் பாசில் நடித்து வரவிருக்கும் படங்கள்
Image Credit : our own

பகத் பாசில் நடித்து வரவிருக்கும் படங்கள்

அதனாலேயே தமிழ் ரசிகர்களிடமும் அவர் ஒரு நம்பகமான நடிகராக மாறியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான நடிகராக திகழும் பகத் பாசில் தற்போது, மீண்டும் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் அப்டேட்டுகளை பகிர்ந்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு என மொழி எல்லைகளை தாண்டி நடித்து வரும் பகத் பாசில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது வரவிருக்கும் படங்கள் குறித்து பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

45
ஆவேசம் படத்தின் அடுத்த பாகம்
Image Credit : our own

ஆவேசம் படத்தின் அடுத்த பாகம்

2024-ல் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற ஆவேசம் படத்தில், ‘ரங்கா’ என்ற கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் பகத் பாசில் காட்டிய நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆக்ஷன், காமெடி, ஸ்டைல் ​​என அனைத்தும் கலந்த அந்த படம், மலையாள சினிமாவில் அந்த ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது. இதன் தொடர்ச்சியான அடுத்த பாகம் எப்போது என்ற கேள்வி நீண்ட நாட்களாக ரசிகர்களிடையே இருந்து வந்தது.

55
ஆவேசம் 2 வெளியாகும் தேதி
Image Credit : our own

ஆவேசம் 2 வெளியாகும் தேதி

அந்த எதிர்பார்ப்புக்கு தற்போது நடிகர் பகத் பாசில் நேரடியாக பதிலளித்துள்ளார். ஆவேசம் 2 உருவாகும் என்பதை உறுதிப்படுத்திய அவர், “இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு உடனடியாக இருக்காது. ஆனால் 2027 அல்லது 2028 படம் வெளியாக வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார். இதனால், ரங்கா கதாபாத்திரத்தை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களுக்கு நடனமாட தடை... திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
Recommended image2
சீண்டிய சிவி சண்முகம்... சைலண்டாக பதிலடி கொடுத்த நயன்தாரா - இன்ஸ்டா ஸ்டோரியை கவனிச்சீங்களா?
Recommended image3
யூத் முதல் சீதா பயணம் வரை... உகாதி ஸ்பெஷலாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?
Related Stories
Recommended image1
நன்றி தெய்வமே.. 27 கிமீ மைலேஜ் கொடுக்கும் டாடா.. பட்ஜெட் விலையில் குடும்ப காரை இப்போ வாங்கலாம்!
Recommended image2
இனி டோலில் நிற்க வேண்டாம்.. வாகனம் ஓடும் போதே கட்டணம் எடுக்கப்படும்.. இந்தியாவே மாறப்போகுது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved