MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எங்கள் பிரிவுக்கு அந்த 3வது நபர் தான் காரணம்; ஆதாரம் இருக்கு - ரவி மோகனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆர்த்தி

எங்கள் பிரிவுக்கு அந்த 3வது நபர் தான் காரணம்; ஆதாரம் இருக்கு - ரவி மோகனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆர்த்தி

ரவி மோகனை விவாகரத்து பெற்று பிரிந்ததற்கு மூன்றாவது நபர் ஒருவர் தான் காரணம் என ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

3 Min read
Author : Ganesh A
Published : May 20 2025, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Aarti Ravi Statement
Image Credit : Google

Aarti Ravi Statement

நடிகர் ரவி மோகன் ஆர்த்தி மீது குற்றம்சாட்டி கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அந்த அறிக்கைக்கு பதிலடி கொடுத்து ஆர்த்தி ரவி மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில், “கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ள இந்தக் காலத்தில் என்னைச் சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகள் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படிச் செய்துவிட்டது. ஒரு முறை கடைசியாக அனைவருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பிரிவுக்கு 3வது நபரே காரணம் - ஆர்த்தி
Image Credit : Google

பிரிவுக்கு 3வது நபரே காரணம் - ஆர்த்தி

எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம். எங்களைப் பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல. வெளியில் இருந்து வந்த ஒருவர் தான். "உங்கள் வாழ்வின் ஒளி" என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தார் என்பதே உண்மை. இந்த நபர், சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே எங்கள் வாழ்கையில் வந்துவிட்டார். இதை ஒரு வெற்று குற்றச்சாட்டாக அல்ல மாறாக போதுமான ஆதாரங்களுடன் தான் கூறுகின்றேன்.

எனக்குக் 'கட்டுபடுத்திய மனைவி' என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. என் கணவரை அன்புடன் பராமரித்து, அவருக்குக் கேடு தரும் தீய பழக்க வழக்கங்களிலிருந்தும் எங்கள் வீட்டின் உறுதியை சீர்குலைக்கும் விஷயங்களிலிருந்தும் அவரைப் பாதுகாத்துக் கட்டுப்படுத்தியது என் குற்றம் என்றால், அப்படியே இருக்கட்டும். எந்த ஒரு உண்மையான மனைவியும் தன் கணவரின் நலனுக்காக எதைச் செய்வாரோ நானும் அதைத்தான் செய்தேன். ஆனால் அப்படி நடந்து கொள்ளாத பெண்களுக்கு இந்த சமுதாயம் சுமத்தும் அனைத்து கொடூரமான பட்டங்களையும் கணவரின் நலனை காப்பாற்றியும் நான் சுமக்கிறேன்.

34
உனக்காக என் கனவை தொலைத்தேன் - ஆர்த்தி
Image Credit : Google

உனக்காக என் கனவை தொலைத்தேன் - ஆர்த்தி

இன்னும் சொல்வதென்றால் வாழ்வின் கடினமான சமயங்களில் கூட நாங்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக, என் கணவரின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் உடன் அன்புடனே இருந்தோம். எங்கள் சமூக ஊடக பதிவுகளே அதற்குச் சாட்சி. நாங்கள் பிரிவதற்கு முதல் நாள் வரை எங்கள் உறவும் எல்லோருடைய திருமண வாழ்விலும் இருப்பது போல அன்பும், விவாதமும், ஆசையும், தற்காலிக கருத்து வேறுபாடுகளும் நிறைந்தது என்று தான் நான் நம்ப வைக்கப்பட்டேன்.

15 ஆண்டுகள் அவருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எனது சொந்த கனவுகள், லண்டனில் பெற்ற முதுகலைப் பட்டம், லட்சியம் என அனைத்தையும் துறந்துவிட்டு வாழ்ந்தேன். வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி மீறப்பட்டது. அவருக்காக வாழாமல் எனக்காகவும் என் லட்சியங்களுக்காகவும் நான் வாழ்ந்திருந்திருந்தால், என் சொந்த அடையாளத்தில் இதைவிட இருமடங்கு வசதியான, உயர்வான ஒரு வாழ்கையை நான் வாழ்ந்திருப்பேன். ஆனால் காதலின் பேரில் நம்பிக்கையின் பேரில் வாழ்ந்துவிட்டேன். நாங்கள் இதுவரை எடுத்த அனைத்து பொருளாதார முடிவுகளும் இருவரும் சேர்ந்து எடுத்தவைகளே. அதன் எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. அவை முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

44
கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம் - ஆர்த்தி
Image Credit : Instagram

கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம் - ஆர்த்தி

இந்த இக்கட்டான சூழலில் என்னுடன் துணை நிற்கும் செய்தித்துறை, சமூக ஊடகம், மற்றும் பொது மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய அன்பு உண்மையில் எனக்கு மிகுந்த பலம் அளிக்கிறது.

மேலும் இத்தனை நெருக்கடியையும் தாங்கிக் கொண்டிருக்கும் என் இரண்டு பிள்ளைகள், எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மற்றும் என் நண்பர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய இந்த தனிப்பட்ட வேதனையை, பிரச்சனையை இப்படி நான் பொதுவெளியில் இந்த உலகிற்கு எடுத்துக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும். இந்தச் சூழ்நிலையில் என் சுயகௌரவத்தை பாதுகாக்கவே இப்படி முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

இத்தனை வருடங்கள் உங்களுக்காக உங்களோடு வாழ்ந்த ஒருத்தியை உதறித்தள்ள வேண்டும் என முடிவு எடுத்த நீங்கள் அதை கொஞ்சம் கண்ணியத்துடன் கையாண்டு இருக்கலாம். இன்று, என் கண்ணியமும் நேர்மையும், உங்களால் ஒரு பொது விவாதமாக மாற்றப்பட்டுள்ளதை வேதனையோடு கடக்க முயற்சிக்கிறேன். உண்மை தெரிந்த ஒரே நபர், என் கணவர் எனக்காக நின்று பேச மறுக்கிறார். அவருடைய மௌனத்திற்குப் பின் ஒரு நோக்கம் உள்ளது. அவருக்கு நிம்மதி கிடைக்க உண்மையில் விரும்புகிறேன். ஆனால் அந்த நிம்மதி உங்களோடு எல்லா கடினமான நேரத்திலும் துணை நின்ற ஒருவரைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் கிடைக்காது” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜெயம் ரவி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Related Stories
Recommended image1
ரவி மோகன் - ஆர்த்தி பிரிவுக்கு தனுஷ் தான் காரணம் - புது குண்டை தூக்கிப்போட்ட சுசித்ரா
Recommended image2
Jayam Ravi wife Aarthi: அந்த இடத்தில் குத்திய டாட்டூ தெரிய.. போஸ் கொடுத்து ஹீரோயின்களை மிஞ்சிய ஆர்த்தி ரவி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved