குடும்பத்தை பிரித்த சினிமா..இனி வேண்டாம்..அமீர்கானின் அதிர்ச்சி முடிவு!
தனது குடும்பத்திற்காக சினிமாவை விட்டே விலக முடிவு செய்ததாக அமீர்கான் கூறியுள்ளது ரசிகர்களைளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Aamir khan
அமீர் கானின் தங்கல் :
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடித்தால் தங்கல் திரைப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நல்ல பெயரை பெற்று தந்தது. பெண் பிள்ளைகளை சாதிக்க தூண்டும் தந்தையாக அமீர்கான் நடித்திருந்தார். இந்த படத்திற்கென உடல் எடையை கூட்டு குறைத்து மாஸ் காட்டியிருந்தார் அமீர்.
Aamir khan
வசூலை வரிக்குவித்து :
கடந்த 2016-ம் ஆண்டு நிதேஷ் திவாரி இயக்கத்தில்,வெளியான தங்கல் உண்மை சம்பவத்தை தழுவிய கதை களத்தை கொண்டிருந்தது. இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகி வசூலை வரகுவித்தது. அதோடு சீனாவில் சுமார் சுமார் 1130 கோடி ரூபாயும், உலகம் முழுக்க மொத்தம் 1913 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
Aamir khan
சமீபத்திய படங்கள் :
அமீர்கான் தனது 54 வது பிறந்தநாளில் லால் சிங் சத்தா- ல் நடிப்பதாக உறுதிப்படுத்தினார் .இந்த படம் அமெரிக்க நகைச்சுவை திரைப்படமான 'Forrest Gump' -ன் தழுவலாகும். அமீர் கான் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அக்டோபர் 2019 -ல் துவங்கி துருக்கியில் செப்டம்பர் 2020 ல் முடிக்கப்பட்டது. பின்னர் 2020 கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் COVID-19 தொற்றுநோய் காரணமாக 11 ஆகஸ்ட் 2022 அன்று வெளியிடுவதற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Aamir khan
குடும்ப சிக்கல் :
பாலிவுட்டில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் தோன்றினாலும் அமீர் கானின் குடும்ப வாழ்க்கை போதுமான வெற்றிகளை பெறவில்லை என்றே தோன்றுகிறது. . அமீர் தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை 2002-ல் விவாகரத்து செய்தார். பின்னர் "லகான்" திரைப்படத்தில் நடித்த போது அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவை காதலித்துகடந்த 2005-ல் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. "Aamir khan marriage" |"தங்கல்" மகளுடன் அமீர்கான் மூன்றாவது திருமணமா ? நடிகை பாத்திமா கூறிய அதிர்ச்சி தகவல் !!
Aamir khan
மீண்டும் விவாகரத்து :
இரண்டாவது முறையாக காதல் திருமணம் செய்துகொண்ட அமீர்கான் மீண்டும் விவாகரத்து முடிவை அறிவித்தார். மகன் பிறந்த பிறகு அதிக கருது வேறுபாடு ஏற்பட்ட தன காரணமாக விவாகரத்து முடிவுக்கு வந்த இந்த தம்பதிகள் கடந்த ஜூலை மாதம் தங்களது விவாகரத்தை அறிவித்தனர். அப்போது 'இந்த விவாகரத்து ஒரு முடிவு அல்ல. ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக நீங்கள் காண்பீர்கள்' என தெரிவித்திருந்தனர்.
Aamir khan
திடீர் மாற்றம் :
இந்நிலையில் தனது குடும்பத்திற்காக சினிமாவை துறக்கவுள்ளதாக அமீர் கான் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பேட்டியில் பேசிய அமீர் , “நான் நடிக்க தொடங்கியபோது என் குடும்பம் என்னுடன் மட்டுமே இருக்கிறது என்று நினைத்தேன். அதனால் நான், அவர்களை சாதாரணமாக கருதி, பார்வையாளர்களின் மனதை கவரும் பயணத்தை மேற்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
Aamir khan
86-ல் உணர்ந்திருந்தால் :
மேலும் பேசிய அமீர் கான்.. நான் சுயநலவாதி, என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் என் குழந்தைகளுடன் இருந்தேன். ஆனால் அவர்களுடன் நேரம் செலவழிக்கவில்லை. இந்த துயரத்தை 57 வது வயதில் உணர்ந்திருக்கிறேன். 86 வயதில் உணர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.. குறைந்தபட்சம் இப்போது என்னால் திருத்த முடியும். என உணர்ச்சி ததும்ப பேசியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு ... அந்தாளுதான் விவாகரத்துக்கு காரணம்... சமந்தாவின் வாழ்க்கையை சீரழிச்சிட்டான்... பிரபல நடிகர் மீது கங்கனா பகீர்.!
Aamir khan
குடும்பத்திற்காக எடுத்த சுவாரஸ்ய முடிவு :
சினிமா என்னை என் குடும்பத்திலிருந்து பிரித்துவிட்டதாக உணர்ந்தேன். நான் இனி நடிக்க மாட்டேன், திரைப்படங்களை தயாரிப்பேன் என்று எனது குடும்பத்தினரிடம் கூறினேன். நான் உங்கள் அனைவருடனும் இருக்க விரும்புகிறேன் என்று அவர்களிடம் கூறினேன். எனநடிப்பிற்கு முழுக்கு போடுவது குறித்து அமீர் பேசியுள்ளார்.