கணவன் மனைவி சேர்ந்து பார்க்க வேண்டிய திரைப்படம் இது..!
அன்பு, பொறுமை, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் சேர்ந்ததே மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை. ஆனால், இன்றைய நாட்களில் பலர் வேலைப்பளு, சிறுசிறு கருத்து வேறுபாடுகளால் தங்கள் உறவைச் சிதைத்துக் கொள்கின்றனர்.

உறவு ஆலோசனைகள்
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால், கணவன் மனைவி இடையே மனக்கசப்புகள் வருவதுண்டு. இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்தித்தால், உங்கள் துணையுடன் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.
ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார் எதிரொலி... மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளிர் ஆணையம் வைத்த செக்
தம்பதிகள் பார்க்க வேண்டிய திரைப்படம்
தாம்பத்திய வாழ்வில் பிரச்சனைகள் வருவது இயல்பு. பிரச்சனைகளை எப்படி கையாள்வது, ஒருவருக்கொருவர் எப்படி ஆதரவாக இருப்பது என்பதைச் சொல்லும் படம்தான் 'இறுகப்பற்று'. நெட்ஃபிளிக்ஸில் உள்ள இந்தத் திரைப்படம் மூன்று ஜோடிகளின் கதையைச் சொல்கிறது.
மூன்று ஜோடிகளின் கதை..
காதல் திருமணம் செய்த ஜோடி, பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட ஜோடி, மற்றும் எந்தப் பிரச்சினையும் இல்லாத ஒரு ஜோடி என மூன்று வெவ்வேறு தம்பதியினரின் உறவுச் சிக்கல்களையும், அவர்கள் அதை எப்படி சரிசெய்தார்கள் என்பதையும் இப்படம் காட்டுகிறது.
திரைப்படத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...
பிரச்சனைகளைத் தவிர்ப்பதை விட, அவற்றைப் புரிந்துகொள்வதே உண்மையான அன்பு. ஒருவருக்கொருவர் செவிசாய்ப்பது, உணர்வுகளைப் பகிர்வது எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் உணர்த்துகிறது. தம்பதியினர் தங்கள் தவறுகளை உணர இப்படம் உதவும்.
ரூ.10 லட்சத்த ஆட்டைய போட்டு ரூ.42000க்கு டைனிங் டேபிள் வாங்கிய செந்தில்:அதிர்ச்சியில் ஆடிப்போன மீனா!