MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • போதை பார்ட்டியில் அதிரடி ரெய்டு.. கொத்து கொத்தாக சிக்கிய நடிகைகள்! சென்னையில் பரபரப்பு.!

போதை பார்ட்டியில் அதிரடி ரெய்டு.. கொத்து கொத்தாக சிக்கிய நடிகைகள்! சென்னையில் பரபரப்பு.!

Chennai Cinema Actress: சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு உயர் ரக போதைப்பொருட்களை விற்பனை செய்த வழக்கில் பிரபல நடிகை உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 06 2026, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகத்தில் போதைப் பொருள் அதிகரிப்பு
Image Credit : Twitter

தமிழகத்தில் போதைப் பொருள் அதிகரிப்பு

தமிழகத்தில் சமீப காலமாக போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான செய்திகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களில் போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரழிந்து வருகின்றன. மற்றொரு புறம் குற்றச்சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் குறைந்தபாடியில்லை.

25
போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ்
Image Credit : social media

போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ்

இந்நிலையில் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் பிரபல சினிமா நடிகை மற்றும் அவரது தோழி, ஆண் நண்பர்கள் உட்பட 8 பேர் சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு வடபழனி, சாலிகிராம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சினிமா பிரபலங்களுக்கு அதிகளவில் மெத்தாம்பெட்டமின் உள்ளிட்ட உயர் ரக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நெசப்பாக்கம் ஓம் சக்தி நகர் 4வது தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன்(33) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

Related Articles

Related image1
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? பரபரப்பு தகவல்.. முட்டை, இறைச்சியை சாப்பிடக்கூடாதா?
Related image2
இனி இவர்களுக்கும் 31 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு! குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்!
35
போதைப்பொருள் சினிமா நடிகை கைது
Image Credit : google

போதைப்பொருள் சினிமா நடிகை கைது

அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை கோவூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் குமார்(31) என்பவரும் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் திரைப்பட நடிகை மற்றும் துணை நடிகை ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகை அஞ்சு கிருஷ்ணா (30), துணை நடிகை வின்சி நிவேதா (26) மற்றும் இவர்களது நண்பர்களான கார்த்திக் ராஜா (31), யஸ்வந்த் (25), ஸ்ரீராம் நடராஜன் (32), ஆல்வின் (26) ஆகிய மேலும் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

45
கார் செல்போன் பறிமுதல்
Image Credit : our own

கார் செல்போன் பறிமுதல்

கைதான 9 பேரிடம் இருந்தும் உயர் ரக ஓஜி வகை கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் நடிகையின் செல்போனை போலீசார் சோதனை செய்த போது, அவரிடம் வாடிக்கையாக போதைப்பொருள் வாங்கிய சக சினிமா பிரபலங்கள் பலர் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

55
போதை பொருள் மூலம் பல லட்சம் சம்பாதித்த நடிகை
Image Credit : Google

போதை பொருள் மூலம் பல லட்சம் சம்பாதித்த நடிகை

இந்த போதை பொருள் மூலம் பல லட்சம் ரூபாயை வின்சி நிவேதா சம்பாதித்துள்ளார். அந்த வீட்டில் கேரளாவை சேர்ந்த தனது தொழில் பாட்னரான அஞ்சு கிருஷ்ணன் என்பவரையும் சேர்த்துள்ளார். கைதான நடிகை, ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதும், மற்றொருவர் திரைப்படங்களில் துணை நடிகையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
குற்றம்
சினிமா
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனியை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிய தேவசகாயம்... வெளிவரப்போகும் உண்மை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
காதல் விருந்தாக வந்துள்ள வித் லவ்... டேஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
டைவர்ஸுக்கு வாய்ப்பில்ல ராஜா... ரோகிணியின் ராஜ தந்திரத்தால் வசமாக சிக்கிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Related Stories
Recommended image1
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? பரபரப்பு தகவல்.. முட்டை, இறைச்சியை சாப்பிடக்கூடாதா?
Recommended image2
இனி இவர்களுக்கும் 31 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு! குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved