MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? பரபரப்பு தகவல்.. முட்டை, இறைச்சியை சாப்பிடக்கூடாதா?

பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? பரபரப்பு தகவல்.. முட்டை, இறைச்சியை சாப்பிடக்கூடாதா?

Bird Flu: சென்னையில் அடையார் பகுதிகளில் இறந்த காகங்களுக்கு H5N1 ஏவியன் இன்ஃப்ளூயன்சா எனும் பறவைக் காய்ச்சல் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 06 2026, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காகங்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு
Image Credit : ANI

காகங்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு

சென்னை அடையார், காந்தி நகர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து காகங்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுக் குழுவினர் கடந்த ஜனவரி மாதம் சேகரித்து போபாலில் உள்ள தேசிய விலங்கள் நோய் கட்டுபாட்டு ஆய்வு நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், எச்5என்1 ஏவியன் இன்ஃப்ளூயன்சா என்ற பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

25
பறவை காய்ச்சல்
Image Credit : Getty

பறவை காய்ச்சல்

இதனையடுத்து பறவைகள் உயிரிழந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதில், உங்கள் பகுதிகளில் திடீரென இறக்கும் பறவைகள் குறித்து கால்நடை பராமரிப்பு துறைக்கு மக்கள் தகவல் அளிக்க வேண்டு. திடீரென பறவைகளோ, விலங்குகளோ உயிரிழந்து கிடந்தால் அதை வெறும் கையால் தொடக்கூடாது. பறவைகள் இறந்தால் முறையாக அப்புறப்படுத்த ஆழமாக குழி தோண்டி அந்த பறவையை புதைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

Related Articles

Related image1
சென்னையில் உயிரிழந்து கிடந்த காகங்கள்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி! பொதுமக்களுக்கு அலர்ட்!
Related image2
இனி இவர்களுக்கும் 31 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு! குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்!
35
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா?
Image Credit : our own

பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா?

இந்நிலையில் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அதாவது பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் பறவை இறப்பை வைத்து இறந்த பறவைகளின் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும். இந்நோயானது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரிடையாகவும் தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்பு உள்ளது.

45
பொது மக்களுக்கு கீழ்கண்ட சுகாதார அறிவுரைகள்
Image Credit : freepik

பொது மக்களுக்கு கீழ்கண்ட சுகாதார அறிவுரைகள்

* ப்ளு போன்ற அறிகுறிகள் (ILI) - இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

* பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள் இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரியவும். ஏதேனும் ப்ளு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் / அரசு மருத்துவமனை /மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

55
முட்டை, இறைச்சியை தவிர்க்க வேண்டும்
Image Credit : Asianet News

முட்டை, இறைச்சியை தவிர்க்க வேண்டும்

* அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே கால் நடை மருத்துவ துறைக்கு தெரிவிக்க வேண்டும். கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

* பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

* இந்நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம்.

* மேலும் கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண். 104 ஐ தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாக்டர்
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி இவர்களுக்கும் 31 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு! குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்!
Recommended image2
“அரசியலில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” - அண்ணாமலை திட்டவட்டம்
Recommended image3
100 பேரிடம் தலா ரூ.3 லட்சம் வசூல் வேட்டை..! சமத்துவபுரம் வீடு ஒதுக்கீட்டில் திமுக ஒ.செ-க்கள் தில்லுமுல்லு..!
Related Stories
Recommended image1
சென்னையில் உயிரிழந்து கிடந்த காகங்கள்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி! பொதுமக்களுக்கு அலர்ட்!
Recommended image2
இனி இவர்களுக்கும் 31 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு! குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved