அஜித் வாங்கிய 6 லட்சம் கடன்..? எதற்காக... பரபரப்பை ஏற்படுத்திய பிரபல தயாரிப்பாளர்..!
ஒரு படத்திற்க்கு, கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வரும் தல அஜித், தன்னிடம் கடனாக பெற்ற 6 லட்ச ரூபாயை இதுநாள் வரை திருப்பி தரவில்லை என, பிரபல தயாரிப்பாளர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வேட்டையாடு விளையாடு', 'இந்திரலோகத்தில் நான் அழகப்பன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளவர் தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன். இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், அஜித் தன்னிடம் பெற்ற கடன் தொகை 6 லட்சத்தி இதுநாள்வரை கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

திடீர் என தன்னுடைய அலுவலகத்திற்கு ஒரு நாள் வந்த அஜித், தன்னுடைய பெற்றோரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க 6 லட்சம் பணம் வேண்டும் என, மாணிக்க நாராயனிடம் கேட்க... அவரும் எவ்வித செக் மற்றும் கையெழுத்தும் வாங்காமல் உடனடியாக பணம் கொடுத்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு கொடுத்த இந்த பணத்தை, அஜித் தானாகவே திருப்பி கொடுத்து விடுவார் என, நம்பி இருந்தேன். ஆனால் அவர் கொடுக்கவே இல்லை எனவே இந்த விஷயத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அதாவது அப்போது முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருந்த அஜித், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், 7th சேனல் நாராயணன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருந்ததாகவும்... அதனை நினைவில் வைத்தே அஜித்துக்கு இந்த பணத்தை நாராயணன் கொடுத்துள்ளார் என தெரிகிறது.

ஆனால் ஒரு சில காரணங்களால் அஜித் இவரது தயாரிப்பில் நடிக்க முடியாமல் போனது.

பல முறை அஜித்தை சந்திக்க தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் முயன்ற போதும் அது முடியாமல் போனது. போன் அழைப்பை கூட எடுக்க வில்லை என தெரிகிறது. இதன் காரணமாகவே தன்னுடைய ஆதங்கத்தை தற்போது தயாரிப்பாளர் வெளிப்படுத்தியுள்ளார்.

இனி அஜித் கால்ஷீட் கொடுத்தாலும் வேண்டாம்... அதே நேரத்தில் தன்னிடம் வாங்கிய 6 லட்ச ரூபாயை எப்போது தருவீங்க என கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதற்க்கு அஜித் தரப்பில் என்ன பதில் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.