MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிளாப் ஆன தனுஷ், பிரதீப் படங்கள்... பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சூர்யா - கோலிவுட்டின் 6 மாத ரிப்போர்ட் இதோ

பிளாப் ஆன தனுஷ், பிரதீப் படங்கள்... பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சூர்யா - கோலிவுட்டின் 6 மாத ரிப்போர்ட் இதோ

Kollywood Box Office Report: 2026ம் ஆண்டு தொடங்கி 6 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. இந்த காலகட்டத்தில் கோலிவுட் நிலவரம் எப்படி இருந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Jul 01 2026, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Kollywood Half Year Report 2026
Image Credit : X

Kollywood Half Year Report 2026

2026ம் ஆண்டு தொடங்கி 6 மாதங்கள் கடகடவென ஓடிவிட்டன. இந்த ஆறு மாதங்களில் தமிழ் சினிமா ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளது. சொல்லப்போனால் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பெரும்பாலானவை பிளாப் ஆகிவிட்டன. ஆனால் இந்த ஆண்டு நிறைய சிறு பட்ஜெட் படங்கள் வெற்றிக் கனியை ருசித்துள்ளன. 2026-ம் ஆண்டு முதல் பாதியில் ரிலீஸ் ஆன படங்களைப் பற்றியும், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ஜனவரி மாத நிலவரம்
Image Credit : Dawn Pictures, Kannan Ravi Productions, Studio Green

ஜனவரி மாத நிலவரம்

ஜனவரி மாதம் தமிழ் சினிமாவில், பொங்கல் வெளியீடாக சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.85 கோடி மட்டுமே வசூலித்தது. அதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன கார்த்தியின் வா வாத்தியாரே திரைப்படம் படுதோல்வி அடைந்தது. பொங்கல் ரேஸில் களமிறங்கிய மற்றொரு படமான ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதையடுத்து ஜனவரி மாத இறுதியில் அஜித்தின் மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்றது. இதுதவிர ஹாட் ஸ்பாட் 2 திரைப்படமும் ஜனவரி இறுதியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Related Articles

Related image1
Karuppu : OTTக்கு வந்த கருப்பு... தியேட்டரில் வாரிசுருட்டிய வசூல் எத்தனை கோடி தெரியுமா?
Related image2
Kara OTT Release : ஓடிடிக்கு வரும் கர... தியேட்டரில் வாரிசுருட்டிய ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?
37
பிப்ரவரியில் ஆதிக்கம் செலுத்திய சிறு பட்ஜெட் படங்கள்
Image Credit : Passion Studios

பிப்ரவரியில் ஆதிக்கம் செலுத்திய சிறு பட்ஜெட் படங்கள்

பிப்ரவரி மாதத்தில் சிறு பட்ஜெட் படங்கள் தான் ரிலீஸ் ஆகின. முதல் வாரத்தில் ரஜினி மகள் செளந்தர்யா தயாரித்த வித் லவ் படம் ரிலீஸ் ஆனது. அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்த இப்படம் 39 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் காதலர் தினத்தை ஒட்டி ரிலீஸ் ஆன பூக்கி, மை லார்ட் போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன. இதையடுத்து பிப்ரவரி மாத இறுதியில் வெளிவந்த ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.82 கோடி வசூலை வாரிசுருட்டியது.

47
மார்ச்சில் ஜொலித்த யூத்
Image Credit : Asianet News

மார்ச்சில் ஜொலித்த யூத்

மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் பெரிய பட்ஜெட் படம் ஒன்று கூட ரிலீஸ் ஆகவில்லை. இருந்தாலும் அம்மாதத்தில் ரிலீஸ் ஆன கென் கருணாஸின் யூத் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் தாண்டவமாடியது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.72 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. பின்னர் அம்மாத இறுதியில் ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த ஹாப்பிராஜ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தாலும், வசூலில் வெறும் ரூ.7 கோடி மட்டுமே கலெக்‌ஷன் செய்திருந்தது.

57
ஏப்ரலில் ஜீரோ ஹிட்
Image Credit : Instagram

ஏப்ரலில் ஜீரோ ஹிட்

ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்றாலும் அம்மாதத்திலும் ஏராளமான பெரிய படங்கள் ரிலீஸ் ஆகின. குறிப்பாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆனது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன அப்படம் அட்டர் பிளாப் ஆனது. பின்னர் அந்த மாதத்தின் இறுதியில் தனுஷ் ஹீரோவாக நடித்த கர திரைப்படமும் திரைக்கு வந்தது. அந்த சமயத்தில் மக்கள் அரசியலில் முழு கவனம் செலுத்தியதால் கர படம் வந்த வேகத்தில் தூக்கப்பட்டது.

67
சூர்யா கம்பேக் தந்த மே மாதம்
Image Credit : X

சூர்யா கம்பேக் தந்த மே மாதம்

மே மாதம் தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் சம்பவம் நடந்தது. அம்மாதத்தில் ரிலீஸ் ஆன சூர்யாவின் கருப்பு மற்றும் அர்ஜுனின் பிளாஸ்ட் ஆகிய இரண்டு படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு, அவர்கள் இருவரின் தரமான கம்பேக் படமாக அமைந்தது. இதில் கருப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.310 கோடி வசூலை வாரிசுருட்டி, இந்த ஆண்டின் அதிக வசூல் அள்ளிய தமிழ் படம் என்கிற சாதனையையும் படைத்தது. அதேபோல் அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் சர்ப்ரைஸ் ஹிட் அடித்ததோடு, 75 கோடி வசூலையும் அள்ளியது.

77
ஜூன் மாத நிலவரம் என்ன?
Image Credit : X

ஜூன் மாத நிலவரம் என்ன?

ஜூன் மாத தொடக்கத்தில் பாண்டிராஜ் இயக்கிய பரிமளா அண்ட் கோ திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.14 கோடி வசூலித்து ஹிட் லிஸ்டில் இணைந்தது. இதையடுத்து வந்த ஹபீபீ, டபுள் ஆக்குபன்சி போன்ற படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சோபிக்கவில்லை. பின்னர் ஜூன் மாத இறுதியில் திரைக்கு வந்த விஜய் ஆண்டணியின் நூறு சாமி, சமந்தாவின் எங்கள் தங்கம் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்த கான் சிட்டி ஆகிய படங்கள், நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
சூர்யா
தனுஷ்
பிரதீப் ரங்கநாதன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Peddi Hit or Flop: பெத்தி படம் ஹிட்டா, ஃபிளாப்பா? ராம் சரண் படத்தின் வசூல் ரிப்போர்ட் வெளியானது!
Recommended image2
Siragadikka Aasai : மீண்டும் கடனா? முத்துவுக்கு ஷாக் கொடுத்த மனோஜ் - ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஷ்ரா
Recommended image3
Vijay: முதல்வர் விஜய் மாதிரி ஃபிட் ஆகணுமா? இதோ சிம்பிள் வெயிட் லாஸ் பிளான்!
Related Stories
Recommended image1
Karuppu : OTTக்கு வந்த கருப்பு... தியேட்டரில் வாரிசுருட்டிய வசூல் எத்தனை கோடி தெரியுமா?
Recommended image2
Kara OTT Release : ஓடிடிக்கு வரும் கர... தியேட்டரில் வாரிசுருட்டிய ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved