MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டி.ஆர்.பி-யில் டம்மியான ஐந்து முக்கிய சீரியலை அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி!

டி.ஆர்.பி-யில் டம்மியான ஐந்து முக்கிய சீரியலை அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி!

சன் டிவியில், அதிக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட,  5 முக்கிய சீரியல்களை அடுத்தடுத்து முடித்து விட்டு, புதிய சீரியலை களமிறக்க சன் டிவி முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.  

3 Min read
Author : manimegalai a
| Updated : Sep 25 2024, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
serial TRP

serial TRP

இல்லத்தரசிகள் முதல் இளவட்ட ரசிகர்கள் வரை... சமீப காலமாக சீரியல்களை அதிகம் விரும்பி பார்க்க துவங்கி விட்டனர். சீரியல் மூலம் அதிகமான ரசிகர்களை கவர நினைப்பது சன் டிவி தொலைக்காட்சி தான். குறிப்பாக சன் டிவியில் பல வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான ஏராளமான சீரியல்களின் தாக்கம்... ரசிகர்கள் மத்தியில் இன்று வரை இருந்து கொண்டு தான் உள்ளது. அதிலும் குறிப்பாக ஆனந்தம், மெட்டி ஒலி, கோலங்கள், அண்ணாமலை, தங்கம், எதிர்நீச்சல், ரோஜா போன்ற சீரியல்களின் இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Top TRP Rating Serials

Top TRP Rating Serials

அதே போல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரும்பாலும் 1000 எபிசோடை எட்டாமல் முடிக்கப்படுவது இல்லை. காரணம் ரசிகர்கள் சன் டிவி சீரியல்களுக்கு கொடுத்து வரும் ஆதரவு தான் காரணம். ஆனால் கடந்த சில வருடங்களாக... பல சீரியல்கள் 500 எபிசோடை எட்டியதுமே முடிவுக்கு வரும் நிலை உள்ளது. அதே போல் சன் TRP-யில் டாப் 10 லிஸ்டில், சன் டிவி சீரியல்கள் 7 இடங்களையாவது கைப்பற்றும் நிலையில், சமீப காலமாக விஜய் டிவியில் ஆதிக்கமும் அதிகரித்துள்ளதால், TRP-யில் டல்லடிக்க துவங்கிய சீரியல்களை சட்டுபுட்டுனு முடித்து ஓரம் கட்டிவிட்டு புதிய சீரியல்களை ஒளிபரப்ப சன் டிவி திட்டம் போட்டுள்ளதாம்.

வீட்டை விட்டு துரத்திய மனைவி ஆர்த்தி? ஜெயம் ரவி காவல் நிலையத்தில் கொடுத்த பரபரப்பு புகார்!
 

35

அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், நடிகை அல்யா மானசா மற்றும் ரிஷி நடித்து வரும் 'இனியா' சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்த சீரியல் துவங்கப்பட்ட போது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இப்போது அப்படியே டல் ஆகி விட்டது. எனவே, இன்னும் சில வாரங்களில் இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட சன் டிவி முடிவு செய்துவிட்டது. இதை தொடர்ந்து 'மிஸ்டர் மனைவி' சீரியல் டாப் 10 லிஸ்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதையும் முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாகவும், கிளைமேக்ஸ் சீன் கூடி வராததால், 'மிஸ்டர் மனைவி' சீரியலை முடிவுக்கு கொண்டு வருவதில் சிறு தாமதம் நீடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 2 மாதத்திற்குள் இந்த சீரியலை முடிக்க வேண்டும் என சீரியல் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

45

இந்த சீரியலுக்கு அடுத்த படியாக, சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் 'மலர்' சீரியலுக்கான வரவேற்பும், ரசிகர்கள் மத்தியில் மிகவும் குறைந்து விட்டதால் விரைவில் இன்னும் ஒரே மாதத்தில் கூட இந்த சீரியலும் முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது. அதே போல் சுந்தரி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இந்த சீரியலின் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியலுக்கு... முதல் சீசனுக்கு கிடைத்தது போல் வரவேற்பு கிடைக்காததால், இந்த சீரியல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ளதாம். அதற்க்கு ஏற்றாப்போல் கதைக்களமும் தற்போது நகர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும்போது.. 1 மணிநேரம் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா! ஸ்தம்பித்த ஸ்டூடியோ!
 

55
Aanandha Raagam

Aanandha Raagam

ஆனால் யாருமே சற்றும் எதிர்பார்த்திராத ஒரு சீரியலும் கூடிய விரைவில் முடிவுக்கு வர உள்ளது உங்களுக்கு தெரியுமா?... அது தான் ஆனந்த ராகம் சீரியல். காமெடி, செண்டிமெண்ட், காதல், சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்த, ஜனரஞ்சகமான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்டதில் இருந்தே... இந்த சீரியலின் நேரமும் சரியாக ஒர்க் அவுட் ஆகாமல் போனது. முடிந்த வரை இந்த சீரியலில் இருந்த அணைத்து சஸ்பென்ஸ் ஃபேக்டரும் வெளிக்கொண்டு வர பட்டுவிட்ட நிலையில், சீரியல்  கொஞ்சம் சுவாரஸ்யப்பற்று போனதால்... இந்த சீரியலையும் முடிவுக்கு கொண்டு வந்து விட்டு புதிய சீரியல்களை ஒளிபரப்ப சன் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாம். இதற்க்கு முக்கிய காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட மருமகள், மூன்று முடிச்சு, மற்றும் மல்லி போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெறுவது என்றே கூறப்படுகிறது. 

என்ன தான் புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றாலும், பழைய சீரியல்கள் முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கு சற்று வருத்தமான விஷயம் என்றே கூறலாம்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சீரியல்
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved