MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Puneeth Rajkumar Death: புனீத் ராஜ்குமார் மரண செய்தியை கேட்டு அடுத்தடுத்து பறிபோன 3 ரசிகர்கள் உயிர்!

Puneeth Rajkumar Death: புனீத் ராஜ்குமார் மரண செய்தியை கேட்டு அடுத்தடுத்து பறிபோன 3 ரசிகர்கள் உயிர்!

கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் (Puneeth Rajkumar), நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவத்தை கேள்வி பட்டு அடுத்தடுத்து அவரது தீவிர ரசிகர்கள், மாரடைப்பு மற்றும் தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 30 2021, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

கன்னட திரையுலகின் பவர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் நேற்றைய தினம் வழக்கம் போல் தன்னுடைய வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது, நெஞ்சுவலி காரணமாக கிழே  சுருண்டு விழுந்தார்.

 

28

இதை தொடர்ந்து, மிகவும் ஆபத்தான நிலைமையில் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

 

38

ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார். புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர், திரைத்துறையினர் மற்றும் சினிமா ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

48

மேலும் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனை முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இதற்கிடையே பேங்களூரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை உடனே மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

58

பெங்களூரு கண்டிர்வா மைதனாத்தில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு விடிய விடிய ரசிகர்கள் நேரில் அஞ்சலி வருகின்றனர். மைதானத்தின் வெளியே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.

 

68

இந்நிலையில் இவரது மரண செய்தியை கேள்வி பட்டு அடுத்தடுத்து மூன்று ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் வெளியாகி மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகரான 30 வயதே ஆகும் கர்நாடகாவை சேர்ந்த, முனியப்பன் என்பவர், இவரது மரண செய்தியை கேட்ட துக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

 

78

அதே போல், பெலகாவியில் உள்ள ஷிண்டோல்லி கிராமத்தை சேர்ந்த, புனீத் ராஜ்குமாரின் ரசிகர் ஒருவர்... தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து, அழுது கொண்டே இருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

88

இவர்கள் இருவரை தொடர்ந்து, நடிகர் புனித் ராஜ்குமாரின் மற்றொரு ரசிகரான 21 வயதே ஆகும் ராகுல் புனித் ராஜ்குமார் படத்திற்கு தனது வீட்டில் மரியாதை செலுத்திய பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved