மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த 29 வயது நடிகை மூளைச்சாவு ஏற்பட்டு மரணம் - சோகத்தில் ரசிகர்கள்
கொரிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை பார்க் சூ ரியன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் கொரியாவை சேர்ந்தவர் பார்க் சூ ரியன் (Park soo ryun). கடந்த 1994-ம் ஆண்டு பிறந்த இவர், 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன டெனர் என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து மிஸ்ட்ரி டெஸ்டினி, பைண்டிங், சித்தார்தா என பல்வேறு கொரிய மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக உயர்ந்த பார்க் சூ ரியனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் நடிகை பார்க் சூ ரியன், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஜெஜு தீவிற்கு சென்றிருந்தாராம். அப்போது அங்கு மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் நடிகை பார்க் சூ ரியனுக்கு தலையில் பலத்தை காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்திருக்கிறார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது தான் அவர் மூளைச்சாவு அடைந்தததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... மும்பையில் செட்டில் ஆனது இதுக்குத்தானா! திடீரென இந்தி படத்தில் நடிக்க கமிட்டான சூர்யா- அப்போ வாடிவாசல் நிலைமை?
மூளைச்சாவு அடைந்ததன் காரணமாக நடிகை பார்க் சூ ரியனை இனி காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவரின் பெற்றோர் பார்க் சூ ரியனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்துள்ளனர். மூளைச் சாவு அடைந்த நடிகையின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது பெற்றோர் அறிவித்தது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
புகழ்பெற்ற கொரிய நடிகையான பார்க் சூ ரியன், 29 வயதில் மரணமடைந்து இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு ரசிகர்கள் பலரும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... காசுக்காக இப்படியா பண்ணுவீங்க? ஏ.ஆர்.ரகுமானை வெளுத்துவாங்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?