காசுக்காக இப்படியா பண்ணுவீங்க? ஏ.ஆர்.ரகுமானை வெளுத்துவாங்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?
தி கேரளா ஸ்டோரி என்கிற சர்ச்சைக்குரிய திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுதிப்தோ சென் இயக்க உள்ள புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே மாதம் திரைக்கு வந்த திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி. ரிலீசுக்கு முன்பே கடும் எதிர்ப்புகளை இப்படம் சந்தித்து வந்தது. இதற்கு காரணம், இப்படத்தில் கேரளாவை சேர்ந்த இந்து பெண்களை வேலைக்காக இஸ்லாமிய நாடுகளுக்கு அழைத்து சென்று அங்கு அவர்களை மதமாற்றம் செய்து, பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்துவிடுவது போன்ற சர்ச்சைக்குரிய கதையை படமாக்கியதோடு மட்டுமின்றி இது உண்மை கதை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டாலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. கேரளா ஸ்டோரி படத்தின் வெற்றிக்கு பின்னர் அப்படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென், தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... சக்திமானாக மாறுகிறாரா ரன்வீர் சிங்? பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம் குறித்து மௌனம் கலைத்த முகேஷ் கண்ணா!
அதன்படி அவர் இயக்க உள்ள அடுத்த படத்திற்கு சஹாரா ஸ்ரீ என பெயரிடப்பட்டு உள்ளது. இது ஒரு பயோபிக் படமாகும். சஹாரா இந்தியா பர்வார் நிறுவனத்தை உருவாக்கிய சுப்ரதா ராயின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை எடுக்க உள்ளார் சுதிப்தோ சென். இப்படத்தை லெஜண்ட் ஸ்டூடியோஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. தமிழ், பெங்காலி, மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் போஸ்டரை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த விஷயம் என்னவென்றால், இதற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப்போகிறார் என்பது தான். சர்ச்சை இயக்குனர்களுடன் பணியாற்றுவரை தவிர்க்கும் ஏ.ஆர்.ரகுமான், தி கேரளா ஸ்டோரி பட இயக்குனருடன் எப்படி கூட்டணி அமைத்தார் என்பது தான் ரசிகர்கள் எழுப்பும் கேள்வியாக உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளதோடு, காசுக்காக இப்படியா பண்ணுவீங்க என ஏ.ஆர்.ரகுமானை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தும் வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... உதயநிதி படத்துடன் மோதும் அமீரின் 'உயிர் தமிழுக்கு'!