MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினி முதல் சூர்யா வரை... இன்று கோடிகளில் புரளும் கோலிவுட் ஹீரோக்களின் முதல் சம்பளம் எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

ரஜினி முதல் சூர்யா வரை... இன்று கோடிகளில் புரளும் கோலிவுட் ஹீரோக்களின் முதல் சம்பளம் எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Tamil Actors First Salary : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் முதல் சம்பளம் பற்றி பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Oct 02 2026, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Tamil Actors First Salary
Image Credit : AI Image

Tamil Actors First Salary

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் சம்பளம் 100 கோடி ரூபாயைத் தாண்டி பேசப்படுகிறது. குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், தனுஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் ஒரு படத்திற்காக பெறும் சம்பளம் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் விஜய் தான் அதிகபட்சமாக 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்தார். ஆனால் அவர் தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு சென்றுவிட்டதால், ரஜினிகாந்த் முதலிடத்தில் இருக்கிறார்.

இன்று பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இந்த நட்சத்திரங்கள் தங்களது திரைப்பயணத்தை தொடங்கியபோது பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? சில ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான தொகையில் தொடங்கிய இவர்களின் பயணம், இன்று கோடிகளில் சம்பளம் பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த வகையில், டாப் 6 முன்னணி நடிகர்களின் முதல் பட சம்பளத்தைப் பார்க்கலாம்.

Mohan : பிளாப் ஆக இருந்த மைக் மோகனின் படம்... பட்டி டிங்கரிங் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கிய தியேட்டர் ஓனர்..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ரஜினிகாந்த் முதல் சம்பளம்
Image Credit : Asianet News

ரஜினிகாந்த் முதல் சம்பளம்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக பல ஆண்டுகளாக வலம் வரும் ரஜினிகாந்த், தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். இன்று ஒரு படத்திற்காக பல கோடி ரூபாய் சம்பளம் பெறும் ரஜினிகாந்த், தனது திரைப்பயணத்தை தொடங்கிய காலத்தில் பெற்ற சம்பளம் வெறும் ரூ.250 தானாம். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் கதாநாயகனாக நடித்த ஆரம்பகால படங்களில் ரூ.5,000 வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

37
கமல்ஹாசன் முதல் சம்பளம்
Image Credit : X

கமல்ஹாசன் முதல் சம்பளம்

உலக நாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாகவே திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர். சிறுவயதிலேயே தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய கமல், பின்னர் கதாநாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். தற்போது 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் முன்னணி நடிகரான கமல்ஹாசன், தனது முதல் திரைப்படத்திற்காக பெற்றதாகக் கூறப்படும் சம்பளம் ரூ.500 மட்டுமே. சிறிய தொகையில் தொடங்கிய அவரது திரைப்பயணம் இன்று இந்திய சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.

47
விஜய் முதல் சம்பளம்
Image Credit : Social Media

விஜய் முதல் சம்பளம்

தளபதி விஜய்யும் குழந்தை நட்சத்திரமாகவே திரைத்துறையில் அறிமுகமானவர். ‘வெற்றி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.500 எனக் கூறப்படுகிறது. பின்னர் கதாநாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். விஜய் சினிமாவில் நடித்தபோது ரூ.200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்தார். சினிமாவைத் தொடர்ந்து அரசியல் களத்தில் பயணித்து வரும் விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருக்கிறார்.

57
அஜித்குமார் முதல் சம்பளம்
Image Credit : x

அஜித்குமார் முதல் சம்பளம்

தல அஜித் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமார், எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்தவர். இன்று 120 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் அஜித், தனது ஆரம்பகால திரைப்பயணத்தில் மிகக் குறைந்த சம்பளத்திலேயே நடித்துள்ளார். அவரது முதல் திரைப்படத்திற்காக ரூ.2,500 சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காதல் கதாநாயகனாக தொடங்கிய அவரது பயணம் பின்னர் ஆக்‌ஷன் ஹீரோ, ரேஸ் வீரர் என பல்வேறு பரிமாணங்களை கடந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

67
தனுஷ் முதல் சம்பளம்
Image Credit : X

தனுஷ் முதல் சம்பளம்

நடிகர் தனுஷின் திரைப்பயணமும் மிகவும் வித்தியாசமானது. ஆரம்பத்தில் விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தனது நடிப்பு திறமையால் படிப்படியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமிழ் சினிமாவைத் தாண்டி தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் வரை சென்று தனது தடத்தைப் பதித்து வருகிறார். தற்போது ஒரு படத்திற்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பெறும் தனுஷ், தனது முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்திற்காக சுமார் ரூ.5,000 சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

77
சூர்யாவின் முதல் சம்பளம்
Image Credit : X

சூர்யாவின் முதல் சம்பளம்

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் வந்துள்ளன. இதனால் சூர்யாவின் சம்பளமும் மளமவென உயர்ந்துள்ளது. இன்று இவர் சம்பளம் 100 கோடியை நெருங்கினாலும் இவரின் முதல் சம்பளம் கேட்டால் நிச்சயம் ஆச்சர்யப்படுவீர்கள். இவர் சினிமாவில் நடிக்கும் முன் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்தார். அங்கு இவருக்கு மாதம் 736 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாம்.

Panaiyur : மினி கோடம்பாக்கமாக மாறிய பனையூர்... ஒரே ஏரியாவில் இத்தனை சினிமா பிரபலங்கள் வசிக்கிறார்களா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
அஜித் குமார்
விஜய் (நடிகர்)
சூர்யா
தனுஷ்
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dont Trouble The Trouble Review : ஃபகத் ஃபாசிலின் மேஜிக் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? டோண்ட் டிரபிள் த டிரபிள் விமர்சனம்
Recommended image2
Anbil Avan Review : அசோக் செல்வனின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? அன்பில் அவன் விமர்சனம்
Recommended image3
Sivaji : நண்பனுக்காக சம்பளம் வாங்காம நடித்த சிவாஜி... தயாரிப்பாளர் கொடுத்த டிபன் கேரியரில் நடிகர் திலகத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி
Related Stories
Recommended image1
DMK : மதுராந்தகம் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் பேச்சு... உடனடியாக திமுக-வில் இருந்து வந்த பதிலடி
Recommended image2
Jailer 2 : ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்ததா விஜய் அரசு? புயலை கிளப்பிய Jailer 2 Rave அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved