- Home
- Cinema
- 1947 ஆகஸ்ட் 16 முதல் புர்கா வரை... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன? முழு விவரம்
1947 ஆகஸ்ட் 16 முதல் புர்கா வரை... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன? முழு விவரம்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை வருகிற ஏப்ரல் 7-ந் தேதி அரை டஜன் படங்கள் தியேட்டரில் ரிலீசாக உள்ள நிலையில் அதன் முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தியேட்டரில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவில் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி கருங்காப்பியம், 1947 ஆகஸ்ட் 16, எவன், இது கதையல்ல நிஜம், ரேசர், தலைக்கவசமும் 4 நண்பர்களும், முந்திரிக்காடு, மாவீரன் பிள்ளை, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் என கிட்டத்தட்ட 8 படங்கள் ரிலீசாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சிறு பட்ஜெட் படங்கள்.
1947 ஆகஸ்ட் 16
ஏப்ரல் 7-ந் தேதி ரிலீஸாகும் படங்களில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றால் அது 1947 ஆகஸ்ட் 16 திரைப்படம் தான். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார். இப்படத்தை என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் கவுதம் கார்த்திக், புகழ், ரேவதி ஷர்மா உள்பட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
கருங்காப்பியம்
காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் கருங்காப்பியம் திரைப்படமும் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. கார்த்திகேயன் இயக்கி உள்ள இப்படத்தில் ரெஜினா, ரைசா வில்சன், ஜனனி, கலையரசன், கருணாகரன், ஷாரா, ஜான் விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... காதலில் தோல்வி... சினிமாவில் வெற்றி! திருமணம் நின்றுபோன பின் தலைகீழாக மாறிய ராஷ்மிகாவின் வாழ்க்கை
ஓடிடியில் ரிலீசாகும் தமிழ் படங்கள்
ஏப்ரல் 7-ந் தேதி சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் புர்கா எனும் திரைப்படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது, மேலும் பிரஜன் நடித்த என்4 திரைப்படமும் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஓடிடியில் ரிலீசாகும் மற்ற மொழி படங்கள்
மலையாளத்தில் பிரனய விலாசம் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்திலும், ரோமாஞ்சம் ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் ரிலீஸ் ஆக உள்ளது. தெலுங்கில் அசாலு என்கிற திரைப்படம் இடிவி வின் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர காஸ்மோஸ், பீஃப் ஆகிய ஆங்கிலத் திரைப்படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன.
இதையும் படியுங்கள்... சீதா மகாலட்சுமியா இது... டூபீஸில் டூமச் கிளாமர் காட்டி ரசிகர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்ட மிருணாள் தாக்கூர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.