10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து இசை நிகழ்ச்சி அறிவிப்பு! 'மலேஷியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸில்' பதிவு!
ஏ.ஆர்.ரகுமான் அடுத்த ஆண்டு மலேசியாவில் நடத்த உள்ள இசை நிகழ்ச்சியை 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்தபடி அறிவிக்கப்பட்ட நிலையில், அது சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
தென்னிந்திய மொழி படங்களுக்கு பிசியாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இசை பணிகளை மேற்கொண்டு வந்தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு மலேஷியாவின், கோலாலம்பூரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை அடுத்த ஆண்டு நடத்த உள்ளார்.
டிஎம்ஒய் கிரியேசன் என்ற நிறுவனம் மூலம் இந்த நிகழ்ச்சி வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மலேசியாவில்... ஏ.ஆர்.ரகுமானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளதால் இப்போதே அதற்கான ஆயத்த பணிகள், மற்றும் புரோமோஷன் பணிகளை அந்த குழுவினர் துவங்கி விட்டனர்.
மேலும் செய்திகள்: ஏ.ஆர்.ரகுமான் தங்கையை திருமணம் செய்து விரட்டியவர் பிஸ்மி.! நடிகையால் வந்த பிரச்சனை வெளுத்து வாங்கிய பயில்வான்!
எனவே இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில், சுமார் 10000 அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து வெளியிட்டனர். இதுபோன்று மிகவும் பிரமாண்ட முறையில் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை.
எனவே இந்த சாதனை 'மலேஷியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்' அதிக உயரத்தில் இருந்து குதித்து அறிவிக்கப்பட்ட இசைநிகழ்ச்சி என்கிற சாதனையை தன்னுடைய சாதனையாக புத்தகத்தில் பதிவு செய்துள்ளது.
மேலும் செய்திகள்: எந்த உடை போட்டாலும் சும்மா அள்ளுதே... நீல நிற palazzo-வில் வெரைட்டி போஸ் கொடுத்து மயக்கும் ராஷ்மிகா!