- Home
- Cinema
- அட்ராசக்க... ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸ்- கிறிஸ்துமஸ் விடுமுறையில் சினிமா ரசிகர்களுக்கு செம டிரீட் வெயிட்டிங்
அட்ராசக்க... ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸ்- கிறிஸ்துமஸ் விடுமுறையில் சினிமா ரசிகர்களுக்கு செம டிரீட் வெயிட்டிங்
Christmas release movies : சினிமாவில் பொதுவாகவே விடுமுறை நாட்களை டார்கெட் செய்து தான் திரைப்படங்கள் வெளியிடப்படும். அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்கள் என்றால் அதிகளவில் படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழில் மொத்தம் 10 படங்கள் வெளியாக உள்ளன. இதில் தியேட்டரில் 7 படங்களும், ஓடிடி-யில் 3 படங்களும் வெளியிடப்பட உள்ளன. அதன் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

1. கலாட்டா கல்யாணம் (Galatta Kalyaanam)
தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் கலாட்டா கல்யாணம். இப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி உள்ளார். மேலும் சாரா அலிகான், அக்ஷய் குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தியில் ‘அத்ரங்கி ரே’ என்ற பெயரில் உருவாகி உள்ள இப்படத்தை தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இப்படம் வருகிற டிசம்பர் 24-ந் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
2. ராக்கி (Rocky)
புதுமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் ராக்கி. தரமணி பட ஹீரோ வஸந்த ரவி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் வெளியிடுகின்றனர். இப்படம் டிசம்பர் 24ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
3. 83
கபீர் கான் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 83. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கடந்த 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற நிகழ்வை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் ஜீவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 24-ந் தேதி திரை காண உள்ளது.
4. ஆனந்தம் விளையாடும் வீடு (Anandam Vilayadum Veedu)
சேரன், சரவணன், கவுதம் கார்த்திக், டேனியல் பாலாஜி, சினேகன், சிவாத்மிகா, சிங்கம்புலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இப்படத்தை இயக்கி உள்ளார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் வருகிற டிசம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
5. ஷியாம் சிங்கா ராய் (Shyam Singha Roy)
வரலாற்று கதையம்சத்துடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் ஷியாம் சிங்கா ராய். ராகுல் சங்ரித்யன் இயக்கியுள்ள இப்படத்தில் நானி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 24-ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
6. தள்ளிப் போகாதே (Thalli Pogathey)
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள படம் தள்ளிப் போகாதே. ரொமாண்டிக் படமாக தயாராகி உள்ள இதில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரேமம் பட நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
7. ரைட்டர் (Writer)
பிரபல இயக்குனர் பார்.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ரைட்டர். இப்படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிராங்கிளின் இயக்கி உள்ளார். கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்க நடிகைகள் இனியா, மகேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 24-ந் தேதி திரை காண உள்ளது.
8. மின்னல் முரளி (Minnal Murali)
பேசில் ஜோசப் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மின்னல் முரளி. மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டோவினோ தாமஸ் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் இப்படம் தயாராகி உள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 24-ந் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
9. மேட்ரிக்ஸ் (The Matrix Resurrections)
ஹாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக தயாராகி உள்ள படம் மேட்ரிக்ஸ். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹீரோயினாக நடித்துள்ளார். ஆங்கிலத்தில் உருவாகி உள்ள இப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர். டிசம்பர் 22-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
10. பிளட் மனி (Blood Money)
சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பிளட் மனி. இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரில்லர் கதையம்சத்தில் தயாராகி உள்ள இப்படத்தில் கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 24-ந் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.