- Home
- Career
- TN Govt Training: சுயதொழில் தொடங்க செம சான்ஸ்.! தமிழக அரசு வழங்கும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி?! எங்கு, எப்போது, யாருக்கு தெரியுமா?
TN Govt Training: சுயதொழில் தொடங்க செம சான்ஸ்.! தமிழக அரசு வழங்கும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி?! எங்கு, எப்போது, யாருக்கு தெரியுமா?
தமிழக அரசு, சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக சிறுதானிய பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சியை வழங்குகிறது. சென்னையில் நடைபெறும் இந்த 3 நாள் முகாமில் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

தினை பேக்கரி பொருட்கள் தயாரிக்க அரசு வழங்கும் பயிற்சி
தமிழக அரசு இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிறுதானியங்களை (மில்லெட்) கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கான மூன்று நாள் இலவச சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி 2025 நவம்பர் 25 முதல் 27 வரை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) வளாகத்தில் நடைபெறுகிறது.
சுயதொழில் தொடங்க சிறந்த வாய்ப்பு!
இந்த பயிற்சியில், உடல்நலத்திற்கு நன்மை தரும் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கக்கூடிய பல்வேறு பேக்கரி வகைகள் குறித்து கற்றுக்கொடுக்கப்படும். இதில் கோதுமை வெண்ணெய் பிஸ்கட், ராகி நட்ஸ் குக்கீ, கம்பு நெய் பிஸ்கட், கருப்பு கவுனி பாதாம் குக்கீ போன்ற பிஸ்கட் வகைகள், ராகி சாக்லேட் கேக், தினை வாழை கேக், சோளம் கேரட் கேக், மல்டிமில்லெட் ரொட்டி, பால் ரொட்டி போன்ற கேக் மற்றும் ரொட்டி வகைகள் அடங்கும். செய்முறை விளக்கத்தோடு, அரசு மானியங்கள், கடன் உதவிகள், தொழில் தொடங்கும் வழிமுறைகள் பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்படும்.
யார் பங்கேற்கலாம்?
18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம். சுயதொழில் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. வெளி மாவட்டத்திலிருந்து வருபவர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை
பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். இதற்காக www.editn.in இணையதளத்தைப் பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு 8668102600 அல்லது 9943685468 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
வெற்றியின் சுவையான தொடக்கம்
சுயதொழில் கனவுடன் வாழ்வை முன்னேற்ற விரும்புவோருக்கு, இந்த அரசு பேக்கரி பயிற்சி சிறுதானிய வெற்றியின் சுவையான தொடக்கம்!