- Home
- Career
- Drone Training: 10ஆம் வகுப்பு முடித்தவரா? தமிழக அரசின் ட்ரோன் பயிற்சி.. அட்டகாசமான வாய்ப்பு.!
Drone Training: 10ஆம் வகுப்பு முடித்தவரா? தமிழக அரசின் ட்ரோன் பயிற்சி.. அட்டகாசமான வாய்ப்பு.!
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் நவம்பர் 18 முதல் 20 வரை “மீடியா ட்ரோன் பயிற்சி” நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் ட்ரோன் தொழில்நுட்பம், சினிமாடோகிராஃபி போன்றவை கற்பிக்கப்பட்டு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

எதிர்காலத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.!
திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் விளம்பரத் துறைகளில் ட்ரோன் பயன்பாடு இன்று மிக முக்கியமானதாக மாறியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நவம்பர் 18 முதல் 20 வரை சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் “மீடியா ட்ரோன் பயிற்சி” நடைபெற உள்ளது.
காத்திருக்கு புதிய வேலைவாய்ப்பு.!
இந்த மூன்று நாள் பயிற்சியில் ட்ரோன் தொழில்நுட்பம், ஏரியல் போட்டோகிராஃபி, FPV சினிமாடோகிராஃபி, DGCA விதிமுறைகள், மற்றும் விமான பாதுகாப்பு நுட்பங்கள் ஆகியவை விரிவாக கற்பிக்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரம், மார்க்கெட்டிங், கார்பரேட் வீடியோ, யூடியூப், காவல் கண்காணிப்பு, சுற்றுலா, ரியல் எஸ்டேட், தொழிற்துறை, காடு மற்றும் விலங்கியல் புகைப்படம், தீயணைப்பு மீட்புப் பணிகள் போன்ற துறைகளில் ட்ரோன் பைலட்டாக வேலை வாய்ப்பைப் பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை
மேலும், பயிற்சியில் பங்கேற்கும் நபர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவித்திட்டங்கள், கடனுதவி போன்ற விவரங்களும் எடுத்துரைக்கப்படும்.
தகுதி: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணினி அறிவு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.editn.in இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் அல்லது 9360221280 / 9840114680 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். பயிற்சியை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
முகவரி: தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600032.