கொத்தாக 15ஆயிரம் வேலைவாய்ப்பு.! இன்டர்வியூக்கு வந்தாலே ஜாக்பாட் தான்- சூப்பர் அறிவிப்பு
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. சேலத்தில் 10,000+ காலிப்பணியிடங்களுக்கும், திருவாரூரில் 5,000+ காலிப்பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு
தமிழகத்தில் வேலை இல்லாமல் யாரும் தவிக்க கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பணிக்காக இரவு பகலாக படிப்பவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வுகள் நடத்தி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. சொந்த தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்காக பயிற்சி வழங்கி கடன் உதவிக்காக வழிகாட்டவும் செய்யப்படுகிறது.
வெளிநாட்டில் சென்று கை நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வழங்கி வழிகாட்டவும் செய்கிறது. இந்த நிலையில் நல்ல சம்பளத்தில் சொந்த ஊரில் வேலை வாங்க செய்யப்படும் நபர்களுக்காக அந்த அந்த மாவடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
இந்த நிலையில் நாளை சனிக்கிழமை பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு நடைப்பெறுகிறது. அந்த வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இணைந்து சேலம் மாவட்டத்தில் 09.08.2025, சனிக்கிழமை காலை 08.00 முதல் மாலை 03,30 வரை மகேந்திரா பொறியியல் கல்லூரி, மின்னாம்பள்ளி, சேலம் மாவட்டம் வளாகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
10000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு இளைஞர்கள் (ஆண்கள் / பெண்கள்) தேர்வு செய்யப்பட உள்ளனர்
சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
இலவச திறன் பயிற்சிக்கான பதிவுகள் மேற்கொள்ளுதல்
கல்வித்தகுதிகள்
8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல், போன்ற கல்வித் தகுதிகள்
மேலும் விவரங்களுக்கு
* துணை இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சேலம்
0427-2401750, 99437 10025, 97888 80929
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணும் இல்லை, அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
இதே போல திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து திருவாரூர் மாவட்டத்தில் 09,08,2025 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மன்னை இராஜகோபால சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருமக்கோட்டை சாலை, மன்னார்குடியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
100 க்கும் மேற்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
5000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
அயல்நாட்டில் வேலைவாய்ப்புப் பெறப் பதிவு
வழிகாட்டுதல்
TNSDC / DDU-GKY-ல் இலவச திறன் மேம்பாட்டு
பயிற்சிக்கான பதிவுகள்
ஒன்றிய/மாநில அரசுகளின் பணிவாய்ப்புப் பெற வழிகாட்டுதல்கள்
கல்வித்தகுதிகள்
8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை /ஐ.டி.ஐ,/டிப்ளமோ/நர்சிங்/பொறியியல்
அனுமதி இலவசம்
மேலும் விவரங்களுக்கு
*மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் திருவாரூர்.
தொலைபேசி: 04366-224 226
https://www.tnprivatejobs.tn.gov.in இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.