மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கொண்டாட்டம்! அட! டிக்கெட் கட்டணம் இவ்வளவு தள்ளுபடியா!
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டண தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Chennai Metro Train Fare 50% Discount
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைந்துள்ளன. சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பூந்தமல்லி–போரூர் வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு பரங்கிமலை வழியாக விமான நிலையம் வரையிலும், விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண தள்ளுபடி
மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி அறிவித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், UBER மற்றும் ONDC நெட்வொர்க் உடன் இணைந்து, UBER செயலி மூலம் மெட்ரோ இரயில் பயணத்திற்கான பயணச்சீட்டு பெரும் வசதியை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் இன்று (07.08.2025) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் அறிமுகப்படுத்தினார்.
யார்? யார்? இந்த சலுகையை பெறலாம்
இன்று முதல், சென்னையில் உள்ள UBER பயனாளர்கள், தங்களது மெட்ரோ பயணங்களை திட்டமிடவும். QR அடிப்படையிலான பயணச்சீட்டுகளை பெறவும், நேரடி மெட்ரோ பயண தகவல்களையும் UBER செயலியில் தெரிந்துக்கொள்ளலாம். இதன் அறிமுக சலுகையாக 2025-ல் ஆகஸ்ட் மாதம் முழுவதும் UBER செயலியை பயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகள் பயணச்சீட்டுகளில் 50% தள்ளுபடியை பெறலாம்.
இந்த சலுகை UBER வழங்கும் பிற மெட்ரோ பயணச்சீட்டு சேவை தளங்களில் பொருந்தாது. UBER செயலியை பயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டு பெறுவதற்கு UPI முறையே பயன்படுத்தப்படும். இது டிஜிட்டல் பயன்பாட்டை மேம்படுத்துகிறது.
20% கட்டண தள்ளுபடி யாருக்கு?
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) L, Whatsapp (+91 83000 86000), Paytm App, PhonePe v A சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது' என்று கூறப்பட்டுள்ளது.