- Home
- Career
- 8th Pay Commission: 35 லட்சம் ஊழியர்களின் சம்பளம் உயருமா? 8வது ஊதியக் குழுவின் சென்னை மீட்டிங் லேட்டஸ்ட் அப்டேட்!
8th Pay Commission: 35 லட்சம் ஊழியர்களின் சம்பளம் உயருமா? 8வது ஊதியக் குழுவின் சென்னை மீட்டிங் லேட்டஸ்ட் அப்டேட்!
8வது ஊதியக் குழு லேட்டஸ்ட் அப்டேட்: 35.77 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து முக்கியத் தகவல். சென்னையில் கமிஷன் கூட்டம். சம்பளம், படிகள், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? லேட்டஸ்ட் நியூஸ் இதோ.

8வது ஊதியக் குழு பற்றி பெரிய அப்டேட்!
கமிஷன் இப்போது அறிக்கை சமர்ப்பிக்குமா?
இல்லை. 8வது ஊதியக் குழு இன்னும் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கவில்லை என்று அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த கமிஷன் நவம்பர் 3, 2025 அன்று அமைக்கப்பட்டது. பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், கமிஷன் இடைக்கால அறிக்கையையும் வழங்கலாம். இதையும் படித்து பாருங்களேன்- ரூ.58,000 பென்ஷன் யாருக்கு?! அடிப்படை சம்பளம் இவ்ளோ உயருமா?!
35.77 லட்சம் ஊழியர்களின் சம்பள முடிவு!
இந்த கமிஷனின் பரிந்துரைகள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நேரடியாகப் பாதிக்கும். மார்ச் 1, 2026 நிலவரப்படி, சுமார் 35.77 லட்சம் மத்திய அரசு சிவில் ஊழியர்கள் இருந்ததாக அரசு தரவுகள் கூறுகின்றன. அவர்களின் சம்பளக் கட்டமைப்பு, படிகள் மற்றும் பல்வேறு வேலை நிபந்தனைகளை இந்த கமிஷன் ஆய்வு செய்யும். இதையும் படித்து பாருங்களேன்- 8th Pay Commission: AICPI-IW குறியீடு உயர்வு! ஜனவரி 2027-ல் அகவிலைப்படி 66-67% ஆகலாம்!
ஓய்வூதியதாரர்களுக்கும் முக்கியம்!
பணியில் இருக்கும் ஊழியர்கள் மட்டுமல்ல, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியமும் இந்த கமிஷனின் கீழ் வருகிறது. பாதுகாப்புத் துறை ஓய்வூதியதாரர்களைத் தவிர, டிசம்பர் 31, 2025 நிலவரப்படி நாட்டில் சுமார் 33.76 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இதையும் படித்து பாருங்களேன்- DA Hike: அகவிலைப்படி அதிரடி உயர்வு! 54,000 பேர் செம ஹேப்பி! யாருக்கு, எவ்ளோ தெரியுமா?
சம்பளம் எவ்வளவு உயரும்?
8வது ஊதியக் குழுவைச் சுற்றியுள்ள மிகப்பெரிய கேள்வி - சம்பளம் எவ்வளவு உயரும்? என்பதுதான். ஆனால், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ ஃபிட்மென்ட் ஃபாக்டரோ அல்லது இறுதி சம்பள உயர்வுக்கான கணக்கீடோ அறிவிக்கப்படவில்லை. எனவே, தற்போதைய எந்தவொரு சம்பள உயர்வு கணக்கீட்டையும் இறுதியானதாகக் கருதுவது சரியாக இருக்காது. இதையும் படித்து பாருங்களேன்-DA Hike: 8வது சம்பள கமிஷனுக்கு முன்பே அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! அகவிலைப்படி 67% வரை உயரலாம்.!
சம்பளம் மட்டுமல்ல, படிகளும் மாறலாம்
கமிஷனின் பணி அடிப்படை சம்பளத்தை மாற்றுவதில் மட்டும் நின்றுவிடாது. சம்பளக் கட்டமைப்பு, பல்வேறு படிகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் வேலை நிபந்தனைகள் என அனைத்தும் ஆய்வுக்கு உட்பட்டவை. இந்த செயல்பாட்டில் ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கருத்துக்களும் முக்கியமானவை. இதையும் படித்து பாருங்களேன்- அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்? பென்ஷன் ரூ.57,000 வரை உயருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன?
சென்னையைத் தொடர்ந்து எங்கே?
சென்னை மற்றும் புதுச்சேரிக்குப் பிறகு, கமிஷனின் நாடு தழுவிய ஆலோசனைக் கூட்டம் தொடரும். ஊழியர் சங்கங்கள், சேவை சங்கங்கள், ஓய்வூதியர் அமைப்புகள், பாதுகாப்பு மற்றும் ரயில்வே பிரதிநிதிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் கேட்கப்பட்டு வருகின்றன. இதையும் படித்து பாருங்களேன்-Samosa History: சமோசா இந்திய உணவு இல்லையாம்! இதன் ஆச்சரிய வரலாறு இதோ.!
இறுதிப் பரிந்துரை எப்போது கிடைக்கும்?
கமிஷன் அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் பரிந்துரைகளை வழங்க காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2027ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இது அமலுக்கு வரும் தேதியை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. எனவே, ஊழியர்களின் முழு கவனமும் கமிஷனின் அடுத்தகட்ட கூட்டங்கள் மற்றும் பரிந்துரைகள் மீதே உள்ளது. இதையும் படித்து பாருங்களேன்- Govt Scheme: அரசு வழங்கும் சொந்த வீடு.! யார் யாருக்கு கிடைக்கும்? எப்படி பெறுவது?

