Govt job : தேர்வு எழுதாமலே அரசு வேலை..10-ம் வகுப்பு போதும்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
India Post GDS Recruitment 2026 : அஞ்சல் துறையில் காலி பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, முக்கிய தேதிகள், சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

தேர்வு எழுதாமலே அரசு வேலை?
மத்திய அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் 23,757 காலிப்பணியிடங்களும், தமிழ்நாட்டில் மட்டும் 2,118 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இந்த வேலைவாய்ப்பிற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? சம்பளம் எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
பணிகள் மற்றும் காலியிடங்கள்
இந்த ஆட்சேர்ப்பில் முக்கியமாக,
- கிளை அஞ்சல் அலுவலர் (Branch Postmaster – BPM)
- உதவி கிளை அஞ்சல் அலுவலர் (Assistant Branch Postmaster – ABPM)
- Gramin Dak Sevak (GDS) ஆகிய பதவிகளில் உள்ள 23,757 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 23,757 காலியிடங்கள்
தமிழ்நாடு காலியிடங்கள்: 2,118 பணியிடங்கள்
கல்வித்தகுதி
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பணிகளுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
2026 ஜனவரி 1-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு, குறைந்தபட்சம் 18 வயது முதல், அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி SC, ST, OBC உள்ளிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.
முக்கிய தேதிகள்
- OTR (Time Registration Registration) பதிவு: ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 19, மாலை 5 மணி வரை.
- ஆன்லைன் விண்ணப்பம்: செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 21, மாலை 5 மணி வரை.
- திருத்தம் செய்யும் வாய்ப்பு: செப்டம்பர் 23 முதல் 24 மாலை 5 மணி வரை
முக்கியமாக, முந்தைய GDS ஆட்சேர்ப்பில் பெற்ற Registration Number இந்த முறைக்கு செல்லாது. புதியதாக பதிவு செய்ய வேண்டும் என அஞ்சல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்வு எப்படி?
இந்த GDS ஆட்சேர்ப்பில் வழக்கமான எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு இல்லாமல், 10-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்
GDS பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்படும்
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் https://indiapostgdsonline.gov.in/ அதிகாரப்பூர்வ India Post GDS தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
இதில், SC/ST/PWD/Female Candidates/Transwomen விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 விண்னப்ப கட்டண்ம செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

