- Home
- Career
- TNPSC Hall Ticket : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வர்கள் உடனே செய்ய வேண்டியது என்ன?
TNPSC Hall Ticket : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வர்கள் உடனே செய்ய வேண்டியது என்ன?
TNPSC Group Exam : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு வரும் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியீடு
அரசு வேலைக்காகத் தீவிரமாகத் தயாராகி வரும் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை எப்போது பதிவிறக்கம் செய்யலாம், தேர்வு தேதி என்ன, ஹால் டிக்கெட்டில் என்னென்ன விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்? உள்ளிட்ட குரூப் 2 தேர்வுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்களைப் பார்ப்போம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் 2026
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அதிகாரப்பூர்வத் தேர்வு இணையதளத்தில், 2026ஆம் ஆண்டுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு தேதி - நவம்பர் 1, 2026 ஞாயிற்றுக்கிழமை
தேர்வு நேரம் - காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
எத்தனை மாவட்டம் - தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெறவுள்ளது.
பணியிடங்கள்: உதவி ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-II, சிறை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
டிஎன்பிஎஸ்சி
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட்டில் என்னென்ன விவரங்களைச் சரிபார்க்க வேண்டும்?
ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ததும் கீழ்க்கண்ட விவரங்களைத் தவறாமல் சரிபார்க்க வேண்டும்
- விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் விண்ணப்ப எண்
- புகைப்படம் மற்றும் அடையாள விவரங்கள்
- தேர்வின் பெயர் மற்றும் அறிவிப்பு எண்
- தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்
- தேர்வு மையத்தின் பெயர் மற்றும் முழு முகவரி
- தேர்வு மையத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் மற்றும் வழிகாட்டுதல்கள்.
உதவி எண்
விவரங்களில் தவறு இருந்தாலோ, புகைப்படம் தெளிவாக இல்லாவிட்டாலோ தேர்வுக்கு முன்பே டிஎன்பிஎஸ்சி உதவி மையத்தைத் தொடர்புகொண்டு விளக்கம் பெற வேண்டும்.
உதவி எண்
ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டால், டிஎன்பிஎஸ்சி தேர்வு உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 419 0958
மின்னஞ்சல்: helpdesk@tnpscexams.in

