- Home
- Career
- Sports Quota Recruitment : 10th, 12th, டிகிரி முடித்த விளையாட்டு வீரர்களே! வருமான வரித்துறையில் வேலை.. நவம்பர் 10 கடைசி தேதி
Sports Quota Recruitment : 10th, 12th, டிகிரி முடித்த விளையாட்டு வீரர்களே! வருமான வரித்துறையில் வேலை.. நவம்பர் 10 கடைசி தேதி
Sports Quota Recruitment : 10th, 12th, டிகிரி முடித்த விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் அரசு வேலைவாய்ப்புகள். பணிகளுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ளுங்கள்.

வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2026
பத்தாம் வகுப்பு முடித்துவிட்டீர்களா? 12ஆம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு டிகிரி படித்து அரசு வேலைக்காகக் காத்திருக்கிறீர்களா? அப்படியானால், வருமான வரித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது! குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை, கல்வித் தகுதிக்கு ஏற்ப வெவ்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்புகள் உள்ளன.
மத்திய அரசின் வருமான வரித்துறையில், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பிரிவின் கீழ் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (Multi-Tasking Staff -MTS), சுருக்கெழுத்தாளர் (Stenographer), வரி உதவியாளர் (Tax Assistant) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எந்தப் படிப்புக்கு என்ன வேலை? வயது வரம்பு என்ன? சம்பளம் எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? ஒவ்வொரு விவரத்தையும் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
காலிப்பணியிடங்கள்
வருமான வரித்துறையின் 2026ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பில், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) பணிக்கு 66 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சுருக்கெழுத்தாளர் கிரேடு-II பணிக்கு 9 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல், வரி உதவியாளர் (Tax Assistant) பணிக்கு 44 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இவ்வாறு மொத்தம் 119 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள் டெல்லி மண்டலத்தின் விளையாட்டு ஒதுக்கீட்டு ஆட்சேர்ப்பைச் சேர்ந்தவை என்பதால், விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதி நிபந்தனைகளைச் சரிபார்க்க வேண்டும்.
கல்வித்தகுதி
10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு - MTS
பணியின் பெயர்: Multi-Tasking Staff (MTS).
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு: பொதுவாக இந்த ஆட்சேர்ப்பில் 18 -25 வயது.
பணியின் தன்மை: அலுவலக உதவிப் பணிகள், கோப்புகளை எடுத்துச் செல்லுதல், ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகள்.
சம்பளம்: தொடக்க அடிப்படை ஊதியம் மாதம் ரூ.18,000 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பொருந்தக்கூடிய அரசு அலவன்ஸ்களும் கிடைக்கலாம்.
12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு - சுருக்கெழுத்தாளர் (Stenographer)
பணியின் பெயர்: Stenographer Grade-II.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு: பொதுவாக 18–27 வயது
பணியின் தன்மை: அதிகாரிகளின் பேச்சைக் குறிப்பெடுத்தல், கடிதங்கள் மற்றும் அலுவலக ஆவணங்களைத் தயாரித்தல், தட்டச்சுப் பணிகள்.
கூடுதல் திறன்: சுருக்கெழுத்து (Shorthand), தட்டச்சுத் திறன் மற்றும் தேவையான திறனறித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ஊதியம் மாதம் ரூ.25,500.
ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களுக்கு - வரி உதவியாளர் (Tax Assistant)
பணியின் பெயர்: Tax Assistant.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
வயது வரம்பு: பொதுவாக 18–27 வயது.
பணியின் தன்மை: வருமான வரி தொடர்பான பதிவுகளைப் பராமரித்தல், தரவுகளை உள்ளீடு செய்தல், கணினி வழிப் பணிகள் மற்றும் அலுவலக ஆவணங்களைச் சரிபார்த்தல்.
கூடுதல் திறன்: கணினித் திறன் மற்றும் தேவையான தட்டச்சுத் திறன் சோதனை இருக்கலாம்.
சம்பளம்: தொடக்க அடிப்படை ஊதியம் மாதம் ரூ.25,500. டுதல் அலவன்ஸ்கள் பொருந்தும்.
விளையாட்டு வீரர்களுக்கான தகுதிகள் (Sports Eligibility)
இந்த ஆட்சேர்ப்பு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறுவதால், கல்வித்தகுதி மட்டுமே போதாது. சம்பந்தப்பட்ட விளையாட்டில் தேவையான அளவிலான சாதனைகளைப் பெற்றிருப்பதும், அவற்றுக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதும் முக்கியம்.
விண்ணப்பதாரர்கள் 01.01.2020 முதல் 15.10.2026 வரை பெற்ற விளையாட்டுச் சாதனைகள், செயல்திறன், வயது மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் பரிசீலிக்கப்படுவார்கள்.
முன்னுரிமை பெறக்கூடிய விளையாட்டுச் சாதனைகள்
சர்வதேசப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் மாநிலம் சார்பில் பங்கேற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவர்கள்,பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகள், கேலோ இந்தியா மற்றும் தேசியப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கிடைக்கலாம்.
இதுதவிர, இந்தப் போட்டிகளில் பங்கேற்ற மற்ற தகுதியான வீரர்களின் விண்ணப்பங்களும் அறிவிப்பில் உள்ள விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்படலாம். குறிப்பாக, சீனியர் தேசியப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.
தேர்வு செயல்முறை
- குறிப்பிட்ட ஆட்சேர்ப்பில், கல்வித் தகுதி மற்றும் விளையாட்டுச் சாதனைகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்படும்.
- விண்ணப்ப விவரங்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டுச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
- விளையாட்டுச் சாதனைச் சான்றிதழ்கள் மதிப்பீடு செய்யப்படும்.
- பணியைப் பொறுத்து திறனறித் தேர்வு அல்லது பிற சரிபார்ப்புகள் இருக்கலாம்.
- ஆவணச் சரிபார்ப்பு மற்றும் தேவையான பிற நடைமுறைகள் முடிந்த பிறகு இறுதித் தேர்வு நடைபெறும்.
முக்கியத் தேதிகள்
விண்ணப்பம் தொடக்கம் - 17 அக்டோபர் 2026
விண்ணப்பிக்கக் கடைசி நாள் - 10 நவம்பர் 2026
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
எப்படி விண்ணப்பிப்பது?
வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், டெல்லி வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான Income Tax Department Delhi விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்
- அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம்.
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை மட்டுமே நம்புங்கள்.
- விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, சம்பளம் போன்ற விவரங்களைச் சரிபார்க்காமல் தனியார் வேலைவாய்ப்பு இணையதளங்களை மட்டும் நம்பி விண்ணப்பிக்க வேண்டாம்.
- போலி நியமனக் கடிதங்கள் மற்றும் போலியான இணையதளங்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

