MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • No Footwear Village : செருப்பே அணியாத அதிசய கிராமம்..தமிழ்நாட்டில் இப்படி ஒரு பாரம்பரியமா?

No Footwear Village : செருப்பே அணியாத அதிசய கிராமம்..தமிழ்நாட்டில் இப்படி ஒரு பாரம்பரியமா?

No Footwear Village : தமிழ்நாட்டின் வெள்ளகவி கிராமத்தில் மக்கள் ஏன் செருப்பு அணிவதில்லை? கொடைக்கானல் அருகே உள்ள இந்த மலைக்கிராமத்தின் மத நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Oct 19 2026, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
: செருப்பே அணியாத அதிசய கிராமம்
Image Credit : Gemini ai

: செருப்பே அணியாத அதிசய கிராமம்

நாம் வெளியே செல்லும்போது அணிவதற்கு ஒரு செருப்பு, அலுவலகத்துக்குச் செல்ல ஒரு செருப்பு, பண்டிகைகளுக்கு ஒரு செருப்பு என விதவிதமாகக் காலணிகளை வாங்கி அணிகிறோம். ஆடையின் நிறத்துக்கும் ஸ்டைலுக்கும் ஏற்ற செருப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகிறோம்.

ஆனால், ஒரு கிராமத்திற்குள் நுழையும்போது செருப்பைக் கழற்றிவிட்டு, ஊர் எல்லையைத் தாண்டும் வரை வெறும் கால்களுடனேயே நடக்கும் மக்கள் இன்றும் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

கொளுத்தும் வெயிலாக இருந்தாலும் சரி, கரடுமுரடான பாதையாக இருந்தாலும் சரி தங்கள் ஊருக்குள் காலணி அணியாமல் நடப்பதை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடைப்பிடித்து வரும் இரண்டு தனித்துவமான கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. ஒன்று கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளகவி, மற்றொன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அந்தமான் கிராமம்.

நாம் இந்த தொகுப்பில் பார்க்கப்போவது கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளகவி. ஏன் இந்த கிராமங்களில் மக்கள் செருப்பு அணிவதைத் தவிர்க்கிறார்கள்? ஊரையே கோயிலாகக் கருதும் நம்பிக்கைக்கும், கிராமத் தெய்வத்தின் மீதான பக்திக்கும் என்ன தொடர்பு? இந்தப் பழக்கம் எப்போது தொடங்கியது? வெளியூரிலிருந்து செல்பவர்களும் இதைக் கடைப்பிடிக்க வேண்டுமா? ஆச்சரியமூட்டும் இந்தப் பாரம்பரியத்தின் பின்னணியை விரிவாகப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
வெள்ளகவி
Image Credit : Gemini ai

வெள்ளகவி

வெள்ளகவி கிராமம் எங்கு அமைந்துள்ளது?

வெள்ளகவி (Vellagavi) கிராமம், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் அருகே உள்ள பழனி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வனப்பகுதி, மலைச்சரிவுகள் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த இந்தக் கிராமம், தனித்துவமான பாரம்பரியத்திற்காகப் புகழ்பெற்றது.

விவசாயம், இயற்கையைச் சார்ந்த வாழ்க்கை முறை மற்றும் உள்ளூர் தெய்வ வழிபாடு ஆகியவை இக்கிராம மக்களின் அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

38
வெள்ளகவி கிராமம்
Image Credit : Gemini ai

வெள்ளகவி கிராமம்

ஊரையே கோயிலாகக் கருதும் மக்கள்

தமிழ்நாட்டின் வழக்கத்திற்கு மாறான பாரம்பரியங்களைக் கொண்ட கிராமங்களில் வெள்ளகவி முக்கியமானது. மலைப்பகுதியில் இயற்கைச் சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்தச் சிற்றூரில், காலணி அணியாமல் நடப்பது நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் வழக்கமாகும்.

வெள்ளகவியில் ஏன் செருப்பு அணிவதில்லை?

வெள்ளகவி கிராமத்தின் தனித்துவமான வழக்கத்துக்குப் பின்னால் இருப்பதாகக் கூறப்படும் முக்கியக் காரணம் மத நம்பிக்கையும், முன்னோர்கள் பின்பற்றி வந்த பாரம்பரியமும் ஆகும். ஊரின் நிலப்பரப்பையே புனிதமான இடமாகக் கருதும் மக்களின் நம்பிக்கை.

கோயிலுக்குள் நுழையும்போது காலணிகளைக் கழற்றுவது வழக்கம். அதேபோல, தங்கள் கிராமம் முழுவதையும் இறைவனின் இருப்பிடமாகக் கருதுவதால், ஊருக்குள் காலணி அணியாமல் நடப்பதை மக்கள் பின்பற்றுகிறார்கள்.

இந்தப் பழக்கம் எப்போது தொடங்கியது என்பதற்கான ஆவணம் கிடைக்கவில்லை என்றாலும், தலைமுறை தலைமுறையாக அப்பகுதி மக்கள் இதை பின்பற்றி வருகின்றனர்.

48
முன்னோர்களை பின்பற்றும் மக்கள்
Image Credit : Gemini ai

முன்னோர்களை பின்பற்றும் மக்கள்

  • கிராமத்தின் மண்ணைப் புனிதமானதாகக் கருதுகிறார்கள்.
  • தங்கள் ஊர் முழுவதும் தெய்வங்களின் இருப்பிடமாக இருப்பதாக நம்புகிறார்கள்.
  • கோயிலுக்குள் காலணிகளை அணிந்து செல்லாததைப் போல, தங்கள் கிராமத்திலும் காலணிகளை அணியாமல் நடப்பதை மரியாதையாகக் கருதுகிறார்கள்.
  • முன்னோர்கள் பின்பற்றி வந்த இந்த வழக்கத்தை அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள்.
58
கிராமத்தில் எத்தனை கோயில்கள் இருக்கிறது?
Image Credit : Gemini ai

கிராமத்தில் எத்தனை கோயில்கள் இருக்கிறது?

வெள்ளகவியில் வீடுகளுக்கு அருகிலும், பாதைகளிலும் 25-க்கும் மேற்பட்ட சிறிய கோயில்கள் மற்றும் வழிபாட்டிடங்கள் உள்ளது. இந்தக் கோயில்கள் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்துள்ளன.

இதனால், குறிப்பிட்ட ஒரு கோயிலுக்குச் செல்லும்போது மட்டுமே பக்தியுடன் நடந்துகொள்வது என்றில்லாமல், தங்கள் குடியிருப்புப் பகுதி முழுவதையும் புனிதமானதாகக் கருதுகின்றனர்.

68
சாலை வசதி இல்லாத கிராமமா வெள்ளகவி?
Image Credit : Gemini ai

சாலை வசதி இல்லாத கிராமமா வெள்ளகவி?

வெள்ளகவி கிராமத்தின் மற்றொரு தனித்துவம், அங்கு செல்வதற்கான கடினமான மலைப்பாதை ஆகும். சாதாரணமாக வாகனத்தில் நேரடியாகச் சென்றடையும் சுற்றுலாத் தலங்களைப் போன்றதல்ல. வழக்கமான சாலை வழியாக நேரடியாகச் செல்ல முடியாது. வனப்பகுதி மற்றும் மலைப்பாதைகள் வழியாக நடந்தே செல்ல வேண்டியிருக்கும்.

78
வெள்ளகவி மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது?
Image Credit : Gemini ai

வெள்ளகவி மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது?

வெள்ளகவி கிராமம் இயற்கையைச் சார்ந்த எளிய வாழ்க்கை முறைக்காகவும் அறியப்படுகிறது.

விவசாயம்: மலைப்பகுதிக்கேற்ற காபி, ஆரஞ்சு, அவகாடோ போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து வாழ்ந்து வருகின்றனர்.

88
வெள்ளகவி கிராமம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?
Image Credit : Gemini ai

வெள்ளகவி கிராமம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

இன்றைய உலகில் காலணி என்பது வெறும் தேவையாக மட்டுமல்லாமல், ஃபேஷன் மற்றும் தனிப்பட்ட அடையாளத்தின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டது. அதற்கேற்ப விதவிதமான செருப்புகளையும் ஷூக்களையும் வாங்குகிறோம்.

ஆனால், வெள்ளகவி கிராமத்தின் பாரம்பரியம் வேறொரு வாழ்க்கை நோக்கத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒரு பொருள் நமக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், சில சமூகங்களில் நம்பிக்கை, பண்பாடு மற்றும் முன்னோர்களின் வழக்கம் அதைவிட முக்கியமானதாக இருக்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fridge Cleaning: பிரிட்ஜ் வெஜிடபிள் டிராயரை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்! பாக்டீரியாக்களை ஓட ஓட விரட்டலாம்!
Recommended image2
Lady's Finger plant care: வெண்டைக்காய் செடியில் கொத்துக்கொத்தாக காய்க்க இதைச் செய்யுங்கள்..எளிய டிப்ஸ்!
Recommended image3
Potato Storage Tips: உருளைக்கிழங்கு சீக்கிரம் கருத்துப் போகுதா? பிரெஷ்ஷாக வைக்க சூப்பர் டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Kanadukathan Chettinad Homes : இது கிராமமா? அரண்மனைகளின் ஊரா? கானாடுகாத்தான் வீடுகளின் பின்னணியில் இருக்கும் ஆச்சரிய ரகசியம்!
Recommended image2
Thirukkarugavur Temple : குழந்தை வரம் வேண்டி பலரும் செல்லும் கிராமம்.. திருக்கருகாவூர் கோயிலின் பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved