MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Job News: வங்கி வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.! ரூ.85,920 வரை சம்பளம்.! 2,482 காலிப்பணியிடங்கள்.!

Job News: வங்கி வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.! ரூ.85,920 வரை சம்பளம்.! 2,482 காலிப்பணியிடங்கள்.!

வேலைவாய்ப்பு செய்தி: வங்கியில் வேலை பார்க்க ஒரு பொன்னான வாய்ப்பு. அதுவும் ரூ.85,000 சம்பளம். யார் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்? முழு விவரங்களையும் அறிய இந்த கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 01 2026, 07:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பட்டதாரிகளுக்கு அரசு வங்கியில் வேலை!
Image Credit : X@zubiqo

பட்டதாரிகளுக்கு அரசு வங்கியில் வேலை!

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda), நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள லோக்கல் பேங்க் ஆபிசர் (Local Bank Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

2,482 பணியிடங்கள்

பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, லோக்கல் பேங்க் ஆபிசர் பதவிக்கு நாடு முழுவதும் மொத்தம் 2,482 காலிப்பணியிடங்கள் உள்ளன. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் மாநிலத்திற்கான தகுதிகள் மற்றும் மொழித் தேவைகளை கவனமாகப் பார்க்க வேண்டும்.

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். ஆரம்ப கட்டமாக ஒரு வருடம் Probation எனப்படும் தகுதிகாண் பருவம் இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
லோக்கல் பேங்க் ஆபீசர் பதவி: சம்பளம் மற்றும் சலுகைகள் என்னென்ன?
Image Credit : Getty

லோக்கல் பேங்க் ஆபீசர் பதவி: சம்பளம் மற்றும் சலுகைகள் என்னென்ன?

லோக்கல் பேங்க் ஆபிசர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நல்ல ஊதியத்துடன் பல்வேறு வங்கி சலுகைகளும் கிடைக்கும். அடிப்படை ஊதியம் மற்றும் சம்பள அளவின்படி மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் வங்கி விதிமுறைகளின்படி கிடைக்கும் அலவன்ஸ்கள் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படுவதால், வங்கி துறையில் நல்ல ஊதியத்துடன் பணியை எதிர்பார்ப்பவர்களுக்கு இது முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
Business: காளான் வளர்ப்புக்கு 50% வரை அரசு மானியம்... வங்கிக் கடனுடன் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவது எப்படி?
Related image2
SBI Recruitment 2026: வங்கி வேலைக்கு தேர்வு இல்லை.! உடனே விண்ணப்பித்தால் Job உறுதி.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
35
விண்ணப்ப செயல்முறை: ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
Image Credit : social media

விண்ணப்ப செயல்முறை: ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் பட்டப்படிப்பு மட்டும் போதாது. ஆகஸ்ட் 1, 2026 தேதியின்படி, ரிசர்வ் வங்கியின் இரண்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள ஏதேனும் ஒரு Scheduled Commercial Bank-ல் அதிகாரி பதவியில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதனால் ஏற்கனவே வங்கித் துறையில் பணியாற்றி வரும் தகுதியான அதிகாரிகள் இந்த ஆட்சேர்ப்பில் முக்கியமாக கவனம் செலுத்தலாம்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பேங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.175 முதல் ரூ.850 வரை.

45
உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்
Image Credit : X@zubiqo

உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்

லோக்கல் பேங்க் ஆபிசர் பணியின் முக்கியமான தகுதிகளில் ஒன்று உள்ளூர் மொழித் திறன் ஆகும். விண்ணப்பதாரர் எந்த மாநிலத்தில் உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்கிறாரோ, அந்த மாநிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் மொழியை படிக்கவும், எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

எனவே, விண்ணப்பிக்கும் முன்பு சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கான மொழித் தகுதியை விண்ணப்பதாரர்கள் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.

55
வயது வரம்பு என்ன? எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
Image Credit : stockPhoto

வயது வரம்பு என்ன? எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகள் மற்றும் வங்கி ஆட்சேர்ப்பு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படலாம். வயது கணக்கீடு மற்றும் தளர்வு தொடர்பான முழுமையான விவரங்களை விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்ப்பது நல்லது.

விண்ணப்பித்த அனைவரும் நேரடியாக பணிக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள். தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வதற்காக பல்வேறு கட்டங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது.முதலில் ஆன்லைன் தேர்வு நடைபெறும். இதனைத் தொடர்ந்து தேவைக்கேற்ப Psychometric Test, குழு விவாதம் அல்லது நேர்காணல் போன்ற அடுத்தகட்ட தேர்வு முறைகளும் இடம்பெறலாம். ஒவ்வொரு கட்டத்திலும் தகுதி பெறும் விண்ணப்பதாரர்களே இறுதித் தேர்வுக்குச் செல்ல முடியும். எனவே விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையை முன்கூட்டியே அறிந்து தயாராவது முக்கியம்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

இந்த ஆட்சேர்ப்பில் பொதுப் பிரிவு மற்றும் குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வெவ்வேறு விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு ரூ.850 விண்ணப்பக் கட்டணமாகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ரூ.175 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தி விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும்.

செப்டம்பர் 7 கடைசி தேதி

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 7, 2026க்குள் ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாளில் இணையதளத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, முடிந்தவரை முன்கூட்டியே விண்ணப்பிப்பது பாதுகாப்பானது.விண்ணப்பிக்கும் போது கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்று, வயது மற்றும் அடையாளச் சான்றுகள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருப்பது அவசியம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் பேங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் சென்று இந்தப் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

Bank of Baroda – Careers அதிகாரப்பூர்வ இணையதளம்

விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி, பணி அனுபவம், வயது வரம்பு, உள்ளூர் மொழித் தகுதி, இடஒதுக்கீடு மற்றும் தேர்வு நடைமுறை உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகப் படித்துவிட்டு விண்ணப்பிப்பது மிகவும் முக்கியம்.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு

வங்கி துறையில் அதிகாரி நிலையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே Scheduled Commercial Bank-ல் அதிகாரி பதவியில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் பெற்றவர்கள், தங்களது தகுதிகளை சரிபார்த்து விண்ணப்பிக்கலாம். 2,482 காலிப்பணியிடங்கள், ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம், பல்வேறு சலுகைகள் என இருப்பதால், தகுதியானவர்கள் கடைசி தேதியை எதிர்பார்க்காமல் விண்ணப்ப செயல்முறையை தொடங்குவது சிறந்தது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pay Commission: 7வது vs 8வது சம்பள கமிஷன் - DA, சம்பளம், பென்ஷன்... என்னென்ன மாறும்?
Recommended image2
8th Pay Commission: கன்சல்டன்ட் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்! முழு விவரம் உள்ளே
Recommended image3
8th Pay Commission: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.45,000? 8வது ஊதியக் குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்!
Related Stories
Recommended image1
Business: காளான் வளர்ப்புக்கு 50% வரை அரசு மானியம்... வங்கிக் கடனுடன் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறுவது எப்படி?
Recommended image2
SBI Recruitment 2026: வங்கி வேலைக்கு தேர்வு இல்லை.! உடனே விண்ணப்பித்தால் Job உறுதி.! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved