MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Coconut : தேங்காய்-க்கு விமானத்தில் ஏன் தடை? காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!

Coconut : தேங்காய்-க்கு விமானத்தில் ஏன் தடை? காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!

Why Are Coconuts Restricted on Flights : விமானப் பயணத்தின்போது சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளன. அதில் தேங்காயும் ஒன்றாகும்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 02 2026, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்லக்கூடாதா?
Image Credit : chatgpt

விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்லக்கூடாதா?

கோயிலுக்குப் போனா தேங்காய் உடைச்சு, பிரசாதமா வீட்டுக்குக் கொண்டு வர்றது நம்ம வழக்கம். ஆனா, நீங்க விமானத்துல பயணம் செஞ்சா, முழு தேங்காயை கொண்டு வர முடியாது. இதுல என்ன ஆபத்து இருக்குனு நாம நினைக்கலாம். ஆனா, விமான நிறுவனங்கள் இதை மிகவும் ஆபத்தான பொருட்கள் பட்டியல்ல வெச்சிருக்கு. விமான நிறுவனங்கள் சொல்றபடி, காய்ந்த தேங்காய் அதாவது கொப்பரைதான் ரொம்ப ஆபத்தானதாம். இதுல எண்ணெய் சத்து அதிகமா இருக்கறதால, தானாகவே தீப்பிடிக்கும் தன்மை கொண்டது. இதனாலதான், விமானத்தில் லக்கேஜ் வைக்கும் இடத்தில் இருக்கும் வெப்பம் காரணமாக இது தீப்பிடிக்க வாய்ப்பிருக்கு.

Coconut Storage: உடைச்ச தேங்காய் ஒரு மாசம் ஆனாலும் கெடாது! இந்த ஒரு ட்ரிக் தெரிஞ்சா போதும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தேங்காய்க்கு தடை ஏன்?
Image Credit : Facebook

தேங்காய்க்கு தடை ஏன்?

காய்ந்த தேங்காயை செக்-இன் பேக்கேஜ்ல கொண்டு போக அனுமதி இல்லை. ஹேண்ட் பேக் அல்லது செக்-இன் பேக் எதுலயுமே கொப்பரை தேங்காயை கொண்டு போக முடியாது. அது பச்சைத் தேங்காயா இருந்தாலும் சரி, காய்ந்த தேங்காயா இருந்தாலும் சரி, முழுசா கொண்டு போகக் கூடாது. ஸ்பைஸ் ஜெட் போன்ற சில விமான நிறுவனங்கள் தேங்காய் கொண்டு செல்ல அனுமதிக்கின்றன. ஆனால், அது கொப்பரை தேங்காயாக இருக்கக் கூடாது. தேங்காயை சின்ன சின்ன துண்டுகளா வெட்டி, சரியா பேக் செஞ்சு செக்-இன் லக்கேஜ்ல கொண்டு போகலாம். ஆனா, முறையான பேக்கிங் ரொம்ப முக்கியம்.

Spiritual: எல்லா பிரச்சினைகளையும் போக்கும் தேங்காய் வழிபாடு.! பணத்தை குவிக்கும் பரிகாரம் இதுதான்.! ஒரே நாளில் உடனே பலன்.!

34
இளநீரும் கொண்டுபோகக்கூடாது
Image Credit : instagram

இளநீரும் கொண்டுபோகக்கூடாது

விமானத்தின் லக்கேஜ் வைக்கும் பகுதியில் காற்றோட்டம் சரியா இருக்காது. கொப்பரை தேங்காயில் இருந்து வெளியாகும் வெப்பம் தீ விபத்துக்கு வழிவகுக்கும். ஒருமுறை தீப்பிடிச்சா, விமானத்தின் உயரம் மற்றும் குறைவான வசதிகள் காரணமா அதைக் கட்டுப்படுத்துவது ரொம்பவே கஷ்டம். இளநீரையும் நீங்க கேபின் பேக்கில் கொண்டு போக முடியாது. விமான நிறுவனங்கள் இதற்கு அனுமதி கொடுப்பதில்லை. பாதுகாப்பு விதிகள், குறிப்பிட்ட அளவுக்கு மேல் திரவப் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தடை செய்கின்றன.

Coconut Shell Business: தேங்காய் சிரட்டையில இப்படி ஒரு பிசினஸ் இருக்கா? மாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!

44
தடையை மீறி கொண்டு சென்றால் என்ன நடக்கும்?
Image Credit : Getty

தடையை மீறி கொண்டு சென்றால் என்ன நடக்கும்?

நீங்க தடையை மீறி தேங்காயை விமானத்தில் கொண்டு சென்றால், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் லக்கேஜ் சோதனையின்போது அதைப் பறிமுதல் செஞ்சிடுவாங்க. சுங்க விதிகளின்படி உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் கொண்டு போக முடியாது. பிரியாணி போன்ற சமைத்த உணவுகளுக்கும் அனுமதி இல்லை. ஸ்பாஞ்ச் கேக், இனிப்புகள், பேக்கரி பொருட்கள், பச்சை மீன் அல்லது இறைச்சி, ஊறுகாய் போன்றவற்றையும் கொண்டு செல்ல முடியாது. தூள் அல்லது முழு மசாலாப் பொருட்களுக்கும் தடை உள்ளது.

Coconut Milk for Kids : பெற்றோரே! ஒல்லியா குழந்தைகளை கொழு கொழுனு மாற்ற சூப்பர் வழி! தேங்காய் பால் போதும்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேங்காய்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
EPFO New Rules: பிஎஃப் புதிய விதியால் உங்க சம்பளம் ஏறுமா? இறங்குமா? Take Home Salary எவ்ளோ கிடைக்கும்?
Recommended image2
8th Pay Commission : ₹18,000 அடிப்படை சம்பளம் ₹54,000 ஆகுமா? DA, பென்ஷன், அரியர்ஸ் பற்றி 10 முக்கிய தகவல்கள்!
Recommended image3
UPI Payment Rules: யுபிஐ பேமெண்ட்டுக்கு ஜிஎஸ்டி கட்டணுமா? 2000 ரூபாய் லிமிட் பத்தி NPCI விளக்கம்
Related Stories
Recommended image1
Coconut Oil Hair Mask : ஒரே வாரத்தில் தலைமுடி வலுவாகும்! தேங்காய் எண்ணெய்ல இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க!
Recommended image2
Coconut Water : இளநீர் குடிப்பதால் இந்த 11 நன்மைகள் கிடைக்குமாம்! தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved