UCO வங்கியில் அதிகாரி வேலை! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. விண்ணப்பிக்கத் தயாரா?
யூகோ வங்கி (UCO Bank) 2026-27 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் மற்றும் ஜெனரலிஸ்ட் ஆபீஸர் பிரிவுகளில் மொத்தம் 173 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 2, 2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

யூகோ வங்கி வேலைவாய்ப்பு
யூகோ வங்கி (UCO Bank) 2026-27 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்த முறை ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் (SO) மற்றும் ஜெனரலிஸ்ட் ஆபீஸர் பிரிவுகளில் மொத்தம் 173 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்
இந்த ஆட்சேர்ப்பு மூலம் ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு (JMGS-I) மற்றும் மிடில் மேனேஜ்மென்ட் கிரேடு (MMGS-II) ஆகிய நிலைகளில் கீழ்க்கண்ட பதவிகள் நிரப்பப்படுகின்றன:
• டிரேட் ஃபைனான்ஸ் ஆபீஸர் (Trade Finance Officer)
• டிரஷரி ஆபீஸர் (Treasury Officer)
• சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (Chartered Accountant)
• மென்பொருள் உருவாக்குநர் (Software Developer)
• டேட்டா அனலிஸ்ட் & டேட்டா சயின்டிஸ்ட் (Data Analyst & Scientist)
• சைபர் செக்யூரிட்டி ஆபீஸர் மற்றும் கிளவுட் இன்ஜினியர்.
தேர்வு மற்றும் விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் (Group Discussion) அல்லது நேர்காணல் (Interview) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செலுத்தவேண்டிய கட்டண விவரம் பின்வருமாறு:
• SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள்: ₹175 (ஜிஎஸ்டி உட்பட)
• இதர பிரிவினர் (General/OBC/EWS): ₹800 (ஜிஎஸ்டி உட்பட)
• கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான uco.bank.in என்ற முகவரிக்குச் சென்று 'Careers' பிரிவில் விண்ணப்பிக்கலாம்.
அல்லது கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்தலாம்:
https://onlineappl.ucoonline.bank.in/SPE_RCER/
• விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிப்ரவரி 2, 2026
• கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: பிப்ரவரி 2, 2026
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

