- Home
- Business
- Training For Farmer: லட்சங்களில் வருமானம் தரும் தக்காளி சாஸ், ஜாம் உற்பத்தி! தக்காளியில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை மிஸ் பண்ணாதீங்க
Training For Farmer: லட்சங்களில் வருமானம் தரும் தக்காளி சாஸ், ஜாம் உற்பத்தி! தக்காளியில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை மிஸ் பண்ணாதீங்க
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் டிசம்பர் மாதத்திற்கான சிறப்புப் பயிற்சிகளை அறிவித்துள்ளது. இந்த பயிற்சிகளில் எண்ணெய்வித்து விதை உற்பத்தி, நெல்லில் அங்கக மேலாண்மை, தக்காளியில் மதிப்பு கூட்டுதல் போன்ற தலைப்புகள் அடங்கும்.

இனி விவசாயிகள் கையில் தமிழகம்
விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், புதுமையான தொழில்நுட்பங்களை புழக்கத்தில் கொண்டு வரவும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் (Krishi Vigyan Kendra – KVK) தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை நடத்தி வருகிறது. அதனடிப்படையில், இம்மாதத்திற்கான பயிற்சி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நவீன வேளாண் முறைகளை கற்றுக்கொண்டு தங்கள் விளைச்சலை மேலும் மேம்படுத்த விரும்பும் விவசாயிகள், இப்பயிற்சிகளில் கலந்து கொள்ளலாம்.
எண்ணெய்வித்து பயிர்களில் விதை உற்பத்தி சிறப்பு பயிற்சி
டிசம்பர் 6ம் தேதி கொளவாய் கிராமத்தில் எண்ணெய்வித்து பயிர்களில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த சிறப்புப் பயிற்சி நடைபெறுகிறது. எண்ணெய்வித்து பயிர்கள் நமது நாட்டின் முக்கிய பொருளாதார பயிர்களில் ஒன்றாகும். தரமான விதை உற்பத்தி, விளைச்சல் அதிகரிப்பு, நோய்-பூச்சி கட்டுப்பாடு உள்ளிட்ட மேம்பட்ட விஞ்ஞான முறைகள் இந்த பயிற்சியால் பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
நெல்லில் அங்கக மேலாண்மை பயிற்சி
டிசம்பர் 9ம் தேதி நந்தப்பாடியில் நெல்லில் அங்கக மேலாண்மை பயிற்சி நடைபெற உள்ளது. நெல்லின் விளைச்சலில் மண் வளமே மிக முக்கியமானது. கரிமப் பொருட்களின் பயன்பாடு, மண் சீரமைப்பு, உயிரின உரங்கள், நிலத்தடி சத்துக் குறைப்பு தீர்வு முலம் எளிமையான இயற்கை முறைகளை விவசாயிகள் கற்றுக் கொள்ள முடியும்.
தக்காளியில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி
டிசம்பர் 9ம் தேதி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்திலேயே தக்காளியில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி நடைபெறுகிறது. தக்காளியைக் கொண்டு பியூரி, சாஸ், உலர் தக்காளி போன்ற பொருட்களை உருவாக்குதல், சந்தை இணைப்பு, விற்பனை வாய்ப்புகள் உள்ளிட்ட விபரங்கள் இதில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை பலமடங்கு உயர்த்திக் கொள்ளும் வழிமுறைகளை அறியலாம்.
தகவல் மற்றும் பதிவு தொடர்பிற்கு
வேளாண் அறிவியல் நிலையம் (KVK) – விருத்தாசலம் திட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விருத்தாசலம், கடலூர் மாவட்டம் – 606 001. தொலைபேசி: 04143 - 238353
விவசாயிகளுக்கு செம சான்ஸ்
விவசாயிகள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, நவீன வேளாண் அறிவை கற்றுக்கொண்டு தங்கள் உற்பத்தியும் வருமானமும் உயர்த்தலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

