ரூ.186 கோடி சம்பளம்! இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் CEO இவர் தான்! டாப் 10 லிஸ்ட்!
இந்தியாவின் கார்ப்பரேட் துறையில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகள் யார் என்பதை அறிய விரும்புகிறீர்களா? 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் டாப் 10 CEOக்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
Highest Paid CEO's
திறமையான தலைமை நிர்வாக அதிகாரிகளால் இந்தியாவின் கார்ப்பரேட் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் தோராயமாக 1,320 CEO-க்கள் ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பத்து CEOக்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Ravi kumar Singisetty
ஜனவரி 12, 2023 அன்று ரவி குமார் சிங்கிசெட்டி Cognizant நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவர் கடந்த ஆண்டு 186 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் 10 CEOக்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார். காக்னிசெண்ட். நிறுவனத்தின் ஆவணங்களின்படி, அவர் சம்பாதித்ததில் பெரும்பகுதி, சுமார் 169.1 கோடி, பங்குகள் வடிவில் வந்தது.
Thierry Delaporte
சமீபத்தில் Wipro நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய தியரி டெலாபோர்ட், 2023 நிதியாண்டில் ரூ. 82 கோடி சம்பளம் பெற்றார். இவர், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ஸ்ரீனிவாஸ் பாலியா அவருக்குப் பிறகு ஏப்ரல் 7 ஆம் தேதி வரை CEO மற்றும் நிர்வாக இயக்குநராக பதவியேற்றார்.
Sandeep Kalra
Persistent Systems நிறுவனத்தின் CEO மற்றும் செயல் இயக்குனராக, சந்தீப் கல்ரா கடந்த நிதியாண்டில் ரூ. 61.7 கோடி சம்பாதித்துள்ளார், இது 2022-ம் நிதியாண்டில், அவர் சம்பாதித்த ரூ.46.9 கோடியில் இருந்து 31% அதிகமாகும். கல்ரா 2019 இல் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸில் சேர்ந்தார். 2020-ம் ஆண்டு அவர் அந்நிறுவனத்தின் CEO வாக பொறுப்பேற்றார்.
Nitin Rakesh
Mphasis நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், இயக்குநராகவும் இருக்கும் நிதின் ராகேஷ், கடந்த நிதியாண்டில் ரூ.59.2 கோடி சம்பாதித்துள்ளார். அவர் 2017 ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார், போட்டித்தன்மை வாய்ந்த ஐடி சேவைகள் மற்றும் ஆலோசனைத் துறையில் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவினார்
Salil Parek
Infosys தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் கடந்த ஆண்டு ரூ. 56 கோடி சம்பாதித்துள்ளார், அவருடைய வருமானத்தில் குறிப்பிடத்தக்க பகுதியான சுமார் ரூ. 30.6 கோடி, தனது கட்டுப்படுத்தப்பட்ட பங்கு அலகுகளை (ஆர்.எஸ்.யு.) பயன்படுத்துவதன் மூலம். இந்த கணிசமான வருமானம் இருந்தபோதிலும், இது 2022 நிதியாண்டில் அவர் சம்பாதித்த ரூ. 71 கோடியில் இருந்து குறைவு என்று மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.
Sudhir Singh
Coforge நிறுவனத்தின் EO மற்றும் நிர்வாக இயக்குநரான சுதிர் சிங், 2023 நிதியாண்டில் ரூ. 34 கோடி சம்பாதித்துள்ளார். அவர் ஜனவரி 2020 முதல் நொய்டா மற்றும் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட IT சேவை நிறுவனமான Coforge ஐ வழிநடத்தினார்.
CP Gurnani
Tech Mahindra நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான CP குர்னானி, கடந்த ஆண்டு டிசம்பர் 2023ல் பதவி விலகுவதற்கு முன்பு ரூ. 32 கோடி சம்பாதித்துள்ளார், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அவர் அந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினார்.
Rajesh Gopinathan
TCS நிறுவனத்தில் முன்னாள் CEO மற்றும் நிர்வாக இயக்குனரான ராஜேஷ் கோபிநாதன் 2023 நிதியாண்டில் இல் 29.61 கோடி சம்பாதித்துள்ளார். இதில், அவரது சம்பளம் ரூ.1.73 கோடி, கூடுதல் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் ரூ.2.43 கோடி ஆகும்.. கோபிநாதன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை 2023 இல் ராஜினாமா செய்தார்.
C VIjayakumar
HCL Tech CEO மற்றும் நிர்வாக இயக்குனர், C விஜயகுமார், 2023 நிதியாண்டில் 28.4 கோடி சம்பாதித்தார். அவர் 2016 முதல் HCL இல் இருந்து வருகிறார், புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.
Sanjee Mehta
Hindustan Unilever நிறுவனத்தின் CEO சஞ்சீவ் மேத்தா, 2023 நிதியாண்டில் 22.36 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். அவர் அக்டோபர் 2013 முதல் நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.