- Home
- Business
- Free Govt Training: மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் ஈசியா.! இலவச பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி உங்களுக்கு வழிகாட்டும்.!
Free Govt Training: மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் ஈசியா.! இலவச பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி உங்களுக்கு வழிகாட்டும்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் பால் பொருட்கள் தயாரிப்பு குறித்து 25 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மூலம், வீட்டிலிருந்தபடியே தொழில் தொடங்கி மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்கும் வாய்ப்பை பெறலாம்.

வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கணுமா?
உங்களுக்கு தொழில் ஆரம்பிக்கணுமா? வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கணுமா? பால், பால் பொருட்கள் தயாரிப்பு வேலைகளுக்கு டிமாண்ட் குறையாது என்று தெரியும். லஸி, பன்னீர், கீ, பட்டர், மில்க் ஷேக்ஸ், ஐஸ் கிரீம், ரோஸ் மில்க், ஃப்ளேவர் மில்க்…! ஆகியவற்றை வீட்டில் செய்வது முதல் தொழிற்சாலையில் செய்வது வரை வாய்ப்புகள் நிறைய. அதையும் இலவச பயிற்சி கொடுத்து கற்றுக்கொடுக்கிறாங்கன்னா இன்னும் சூப்பர் தான் இல்லையா?
உண்மையிலேயே அட்டகாசமான வாய்ப்பு
பால் பொருட்கள் தயாரிப்பு தொழில் இன்று சந்தையில் மிகுந்த வளர்ச்சி பெற்ற துறையாக மாறி வருகிறது. வீட்டிலிருந்தபடியே சிறு அளவில் இந்த தொழிலை ஆரம்பித்து, பின்னர் சிறு தொழிற்சாலை அல்லது தனிநபர் உற்பத்தி யூனிட் வரை விரிவாக்கிக் கொள்ள முடியும். இதை முயற்சி செய்ய விரும்புகிறவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் கோடுவள்ளியில் அமைந்துள்ள பால் மற்றும் உணவுத் தொழில்நுட்ப கல்லூரியில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
25 நாட்கள் பயிற்சி
டிசம்பர் 10-ம் தேதி முதல் 25 நாட்கள் காலத்திற்கு நடைபெற உள்ள இந்த பயிற்சி திட்டத்தில், Dairy Plant Assistant மற்றும் Milk Products Preparation Assistant என்ற இரண்டு முக்கிய துறைகளில் விரிவான நடைமுறை மற்றும் தொழில்முனைவு சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த பயிற்சியின் சிறப்பு என்ன தெரியுமா?
முற்றிலும் இலவசம்! மேலும், 18 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பனீர், பட்டர், கீ, ஃப்ளேவர் மில்க், லஸி, மில்க் பவுடர் போன்ற பல்வேறு பால் பொருட்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் முதல், சந்தையில் பொருட்களை விற்பனை செய்வது வரை பயிற்சியில் கற்றுக்கொள்ளலாம்.
ரூ.50,000 வரை வருமானம் கிடைக்கும்
பயிற்சி முடிந்த உடனே தனியாக தொழில் தொடங்கவும், அல்லது மில்க் பிளாண்ட், ஹோட்டல், பேக்கரி போன்ற நிறுவனங்களில் வேலை பெறவும் வாய்ப்பு உள்ளது. தற்போது இந்த துறையில் ஆரம்ப கட்ட வருமானம் மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
முன்பதிவு கட்டாயமாகும்
பயிற்சியில் சேர விரும்பும் அனைவரும் முன்பதிவு செய்துவிட வேண்டும். இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல், இடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதால் விரைவில் பதிவு செய்வது முக்கியம்.
தொழில் தொடங்கும் கனவு இப்போது நிஜமாகலாம்
மேலும் தகவல்களுக்கு தொடர்புக்கு: 94441 55312. பால் பொருட்கள் தயாரிப்பு என்பது ஒரு நீண்டகால வருமான வாய்ப்பு. இந்த பயிற்சி உங்கள் தொழில் கனவுகளுக்கு திறவுகோல் ஆகும். வீட்டிலிருந்தபடியே தொழில் தொடங்கும் கனவு இப்போது நிஜமாகலாம்!
பால் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் சாதிக்கலாம்
இன்றைய காலத்தில் வேலை கிடைக்காததால் பலரும் குழப்பத்திலும் சந்தேகத்திலும் இருக்கிறார்கள். எந்த துறையை தேர்வு செய்தால் நம்மால் நிலையான வருமானம் பெற முடியும் என்ற கேள்வி எல்லோரிடமும் உள்ளது. ஆனால் பால் பொருட்கள் தயாரிப்பு தொழில்துறை அதன் தேவையை ஒருபோதும் இழக்காத துறை. நகரமாக இருந்தாலும் கிராமமாக இருந்தாலும், இந்த பொருட்களுக்கு சந்தை எப்போதும் உள்ளது. இந்த துறையில் நீங்கள் தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சிதான் முதல்படி. வேலை, வருமானம், தொழில் ஆரம்பிப்பு, அரசுத் திட்டத்தின் பயன், மற்றும் இலவச பயிற்சி என்ற எல்லா மூலதனங்களும் ஒரே நேரத்தில் கிடைக்கும் அபூர்வ வாய்ப்பு இது.
முழுக்க முழுக்க இலவசம் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பு
இது வெறும் பயிற்சி மட்டும் இல்லை, வாழ்க்கையை முன்னேற்றும் திறன் மேம்பாட்டு திட்டம். இந்த பயிற்சியில் சேர்ந்து கற்றுக்கொள்பவர்கள், தொழில்முனைவோர் ஆகவும், வேலை வாய்ப்புகளைப் பெறக்கூடியவர்களாகவும் உருவாக்கப்படுவார்கள். உங்கள் திறமையை நிரூபிக்க, உங்கள் வாழ்க்கையை மாற்ற, புதிய வருமான வாய்ப்பை உருவாக்க இந்த பயிற்சி ஒரு தங்க வாய்ப்பு. உங்கள் கையில் வருகிறது ஒரு புதிய திறன், ஒரு புதிய தொழில் திறப்பு, ஒரு புதிய வருமான வாய்ப்பு. அதே நேரத்தில் முழுக்க முழுக்க இலவசம் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பு.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

