பில்லியனர்கள் பட்டியலில் அசைக்க முடியாத தமிழர்.. உலக அரங்கில் ஷிவ் நாடார் படைத்த சாதனை
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஃபோர்ப்ஸின் ரியல்-டைம் பில்லியனர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஃபோர்ப்ஸ் இந்திய பில்லியனர்கள்
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், மீண்டும் ஃபோர்ப்ஸின் ரியல்-டைம் பில்லியனர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். வரலாற்றில் முதல்முறையாக 500 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய நபர் இவரே என்பதில் ஆச்சரியமில்லை. டெஸ்லா மற்றும் ஸ்பெஸ்எக்ஸ் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால், மாஸ்க் இன்று உலகின் மிகப்பெரிய செல்வந்தராக திகழ்கிறது.
எலான் மஸ்க்
புதன்கிழமை, டெஸ்லா பங்குகள் சுமார் 4 சதவீதம் உயர்ந்தன. பங்குகள் உச்சம் தொட்ட அந்த தருணத்தில், மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 500.1 பில்லியன் டாலரை எட்டியது. சந்தை முடிவடையும் நேரத்தில் பங்கு விலை சற்று குறைந்தாலும், அவர் உலகின் முதல் 500 பில்லியன் டாலர் பில்லியனாகவே பதிவு செய்யப்பட்டார். தற்போதைய நிலையில் டெஸ்லா பங்கு 459.46 டாலராக உள்ளது, மேலும் விரைவில் 500 டாலரைத் தாண்டும் வாய்ப்பு நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் சொத்து
மஸ்கின் சொத்துக்களில் பெரும்பகுதியை டெஸ்லா பங்குகள் அமைத்துள்ளன. நிறுவனத்தில் அவர் 12.4 சதவீதத்திற்கும் அதிக பங்குகளை வைத்துள்ளார். சமீபத்தில் அவர் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை கூடுதலாக வாங்கியிருந்தது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்தது. இதனால் டெஸ்லா பங்கு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் தாக்கமே அவரது செல்வ மதிப்பை வரலாற்று உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
ஃபோர்ப்ஸ் பட்டியல்
ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவலின்படி, 2020-இல் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர் மட்டுமே. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவரது செல்வம் பத்துக்கணக்கில் அதிகரித்து, இன்று 500 பில்லியன் டாலர் என்ற சாதனை எண்ணிக்கையை எட்டியுள்ளது. உலக தொழில்நுட்பத்திலும், முதலீட்டிலும் மாஸ்க் காட்டும் தாக்கம், அவர் இன்னும் பல வருடங்கள் உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை தக்க வைத்துள்ளார். உறுதிப்படுத்துகிறது.
ஷிவ் நாடார்
இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025 ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, இந்தியாவை சேர்ந்த 205 பில்லியனர்கள் உள்ளனர். இதில் சுமார் 14 முன்னணி தொழில்நுட்ப பில்லியனர்கள் இந்தியாவை முன்னேற்றி வருகின்றனர். இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தவர் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் மற்றும் இணை நிறுவனர் ஷிவ் நாடார். அவரின் நிகர சொத்து மதிப்பு $31.5 பில்லியன் ஆகும். இதன் மூலம் அவர் 2025 ஃபோர்ப்ஸ் ரியல்-டைம் பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவின் நான்காவது செல்வந்தராகவும் பதிவு செய்துள்ளார்.