- Home
- Politics
- விஜய் உயிருக்கு ஆபத்து..? எகிறும் அச்சுறுத்தல்கள்..! பாதுகாப்பை அதிகரிக்கும் உள்துறை அமைச்சகம்..!
விஜய் உயிருக்கு ஆபத்து..? எகிறும் அச்சுறுத்தல்கள்..! பாதுகாப்பை அதிகரிக்கும் உள்துறை அமைச்சகம்..!
உள்துறை அமைச்சகம் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மத்திய பாதுகாப்பு படையினரிடம் விஜயின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா? என விளக்கம் கேட்டுள்ளது. பாதுகாப்பை அதிகரித்தால் அவரது அரசியல் பயணத்தை பாதுகாக்கவும், தீவிர பரப்புரை மேற்கொள்ள உதவும்.

தவெக தலைவராக இருப்பதால், விஜய்க்கு கடந்த மார்ச் 14 முதல் மத்திய உள்துறை அமைச்சகம் 'Y' பிரிவு பாதுகாப்பை வழங்கி வருகிறது. அவரது அரசியல் செயல்பாடுகள் , பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதில், 8 முதல் 11 பேர் (2-4 சிஆர்பிஎப் கமாண்டோக்கள் + 6-8 போலீஸ் அதிகாரிகள்) ஈடுபட்டுள்ளனர். தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி (பிஎஸ்ஓ) 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
விஜய் செல்லும் ரோடு ஷோக்கள், பிரச்சாரங்கள் என பொது நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 19ம் தேதி விஜயின் பனையூர் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 24 வயது இளைஞர் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்து கைது செய்யப்பட்டார். இது Y பிரிவு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பலியான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மருத்துவமனைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கு ஆபத்து இருப்பதால், அவரது அரசியல் பயணங்கள் தடைபடலாம் எனக் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டுள்ள உள்துறை அமைச்சகம், தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மத்திய பாதுகாப்பு படையினரிடம் விஜயின் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா? என விளக்கம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, விஜயின் பாதுகாப்பை அதிகரிக்க உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு அதிகரிக்கப்படும் நிலையில், விஜயின் அரசியல் பயணத்தை பாதுகாக்கவும், 2026 தேர்தலுக்கு முன் தீவிர பரப்புரை மேற்கொள்ள உதவும் எனக் கூறப்படுகிறது.