- Home
- Business
- Share Market Today: இன்று லாபத்தை அள்ளித்தரும் முக்கிய பங்குகள்.! அத்தனையும் அல்டிமேட்.! வாங்கி போட்டா ஜாக்பாட்.!
Share Market Today: இன்று லாபத்தை அள்ளித்தரும் முக்கிய பங்குகள்.! அத்தனையும் அல்டிமேட்.! வாங்கி போட்டா ஜாக்பாட்.!
இந்திய பங்குச் சந்தைகளில் ஆட்டோ, வங்கி மற்றும் ஆட்டோ-காம்போனென்ட் துறைகள் வலுவாக உள்ள நிலையில், நிதி நிபுணர்கள் குறுகிய கால முதலீட்டிற்கு சில பங்குகளைப் பரிந்துரைத்துள்ளனர். அவற்றின் இலக்கு விலை, ஸ்டாப்-லாஸ் விவரங்களும் உள்ளன.

இவற்றையெல்லாம் வாங்கலாம்
இன்றைய இந்திய பங்கு சந்தைகளில் ஆட்டோ, வங்கி மற்றும் ஆட்டோ-காம்போனென்ட் துறைகளில் வலுவான முன்னேற்றம் காணப்படும். இந்த சூழலில் நிதி நிபுணர்கள் Bajaj Auto, Minda Corporation மற்றும் Union Bank of India ஆகியபங்குகளையும் “இன்று வாங்குவதற்கு உகந்தவை” என்று பரிந்துரைத்துள்ளனர். இந்த பரிந்துரைகள் குறுகியகால இலக்கை (Short-term Target) குறிப்படுகின்றன. Stop-Loss, Target, மற்றும் பங்கின் தற்போதைய விலை போன்ற முக்கிய தகவல்கள் அடிப்படையில் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் AAVAS Financier, வேதாந்தா உள்ளிட்ட பங்குகளையும் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
முத்தான 3 பங்குகள்
Bajaj Auto – பங்கு விவரம்
தற்போதைய விலை (LCP): ₹8,868
Stop Loss: ₹8,600
Target: ₹9,440
ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?
Bajaj Auto இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் துறையில் முன்னணி நிறுவனம். சமீபத்திய காலாண்டுகளில் நிறுவனத்தின் லாபம் 50%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆட்டோ துறையில் தேவை (demand) மீண்டும் வலுவடைந்துள்ளது; உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை உயர்வு காணப்படுகிறது.
Minda Corporation – பங்கு விவரம்
தற்போதைய விலை (LCP): ₹607
Stop Loss: ₹582
Target: ₹652
ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?
Minda Corporation வாகன உபகரணங்கள் (Auto Components) உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உள்ளது. வாகன விற்பனை அதிகரிப்புடன், காம்போனென்ட்ஸ் துறைக்கும் நேரடி தேவை உருவாகிறது.
Union Bank of India – பங்கு விவரம்
தற்போதைய விலை (LCP): ₹156
Stop Loss: ₹150
Target: ₹170
ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?
Bank Nifty முழுவதும் மிக வலுவான ஓட்டத்தில் உள்ளது. வட்டி விகித குறைப்பு வாய்ப்பு, வங்கிகளின் லாபத்தை மேம்படுத்தும் முக்கிய காரணம்.
Union Bank கடந்த சில காலாண்டுகளில் NPA குறைப்பு மற்றும் வலுவான கடன் வளர்ச்சி (loan growth) காட்டு வருகிறது.
இந்த பங்குகளையும் வாங்கலாம்
AAVAS Financiers Ltd, Vedanta Ltd, NTPC Ltd, Bharat Electronics Ltd (BEL), Maruti Suzuki, Tourism Finance Corporation of India ஆகிய பங்குகளையும் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். நீண்ட கால நோக்கில் காத்திருந்தால் வங்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துளஅளனர்.
நிதானம் தேவை மக்களே
முதலீட்டை செய்ய முன் உங்கள் ஆபத்து திறனை (risk appetite) மனதில் கொண்டு முடிவு செய்யவும். நிதானமாகவும் குறைந்த முதலீடுமே ஆரோக்கிமான பங்கு வர்த்தகத்திற்கு வழிவகுக்கும்.