MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Post Office Savings Scheme: தினமும் ₹50 போதும்.! ₹35 லட்சம் அள்ளலாம்! இந்த சூப்பர் ஸ்கீம் தெரியுமா?

Post Office Savings Scheme: தினமும் ₹50 போதும்.! ₹35 லட்சம் அள்ளலாம்! இந்த சூப்பர் ஸ்கீம் தெரியுமா?

Post Office Savings Scheme: தினமும் ரூ.50 முதலீடு செஞ்சா போதும், ஆயுள் காப்பீட்டு வசதியோடு மெச்சூரிட்டி சமயத்தில் சுமார் ரூ.35 லட்சம் வரைக்கும் லாபம் பார்க்கலாம். போஸ்ட் ஆபீஸின் 'கிராம் சுரக்‌ஷா யோஜனா' திட்டத்தோட முழு விவரங்களையும் பார்க்கலாம் வாங்க.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 01 2026, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Post Office Gram Suraksha Yojana
Image Credit : ChatGPT

Post Office Gram Suraksha Yojana

சம்பாதிக்கிறது எவ்வளவு முக்கியமோ, அதை சரியா சேமிக்கிறது அதைவிட முக்கியம். சின்ன சின்னதா சேமிக்கிற பணம் தான், எதிர்காலத்துல நமக்கு பெரிய உதவியா இருக்கும். இந்த கான்செப்ட்டை வெச்சுதான் போஸ்ட் ஆபீஸ் ஒரு சூப்பர் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கு. அதுதான் 'கிராம் சுரக்‌ஷா யோஜனா'. தினமும் வெறும் 50 ரூபாயை நீங்க இந்தத் திட்டத்துல முதலீடு செஞ்சா போதும், நீண்ட காலத்துல 35 லட்சம் ரூபாய் வரைக்கும் பெரிய தொகையைச் சேர்க்கலாம். இதில் உங்க பணம் 100% பாதுகாப்பா இருக்கும், எந்த ரிஸ்க்கும் கிடையாது.

இதையும் படியுங்கள்:  ரூ.30,000 தான் சம்பளம் வாங்குறீங்களா? வீடு, கார் லோன் வாங்குனா எப்படி மேனேஜ் பண்ணலாம்? இதோ சிம்பிள் கணக்கு.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இந்த திட்டத்திற்கு யார் தகுதியானவர்?
Image Credit : Asianet News

இந்த திட்டத்திற்கு யார் தகுதியானவர்?

இந்தத் திட்டத்தில் சேர்வது ரொம்பவே ஈஸி. நீங்க இந்திய குடிமகனா இருந்து, உங்க வயசு 19-லிருந்து 55-க்குள் இருந்தா போதும், உடனே இந்த ஸ்கீம்ல சேர்ந்துடலாம். குறைந்த வருமானம் உள்ள நடுத்தரக் குடும்பத்தினரும் சேமிக்கணும்ங்கிற நோக்கத்துல, குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையை வெறும் ₹10,000-ஆக நிர்ணயிச்சிருக்காங்க. அதிகபட்சமா ₹10 லட்சம் வரைக்கும் ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பை இந்தத் திட்டம் தருது.

இதையும் படியுங்கள்:  வங்கி கணக்கில் ரூ.15000 வரவு வைத்த மத்திய அரசு.! உங்களுக்கு வந்து இருக்கா? உடனே செக் பண்ணுங்க.!

35
உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற பிரீமியம் தேர்வுகள்
Image Credit : Getty

உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற பிரீமியம் தேர்வுகள்

மாசம் இவ்வளவுதான் கட்டணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை. தினமும் ₹50 வீதம், மாசத்துக்கு சுமார் ₹1,500 முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆனா, இந்த பிரீமியம் தொகையை உங்க வசதிக்கு ஏத்த மாதிரி மாதாந்திரமாகவோ, காலாண்டுக்கு ஒருமுறையோ அல்லது ஆண்டுக்கு ஒருமுறையோ கட்டிக்கலாம். இதனால, பட்ஜெட் டென்ஷன் இல்லாம உங்க சேமிப்பு ஸ்மூத்தா போகும்.

இதையும் படியுங்கள்:  KVP Scheme: ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்.! மத்திய அரசின் சூப்பர் முதலீடு திட்டம்.!

45
கடன் வசதி மற்றும் சரண்டர் விருப்பங்கள் குறித்த விவரங்கள்
Image Credit : Getty

கடன் வசதி மற்றும் சரண்டர் விருப்பங்கள் குறித்த விவரங்கள்

சேமிக்கும்போது நடுவுல அவசரச் செலவு வந்தா என்ன பண்றதுன்னு பலருக்கும் ஒரு டவுட் வரும். அதுக்கும் இதுல ஒரு நல்ல தீர்வு இருக்கு. நீங்க இந்த பாலிசியில சேர்ந்த நாலு வருஷத்துக்குப் பிறகு, அவசரத் தேவைக்கு கடன் வாங்கிக்கலாம். ஒருவேளை பாலிசியை பாதியில நிறுத்த நினைச்சா, மூணு வருஷத்துக்குப் பிறகு சரண்டர் செய்யும் வாய்ப்பும் இருக்கு. அதுமட்டுமில்ல, அஞ்சு வருஷம் வெற்றிகரமா முடிச்சா, இந்த பாலிசிக்கு நல்ல போனஸும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:  Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!

55
காப்பீடு மற்றும் உத்தரவாதமான வருமானமும் கூட
Image Credit : Getty

காப்பீடு மற்றும் உத்தரவாதமான வருமானமும் கூட

இந்த பாலிசியோட மெச்சூரிட்டி, பாலிசிதாரருக்கு 80 வயசு ஆகும்போது நிறைவடையும். அப்போதான் முழு மெச்சூரிட்டி தொகையும் கைக்குக் கிடைக்கும். பாதுகாப்பான முதலீடு, ஆயுள் காப்பீடு, சூப்பரான நீண்ட கால சேமிப்புன்னு இந்த மூணும் சேர்ந்து வர்றதால, 'கிராம் சுரக்‌ஷா யோஜனா' திட்டம் கிராமப்புறங்கள்ல ரொம்ப பிரபலமா இருக்கு. ரிஸ்க் இல்லாம நல்ல லாபம், கூடவே லைஃப் கவரேஜ் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு பெர்ஃபெக்ட் சாய்ஸ்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசு திட்டம்
அஞ்சல் அலுவலகம்
தபால் அலுவலகத் திட்டம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Business Idea: ரூ.20க்கு வாங்கி ரூ.40க்கு விற்கலாம்.. குறைந்த முதலீட்டில் காய்கறி கடை தொடங்குவது எப்படி?
Recommended image2
தீபாவளிக்கு கார் வாங்கப் போறீங்களா? லட்சக்கணக்கில் பணத்தைச் சேமிக்க 5 ஸ்மார்ட் டிப்ஸ்!
Recommended image3
DA Hike Update For Central Government Employees : DA உயர்வால் போக்குவரத்து படியும் அதிகரிக்குமா? யாருக்கு எவ்வளவு கூடுதல் தொகை கிடைக்கும்?
Related Stories
Recommended image1
EMI Calculator: ரூ.30,000 தான் சம்பளம் வாங்குறீங்களா? வீடு, கார் லோன் வாங்குனா எப்படி மேனேஜ் பண்ணலாம்? இதோ சிம்பிள் கணக்கு.!
Recommended image2
Govt Scheme: வங்கி கணக்கில் ரூ.15000 வரவு வைத்த மத்திய அரசு.! உங்களுக்கு வந்து இருக்கா? உடனே செக் பண்ணுங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved