MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Save 333 Daily : தினமும் ரூ.333 சேமித்தால் ரூ.17 லட்சம் கையில்.. ரிஸ்க் இல்லாத தபால் நிலைய திட்டம்

Save 333 Daily : தினமும் ரூ.333 சேமித்தால் ரூ.17 லட்சம் கையில்.. ரிஸ்க் இல்லாத தபால் நிலைய திட்டம்

தபால் நிலையத்தின் தொடர் வைப்பு (ஆர்டி) திட்டம், மத்திய அரசின் பாதுகாப்புடன் 6.7% வட்டி வருமானம் தரும் ஒரு சிறந்த சேமிப்பு முறையாகும். லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட முடிவதாலும் இது நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : May 11 2026, 08:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தபால் நிலைய ஆர்டி திட்டம்
Image Credit : Asianet News

தபால் நிலைய ஆர்டி திட்டம்

தினமும் ஒரு டீ, ஸ்நாக்ஸ் செலவைக் குறைத்தால் போதும். எதிர்காலத்தில் லட்சங்களை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையை மீண்டும் நினைவுபடுத்தும் தபால் நிலையத்தின் தொடர் வைப்பு (ஆர்டி) திட்டம். பங்குச்சந்தை ஏற்றத் தாழ்வுகளால் பதற்றமடையும் மக்களுக்கு, “முதலீடு பாதுகாப்பாக இருக்கணும். அதே நேரத்தில் நல்ல வருமானமும் வேண்டும்” என்ற எண்ணமே அதிகம். அந்த வகையில், மத்திய அரசின் பாதுகாப்புடன் செயல்படும் தபால் அலுவலக ஆர்டி திட்டம் தற்போது நடுத்தர குடும்பங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்
Image Credit : Getty

போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்

இந்த திட்டத்தின் முக்கிய பலம் பாதுகாப்பு ஆகும். வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் இருக்கும் அபாயங்கள் இங்கு இல்லை. அரசாங்கம் நேரடியாக உத்தரவாதம் வழங்குவதால், முதலீட்டாளர்கள் நிம்மதியாக பணத்தை சேமிக்க முடிகிறது. மாதத்திற்கு ரூ.100 முதலீட்டிலேயே கணக்கைத் தொடங்கலாம். 10 வயது குழந்தைகளுக்கு கூட பெற்றோரின் உதவியுடன் கணக்கு திறக்க அனுமதி உள்ளது. 18 வயதைத் தாண்டிய பிறகு, புதிய KYC நடைமுறையை முடித்து அவர்களே கணக்கை இயக்கலாம்.

Related Articles

Related image1
EPFO 3.0: இனி ATM-ல் PF பணம் எடுக்கலாம்.. மொத்த‌ பணமும் கிடைக்குமா? முழு விவரம் இதோ!
Related image2
மே 15-க்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு? பரபரப்பு தகவல்
35
அரசு சேமிப்பு திட்டம்
Image Credit : Google

அரசு சேமிப்பு திட்டம்

தபால் அலுவலக ஆர்டி திட்டத்திற்கு தற்போது ஆண்டு வட்டி விகிதமாக 6.7% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கால அவகாசம் 5 ஆண்டுகள். தேவையெனில் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதில் ஒவ்வொரு மாதமும் நிரந்தரமாக பணம் செலுத்த வேண்டும். மாதத்தின் 15-ஆம் தேதிக்கு முன் கணக்கு தொடங்கினால், அடுத்தடுத்த மாதங்களிலும் 15-ஆம் தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும். 16-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கினால், அந்த மாதத்தின் கடைசி வேலை நாளுக்குள் தொகையைச் செலுத்த வேண்டும்.

45
பாதுகாப்பான முதலீடு
Image Credit : Post Office\Twitter

பாதுகாப்பான முதலீடு

இந்த திட்டத்தில் அவசர தேவைகளுக்காக கடன் வசதியும் வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டு தொடர்ந்து முதலீடு செய்த பிறகு, செலுத்திய தொகையின் 50% வரை கடனாக பெறலாம். அதற்கு 2% வட்டி விதிக்கப்படும். மேலும், கணக்கு தொடங்கிய 3 ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே கணக்கை முடிக்கும் வசதியும் உள்ளது. கணக்கு வைத்திருப்பவர் உயிரிழந்தால், நியமனதாரர் அந்த கணக்கைத் தொடர்ந்து நடத்தவோ அல்லது பணத்தைப் பெறவோ முடியும்.

55
லட்சங்கள் தரும் சேமிப்பு திட்டம்
Image Credit : Getty

லட்சங்கள் தரும் சேமிப்பு திட்டம்

தினமும் ரூ.333 சேமித்தால், மாதத்திற்கு ரூ.10,000 முதலீடு செய்யும் அளவுக்கு தொகை சேரும். இதை 5 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், மொத்த முதலீடு ரூ.6 லட்சமாக இருக்கும். அதற்கு வட்டி சேர்த்து சுமார் ரூ.7.13 லட்சம் வரை கிடைக்கும். இதையே மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால், மொத்த முதலீடு ரூ.12 லட்சமாக உயர்ந்து, வட்டி சேர்த்து ரூ.17 லட்சத்துக்கும் அதிகமான தொகை கையில் கிடைக்கும். சிறு சேமிப்பை பெரிய சொத்தாக மாற்ற நினைப்போருக்கு, இந்த தபால் நிலைய ஆர்டி திட்டம் ஒரு அமைதியான “பண வளர்ப்பு மரம்” போல மாறி வருகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அஞ்சல் அலுவலகம்
பணம்
வணிகம்
தபால் அலுவலகத் திட்டம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
UPI-யில் புதிய பாதுகாப்பு: இனி பணம் அனுப்பும் முன் இந்த மாற்றங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!
Recommended image2
மனைவி பெயரில் ரூ.1 லட்சம் போஸ்ட் ஆபீஸில் டெபாசிட் செய்தால்? 2 ஆண்டில் எவ்வளவு கிடைக்கும்?
Recommended image3
June Bank Holidays : ஜூனில் 11 நாள் வங்கி விடுமுறை.. பேங்குக்கு கிளம்பும் முன் இதை பாருங்க!
Related Stories
Recommended image1
EPFO 3.0: இனி ATM-ல் PF பணம் எடுக்கலாம்.. மொத்த‌ பணமும் கிடைக்குமா? முழு விவரம் இதோ!
Recommended image2
மே 15-க்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு? பரபரப்பு தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved