MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • EPFO 3.0: இனி ATM-ல் PF பணம் எடுக்கலாம்.. மொத்த‌ பணமும் கிடைக்குமா? முழு விவரம் இதோ!

EPFO 3.0: இனி ATM-ல் PF பணம் எடுக்கலாம்.. மொத்த‌ பணமும் கிடைக்குமா? முழு விவரம் இதோ!

EPFO 3.0: ATM PF Withdrawal Rules: பிஎஃப் பணத்தை இனிமேல் ஏடிஎம்மில் எடுத்துக் கொள்ளலாம். இந்த வ்சதி எப்போது அமலுக்கு வருகிறது? இதில் என்னெனன் நிபந்தனைகள் உள்ளன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 08 2026, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பிஎஃப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கலாம்
Image Credit : AI

பிஎஃப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கலாம்

பிஎஃப் பணத்துக்காக இனிமேல் வாரக்கணக்கில் காத்திருக்கவோ, அலுவக‌அலையவோ தேவையில்லை. EPFO 3.0 திட்டத்தின் கீழ், ATM மற்றும் UPI மூலமாகவே உங்கள் பணத்தை எடுக்கலாம். இந்த வசதி எப்போது தொடங்கும், புதிய விதிகள் மற்றும் லிமிட் என்ன என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

ATM-ல் எப்போது PF பணம் எடுக்கலாம்?

ஊடக அறிக்கைகளின்படி, EPFO இந்த புதிய வசதியை மே 2026 கடைசி வாரத்தில் தொடங்கலாம். இதன் முக்கிய நன்மை, அவசரத் தேவைக்கு இனி கிளைம் செட்டில் ஆக காத்திருக்க வேண்டாம். நேரடியாக ATM மெஷினில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

24
ATM-ல் எவ்வளவு PF பணம் எடுக்கலாம்?
Image Credit : Asianet News

ATM-ல் எவ்வளவு PF பணம் எடுக்கலாம்?

உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள முழுப் பணத்தையும் ATM அல்லது UPI மூலம் எடுக்க முடியாது. அறிக்கைகளின்படி, உங்கள் மொத்த பேலன்ஸில் 50% மட்டுமே இப்படி எடுக்க முடியும். மீதிப் பணத்திற்கு பழைய ஆன்லைன் கிளைம் முறையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

இந்த சிஸ்டம் எப்படி வேலை செய்யும்?

EPFO தனது உறுப்பினர்களுக்கு ஒரு சிறப்பு ATM கார்டை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த கார்டு நேரடியாக உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். சாதாரண ATM கார்டு போலவே இதைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். UPI மூலமாகவும் சிறிய பரிவர்த்தனைகள் அல்லது பணம் எடுக்க முடியும்.

Related Articles

Related image1
EPFO : PF கணக்கு வச்சிருக்கீங்களா? பணம் எடுக்கும் விதிமுறையில் முக்கிய மாற்றம்.! அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள் பற்றிய முழு விவரம் இதோ.!
Related image2
PF கணக்கு வச்சிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.! வரப்போகும் 5 முக்கிய மாற்றங்கள்.! சம்பவம் செய்ய காத்திருக்கும் EPFO.!
34
EPFO 3.0-வின் 3 முக்கிய நிபந்தனைகள்
Image Credit : Google

EPFO 3.0-வின் 3 முக்கிய நிபந்தனைகள்

UAN ஆக்டிவாக இருக்க வேண்டும்: உங்கள் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (UAN) ஆக்டிவாக இருப்பது கட்டாயம்.

KYC முடிந்திருக்க வேண்டும்: உங்கள் கணக்குடன் ஆதார், பான் (PAN) மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மொபைல் எண் இணைப்பு: OTP வெரிஃபிகேஷனுக்காக உங்கள் மொபைல் எண், ஆதார் மற்றும் UAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

முன்பை விட சூப்பர்ஃபாஸ்ட் EPFO

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின்படி, EPFO கடந்த 2025-26 நிதியாண்டில் 8.31 கோடி கிளைம்களை செட்டில் செய்துள்ளது. இதில் சுமார் 71% அட்வான்ஸ் கிளைம்கள் வெறும் 3 நாட்களில் ஆட்டோ-மோடில் முடிக்கப்பட்டன. செக் புக் போட்டோ அப்லோடு செய்வது, நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பது போன்ற சிக்கல்கள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன.

44
விரிவுபடுத்தப்படும் ஆட்டோ-மோட் செட்டில்மெண்ட்
Image Credit : Asianet News

விரிவுபடுத்தப்படும் ஆட்டோ-மோட் செட்டில்மெண்ட்

தற்போது குறிப்பிட்ட சில தேவைகளுக்கு (கல்வி, திருமணம், நோய்) மட்டுமே ஆட்டோ-மோட் செட்டில்மெண்ட் உள்ளது. ஆனால் மே 2026-ல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, வீட்டுக் கடன் மற்றும் பிற அட்வான்ஸ் தேவைகளுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.

ஆன்லைனில் வங்கி கணக்கை மாற்றலாம்

புதிய விதிமுறைப்படி, உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கை மாற்றினால், இனி பழையபடி அலுவலக அனுமதிக்குக் காத்திருக்க வேண்டியதில்லை. ஆன்லைனிலேயே அது உடனடியாக அப்டேட் ஆகும் வசதியும் EPFO 3.0-ல் உண்டு.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வருங்கால வைப்பு நிதி திரும்பப் பெறுதல்
பி.எஃப் இருப்பு (PF Iruppu)
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Car Loan: கார் லோன் வாங்கப் போறீங்களா? மே 2026 படி குறைந்த வட்டி தரும் வங்கிகளின் பட்டியல் இதோ.!
Recommended image2
Jio Recharge Refund: தப்பான நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிட்டீங்களா? டென்ஷன் இல்லை... ஜியோ தரும் சூப்பர் ரீஃபண்ட் வசதி!
Recommended image3
Money Growth Tips: உங்கள் மாத வருமானத்தை 2 மடங்காக உயர்த்தலாம்! உங்களை லட்சாதிபதியாக்கும் 10 ரகசியங்கள்!
Related Stories
Recommended image1
EPFO : PF கணக்கு வச்சிருக்கீங்களா? பணம் எடுக்கும் விதிமுறையில் முக்கிய மாற்றம்.! அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள் பற்றிய முழு விவரம் இதோ.!
Recommended image2
PF கணக்கு வச்சிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.! வரப்போகும் 5 முக்கிய மாற்றங்கள்.! சம்பவம் செய்ய காத்திருக்கும் EPFO.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved