- Home
- Business
- PF கணக்கு வச்சிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.! வரப்போகும் 5 முக்கிய மாற்றங்கள்.! சம்பவம் செய்ய காத்திருக்கும் EPFO.!
PF கணக்கு வச்சிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.! வரப்போகும் 5 முக்கிய மாற்றங்கள்.! சம்பவம் செய்ய காத்திருக்கும் EPFO.!
EPFO 3.0 Updates 2026 : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டமான EPFO 3.O வில் 5 முக்கிய மாற்றங்கள் வரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PF கணக்கில் வரும் 5 முக்கிய மாற்றங்கள்
தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் நலனுக்காக வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது EPFO நிறுவனம் தனது சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி வங்கிகளுக்கு இணையான வேகத்தில் சேவைகளை வழங்க இருக்கிறது. இதற்காக EPFO 3.O என்கிற புதிய திட்டத்தை 2025 ஆம் ஆண்டு தொடங்கியது. இது 2026 ஆம் ஆண்டு மத்தியில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் வர இருக்கும் ஐந்து முக்கிய மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
EPFO 3.O மூலம் டிஜிட்டல் சேவைகள் மேம்பாடு
தற்போதைய நடைமுறைப்படி ஊழியர்கள் தங்கள் PF பணத்தை எடுப்பதற்கு சில காலம் காத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. EPFO 3.O புதிய திட்டத்தில் ஊழியர்கள் தனது பணத்தை எளிதாகவும், வேகமாகவும் டிஜிட்டல் முறையில் பெறும் வசதி அறிமுகப்படுத்த உள்ளது. வங்கிகளுக்கு இணையான வேகத்தில் டிஜிட்டல் சேவைகளை EPFO நிறுவனம் மேம்படுத்த உள்ளது. ஒரு கிளிக் மூலம் வங்கி சேவைகளை பெறுவது போலவே, PF சேவையும் ஒரு கிளிக்கிலேயே செய்ய முடியும். EPFO 3.O அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் PF பணத்தை டிஜிட்டல் முறையில் நம்மால் மேலாண்மை செய்ய முடியும்.
UPI மற்றும் ATM மூலம் பணம் எடுத்தல்
EPFO 3.O திட்டத்தில் மிக முக்கிய மாற்றமாக UPI மூலம் பணத்தை நேரடியாக பெரும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நம் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை Gpay, Paytm, PhonePe மூலம் எடுத்து பயன்படுத்துகிறோமோ அதே போல PF கணக்கில் இருக்கும் பணத்தை நாம் UPI மூலம் எடுத்து பயன்படுத்தலாம். உறுப்பினர்கள் தங்களின் தொகையை UPI மூலம் நேரடியாக வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம். இந்த முக்கிய மாற்றம் PF கணக்கு வைத்திருப்பவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எளிமையாக்கப்பட்ட 3 புதிய பிரிவுகள்
தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளும் வழங்கப்படும். இதன் மூலம் அவசரத் தேவைகளுக்கு நேரடியாக பணம் எடுக்க முடியும். மொத்த இருப்பில் 75% வரை இந்த முறையில் பணம் எடுக்க அனுமதிக்கப்படலாம். மீதமுள்ள 25% ஓய்வூதிய பாதுகாப்பிற்காக கணக்கில் வைக்கப்படும். அதேபோல் பணத்தை கிளைம் செய்ய இதுவரை 13 வகை காரணங்கள் இருந்தன. ஆனால் அவை தற்போது மூன்றாக மாற்றப்பட்டுள்ளன. மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற அத்தியாவசிய தேவைகள். வீடு வாங்குதல் அல்லது புதுப்பித்தல் போன்ற வீட்டுத் தேவைகள். வேலையின்மை போன்ற காரணங்களால் ஏற்படும் சிறப்பு சூழல்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் (Employer) தலையீடு குறைப்பு
முன்பு PF பணத்தை எடுக்க அல்லது திருத்தங்கள் செய்ய நிறுவனத்தின் டிஜிட்டல் கையொப்பம் அவசியமாக இருந்தது. தற்போது அவை மாற்றப்பட்டு பெரும்பாலான கிளைம்களுக்கு நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை என்கிற நிலை ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் போன்ற விவரங்களை உறுப்பினர்களே OTP மூலம் திருத்திக் கொள்ளலாம் என்கிற புதிய விதிமுறைகள் வரவுள்ளது. அதேபோல் PF தொகையில் 75% பணத்தை எந்த ஆவணங்களும் இல்லாமல் பெற முடியும். வேலையிலிருந்து நீக்கப்படுகிறீர்கள் அல்லது ராஜினாமா செய்கிறீர்கள் ஆகிய காரணங்களின் போது PF தொகையில் 75% உடனடியாக பெற முடியும்.
தானியங்கி தீர்வு வரம்பு
நீங்கள் ஒரு வேலையை விட்டு மற்றொரு வேலைக்கு சேரும்பொழுது பழைய PF தொகையை புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்ற இனி விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தானாகவே புதிய கணக்கிற்கு மாறிவிடும். மருத்துவ தேவைகளுக்காக இருக்கும் தானியங்கி தீர்வு வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உங்கள் UAN கணக்கில் KYC விவரங்கள் ஆதார், பான், வங்கி விவரம் ஆகியவை சரியாக இருந்தால் எந்தவித மனிதக் குறுக்கீடும் இன்றி சில மணி நேரங்களிலேயே பணம் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.
2026 ஆம் ஆண்டு மத்தியில் நடைமுறைக்கு வரும்
பழைய EPFO முறையில் நாம் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் விண்ணப்பத்தை சமர்ப்பித்து விட்டு பல வாரங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். இதை அதிகாரிகள் ஏற்றால் மட்டுமே நம்மால் பணத்தை எடுக்க முடியும். ஆனால் EPFO 3.O திட்டத்தில் நினைத்த நேரத்தில் நாம் PF கணக்கிலிருந்து பணத்தை எடுத்து பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2026 ஆம் ஆண்டு மத்தியில் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

