MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • PF கணக்கு வச்சிருக்கவங்களுக்கு டபுள் ஜாக்பாட்.! இனி மாதம் ரூ.6,000 வரப்போகுது.! ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறப்போகுது.!

PF கணக்கு வச்சிருக்கவங்களுக்கு டபுள் ஜாக்பாட்.! இனி மாதம் ரூ.6,000 வரப்போகுது.! ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறப்போகுது.!

New PF rules from April 1 2026 : வருங்கால வைப்பு நிதி தொடர்பான தற்போதைய நிலவரம் மற்றும் ஏப்ரல் 01, 2026 ஆம் தேதி முதல் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 20 2026, 12:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
New PF rules from April 1 2026 பிஃஎப் உச்ச வரம்பு உயர்வு
Image Credit : Asianet News

New PF rules from April 1 2026 - பிஃஎப் உச்ச வரம்பு உயர்வு

தனியார் துறையில் வேலை பார்க்கும் லட்சக்கணக்கான ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு வருங்கால வைப்பு நிதியில் ஒரு முக்கிய மாற்றத்தை மேற்கொள்ள இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Pay) ரூ.15,000 ரூபாய் வரை இருந்தால் மட்டுமே பிஎஃப் கட்டயாம் என்ற நிலை உள்ளது. இந்த வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கடைசியாக 2014 ஆம் ஆண்டு இந்த வரம்பு ரூ.6,500 இல் இருந்து ரூ.15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

26
ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறை
Image Credit : X

ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறை

இந்த நிலையில் சம்பள உச்சவரம்பை ரூ.25,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஏப்ரல் 1 2026 முதல் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த வரம்பு உயர்ந்தால் கூடுதலாக லட்சக்கணக்கான தனியார் துறை ஊழியர்கள் பிஎஃப் திட்டத்தின் கீழ் வருவார்கள். மேலும் ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பும் அதிகரிப்பதால் ஓய்வு கால சேமிப்பும் கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.

Related Articles

Related image1
பான் கார்டு வச்சிருக்கீங்களா? ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறப்போகுது.! பான் கார்டு தொடர்பாக அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்.!
Related image2
சொத்து பத்திரத்தில் பிழைகள் இருந்தால் அதை சரி செய்ய முடியுமா? அதற்கான சரியான வழிமுறைகள் என்ன? முழு விவரம் இதோ.!
36
ஒவ்வொரு நிதியாண்டிலும் வரும் மாற்றம்
Image Credit : Google

ஒவ்வொரு நிதியாண்டிலும் வரும் மாற்றம்

ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் வருமான வரி மற்றும் சேமிப்பு விதிகளில் சில மாற்றங்கள் வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருமான விதிகளின்படி ஒரு நிதியாண்டில் ஊழியரின் பிஎஃப் பங்களிப்பு ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த கூடுதல் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு இது ரூ.5 லட்சம் ரூபாயாகும். ஏப்ரல் 1 முதல் புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime) இயல்புநிலை வரி (Default) முறையாக இருக்கும். பழைய முறையில் வரிவிலக்கு பெற விரும்பினால் அதை உங்கள் நிறுவனத்திடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

46
வரம்பு உயர்வால் கிடைக்கும் நன்மைகள்
Image Credit : Social Media

வரம்பு உயர்வால் கிடைக்கும் நன்மைகள்

வேலை மாறும் ஊழியர்களுக்கு பயனுள்ள வகையில் பழைய நிறுவனத்தின் பிஎஃப் கணக்கை புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு தானாகவே மாற்றும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி மேனுவலாக விண்ணப்பிக்கும் சிரமம் குறையும். அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் பிடிக்கப்படுவதால் பிஎஃப் கணக்கில் சேரும் தொகை அதிகரிக்கும். உங்கள் பங்களிப்பு அதிகரிப்பதால் மாதம் தோறும் நீங்கள் கையில் வாங்கும் நிகர சம்பளம் குறைவ வாய்ப்பு உள்ளது. இருப்பினும் உங்கள் நிறுவனம் வழங்கும் பங்களிப்பும் உயரும் என்பதால் நீண்ட கால அடிப்படையில் இது உங்களுக்கு அதிக லாபத்தை தரக்கூடும்.

56
மாதம் ரூ.6,000 பிஃஎப் கணக்கில் வரவு
Image Credit : social media

மாதம் ரூ.6,000 பிஃஎப் கணக்கில் வரவு

உதாரணமாக நீங்கள் ரூ.25,000 சம்பளம் வாங்குபவராக இருந்தால் பிஎஃப் 12% பிடிக்கப்படும். உங்கள் பங்களிப்பு ரூ.3,000 மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு ரூ.3,000 என மொத்தம் ரூ.6,000 உங்கள் கணக்கில் சேரும். தற்போது இது அதிகபட்சம் ரூ.3,600 ஆக மட்டுமே உள்ளது. நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு பகுதி ஓய்வூதிய திட்டத்திற்கு செல்கிறது. உச்சவரம்பு உயர்வதால் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு கிடைக்கும் மாதாந்திர பென்ஷன் தொகை முன்பை விட அதிகமாக இருக்கும். அதே போல் இலவச காப்பீடு தொகையும் புதிய உச்சவரம்புக்கு ஏற்ப உயர்த்தப்படும்.

66
முக்கிய குறிப்பு
Image Credit : Asianet News

முக்கிய குறிப்பு

தனிநபர் வருமானம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் பிஎஃப் வரம்பு மாற்றப்படாமல் இருந்தது. இதனால் நடுத்தர வருவாய் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களால் பிஎஃப் மற்றும் ஓய்வூதிய பலன்களை முழுமையாகப் பெற முடியாத சூழல் நிலவியது. அதிகரித்து வரும் பண வீக்கத்தைக் கொண்டு நான்கு மாதத்திற்குள் இந்த சம்பள வரவை மாற்றி அமைக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இபிஎப்ஓ அமைப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உச்சவரம்பு உயர்வு குறித்த இறுதி அறிவிப்பு மத்திய தொழிலாளர் அமைச்சகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விரைவில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வருங்கால வைப்பு நிதி திரும்பப் பெறுதல்
பி.எஃப் இருப்பு (PF Iruppu)
வருங்கால வைப்பு நிதி கடன்
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)
Latest Videos
Recommended Stories
Recommended image1
டோல் கட்டாமல் போனீங்களா? 72 மணி நேரத்துக்குள் கட்டுங்க.. இல்லனா இரட்டிப்பு அபராதம்
Recommended image2
டோல்கேட்டில் FASTag சிக்கலா? இனி இப்படி செய்தால் 50% பணம் மிச்சம்.. புது ரூல்ஸ் தெரிஞ்சிக்கோங்க!
Recommended image3
Business Idea: பேப்பர் முட்டை ட்ரே பிசினஸ் மூலம் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்.! A to Z முழு தகவல் இதோ.!
Related Stories
Recommended image1
பான் கார்டு வச்சிருக்கீங்களா? ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறப்போகுது.! பான் கார்டு தொடர்பாக அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்.!
Recommended image2
சொத்து பத்திரத்தில் பிழைகள் இருந்தால் அதை சரி செய்ய முடியுமா? அதற்கான சரியான வழிமுறைகள் என்ன? முழு விவரம் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved