- Home
- Business
- பான் கார்டு வச்சிருக்கீங்களா? ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறப்போகுது.! பான் கார்டு தொடர்பாக அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்.!
பான் கார்டு வச்சிருக்கீங்களா? ஏப்ரல் 1 முதல் எல்லாமே மாறப்போகுது.! பான் கார்டு தொடர்பாக அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்.!
PAN Card rules from April 1 2026 : பான் கார்டு தொடர்பான விதிகளில் மத்திய அரசு சில மாற்றங்களை செய்துள்ளது. புதிய நடைமுறைகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PAN Card rules from April 1 2026
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் பான் கார்டு, கேஸ் சிலிண்டர் விலை, கிரெடிட் கார்டு, பங்குச் சந்தைகள், வங்கி நடைமுறைகள் ஆகியவற்றில் சில மாற்றங்கள் ஏற்படும். இந்த ஆண்டின் நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பான் கார்டு தொடர்பாக சில மாற்றங்கள் வர இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வங்கி பரிவர்த்தனைகள்
வங்கிகளில் ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை பணம் எடுத்தல் அல்லது டெபாசிட் செய்வதற்கு பான் கார்டு அவசியமாக இருந்தது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு பணத்தை வரவு வைப்பது அல்லது எடுப்பது ரூ.10 லட்சத்தை தாண்டினால் மட்டுமே பான் கார்டு தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் பாலிசி
இன்சூரன்ஸ் பாலிசியில் ஆயுள் காப்பீடு பிரீமியம் தொகை ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்தை தாண்டினால் பான் கார்டு தேவைப்படுகிறது. ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பிரீமியம் தொகை எவ்வளவாக இருந்தாலும் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்றால் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாகனம் வாங்க
இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை வாங்கினால் பான் கார்டு கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்கிற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வாகனத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்தை தாண்டினால் மட்டுமே பான் கார்டு தேவை என்று கூறப்பட்டுள்ளது.
சொத்துக்களை வாங்க அல்லது விற்க
சொத்துக்களை வாங்கும்போதோ விற்கும் போதோ அதன் மதிப்பு ரூ.10 லட்சத்தை தாண்டினால் மட்டுமே பான் கார்டு கட்டாயம் என்கிற நிலைமை இருந்தது. ஆனால் வரும் 1 ஆம் தேதி முதல் சொத்து மதிப்பு ரூ.20 லட்சத்தை தாண்டினால் மட்டுமே பான் கார்டு தேவைப்படும் என்கிற நடைமுறை வருகிறது. ஒரு அசையா சொத்து பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.10 லட்சத்தை தாண்டினால் பான் கார்டு அவசியமாக இருந்தது. தற்போதைய நடைமுறைப்படி ரூ.20 லட்சத்தை தாண்டினால் மட்டுமே பான் கார்டு தேவைப்படும்.
உணவகங்கள்
தற்போது ஒரு ஹோட்டல் அல்லது உணவகத்திற்கு ஒரே பரிவர்த்தனையில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் செலுத்தினால் பான் கார்டு கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், உணவகங்கள், விருந்து அரங்குகள், மற்றும் நிகழ்ச்சி மேலாளர்களுக்கு செய்யப்படும் கொடுப்பனவுகள் ரூ.1 லட்சத்தை தாண்டினால் மட்டுமே பான் கார்டு தேவைப்படும்.
இறுதியானவையா?
இந்த மாற்றங்கள் வருமான வரி விதிப்பு வரைவு விதிகளின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த விதிகள் குறித்து அரசு பொது மக்களின் கருத்துக்களை கோரியுள்ளது. இந்த விதிகள் இறுதி செய்யப்பட்டால், புதிய வருமான வரி கட்டமைப்புடன் சேர்த்து இவை ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும் வரை பழைய விதிமுறைகளே தொடர்ந்து அமலில் இருக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

