MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கூகுள் பே, போன்பே வாடிக்கையாளர்கள் அலெர்ட்.. பணம் அனுப்பும் முன்.. புதிய ரூல்ஸ்.!!

கூகுள் பே, போன்பே வாடிக்கையாளர்கள் அலெர்ட்.. பணம் அனுப்பும் முன்.. புதிய ரூல்ஸ்.!!

Google Pay, PhonePe Users Alert: யுபிஐ பரிவர்த்தனைகள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் மோசடிகளும் உயர்ந்து வருகின்றன. இந்த நிலையில் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 03 2026, 10:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
யுபிஐ பேமெண்ட்ஸில் பெரிய மாற்றம்
Image Credit : our own

யுபிஐ பேமெண்ட்ஸில் பெரிய மாற்றம்

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் முதுகெலும்பாக யுபிஐ மாறியுள்ளது. டீக்கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை, பெரும்பாலான இடங்களில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வசதி அதிகரித்துள்ள நிலையில், மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருவது வங்கிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு
Image Credit : our own

ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு

இதன் காரணமாக, வங்கிகள் ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஐ-க்கு சில புதிய பாதுகாப்பு அம்சங்களை பரிந்துரைத்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக, சந்தேகத்திற்குரிய அல்லது அதிக ஆபத்து கொண்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு "ஆம் / இல்லை" உறுதிப்படுத்தல் திரை காட்டும் நடைமுறை இடம்பெற்றுள்ளது. பயனர் "ஆம்" என்பதைத் தேர்வு செய்தால் பரிவர்த்தனை தொடரும். "இல்லை" என்பதைத் தேர்வு செய்தால் அது ரத்து செய்யப்படும்.

வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

Related Articles

Related image1
Parenting Tips: மகள்களிடம் இந்த 5 விஷயங்களை ஒருபோதும் சொல்லாதீர்கள்.. உளவியல் சொல்வது என்ன?
Related image2
Income Tax Notice: வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
35
ரூ.10,000-க்கு மேல் குறிப்பிட்ட பரிவர்த்தனை
Image Credit : Google

ரூ.10,000-க்கு மேல் குறிப்பிட்ட பரிவர்த்தனை

மேலும், சில தகவல்களின்படி, ரூ.10,000-க்கு மேல் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இருப்பினும், அனைத்து ரூ.10,000-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கும் இது கட்டாயமாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

45
என்பிசிஐ புது அம்சம்
Image Credit : our own

என்பிசிஐ புது அம்சம்

இந்த பாதுகாப்பு அம்சங்கள் குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் பரிவர்த்தனைகள், இதுவரை பணம் அனுப்பாத புதிய பயனாளர்களுக்கு செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் அல்லது புதிதாக திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் தொகைகள் போன்றவை அதிக எனக் கருதப்படும் சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

55
வரப்போகும் பாதுகாப்பு வசதி
Image Credit : our own

வரப்போகும் பாதுகாப்பு வசதி

இந்த நடவடிக்கைகளின் நோக்கம், அவசரத்தில் தவறான நபருக்கு பணம் அனுப்புவதை குறைப்பது, சைபர் மோசடி பயனர்களைப் பாதுகாப்பதும் ஆகும். இருப்பினும், ரிசர்வ் வங்கி அல்லது என்பிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தும் வரை, தற்போதைய யுபிஐ நடைமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்
UPI பரிவர்த்தனைகள்
UPI கொடுப்பனவு
இந்திய ரிசர்வ் வங்கி
வணிகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
EMI After Borrower Death: வீட்டுக் கடன் வாங்கியவர் இறந்தால் இஎம்ஐ யார் கட்ட வேண்டும்? வங்கி விதிகள் என்ன?
Recommended image2
தமிழகத்தல் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு.?! முதல்வர் விஜயிடம் நேரடியாக பேசிய அம்பானி.! பட்ஜெட்டுக்கு பிறகு தாறுமாறாக மாறப்போகும் தமிழ்நாடு.!
Recommended image3
Income Tax Notice: வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
Related Stories
Recommended image1
Parenting Tips: மகள்களிடம் இந்த 5 விஷயங்களை ஒருபோதும் சொல்லாதீர்கள்.. உளவியல் சொல்வது என்ன?
Recommended image2
Income Tax Notice: வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved