MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Parenting Tips: மகள்களிடம் இந்த 5 விஷயங்களை ஒருபோதும் சொல்லாதீர்கள்.. உளவியல் சொல்வது என்ன?

Parenting Tips: மகள்களிடம் இந்த 5 விஷயங்களை ஒருபோதும் சொல்லாதீர்கள்.. உளவியல் சொல்வது என்ன?

Parenting Tips: மகள்களின் தன்னம்பிக்கையை பாதிக்கக்கூடிய 5 பொதுவான வார்த்தைகள் என்ன? பெற்றோர் தவிர்க்க வேண்டிய உரையாடல்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 03 2026, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மகள்களிடம் அம்மாக்கள் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்
Image Credit : ChatGPT

மகள்களிடம் அம்மாக்கள் சொல்லக்கூடாத 5 விஷயங்கள்

ஒவ்வொரு மகளுக்கும் அவங்க அம்மாதான் முதல் குரு, முதல் தோழி. ஒரு மகள் தன்னைப்பற்றி எப்படி நினைக்க வேண்டும், இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை தன் தாயின் வார்த்தைகள் மூலமாகத்தான் கத்துக்கிறா. அதனால அம்மா சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் ரொம்ப முக்கியம். சில வார்த்தைகள் மகளின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிடும். அப்படி மகள்களிடம் தாய்மார்கள் சொல்லவே கூடாத 5 விஷயங்கள் என்னன்னு பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
நீ அழகா இல்லைன்னு சொல்றது
Image Credit : Getty

நீ அழகா இல்லைன்னு சொல்றது

ஒரு பெண் தன் தோற்றத்தைப் பத்தி முதன்முதலா ஒரு கருத்தை உருவாக்குறதே குடும்பத்தினர் சொல்ற வார்த்தைகள்ல இருந்துதான். மத்த பொண்ணுங்களோட ஒப்பிடுறது, அழகை விமர்சனம் செய்றது அவளோட தன்னம்பிக்கையை குறைச்சிடும். அழகு என்பதை விட குணம், தன்னம்பிக்கைதான் முக்கியம்னு சின்ன வயசுல இருந்தே சொல்லிக் கொடுக்கணும். 'நீ ஸ்பெஷல்'னு ஒரு அம்மா தன் மகளுக்கு உணர்த்திட்டா, அவ வாழ்க்கையில எதையும் தைரியமா சந்திப்பா.

Related Articles

Related image1
Fake Rice: உங்க அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருக்கா? கலப்படத்தை கண்டறிய 4 ஈஸி டிப்ஸ்.!
Related image2
Now Playing
சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு பயணம் செய்த முதல்வர் முதலமைச்சர் விஜய் ! மகிழ்ச்சியில் மக்கள்
36
உன்னால எதுவும் முடியாதுன்னு சொல்றது
Image Credit : Getty

உன்னால எதுவும் முடியாதுன்னு சொல்றது

தேர்வுல மார்க் குறைஞ்சாலோ, ஏதேனும் வேலையில தோல்வி அடைஞ்சாலோ, அவளை மனசு தளர வைக்கிற மாதிரி பேசாதீங்க. ஊக்கப்படுத்துற மாதிரி பேசுங்க. 'மறுபடியும் முயற்சி பண்ணு, நான் உன்கூட இருக்கேன்'னு நீங்க சொல்ற வார்த்தை அவ வாழ்க்கையையே மாத்தலாம். ஒரு தாயோட நம்பிக்கைதான் மகளுக்கு மிகப்பெரிய பலம்.

வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

46
சமூகம் என்ன சொல்லுமோன்னு யோசிக்க சொல்றது
Image Credit : Getty

சமூகம் என்ன சொல்லுமோன்னு யோசிக்க சொல்றது

'நாலு பேரு என்ன சொல்வாங்க'னு யோசிச்சு முடிவு எடுக்கச் சொல்லிக் கொடுக்காதீங்க. அப்படி வளர்ற பொண்ணுங்க, தங்களோட ஆசைகளை ஒதுக்கி வச்சுட்டு, மத்தவங்களை சந்தோஷப்படுத்தவே முயற்சி பண்ணுவாங்க. உங்க மகளுக்கு அவளோட முடிவுகளுக்கு மரியாதை கொடுக்கவும், சுயமரியாதையோட இருக்கவும் கத்துக்கொடுங்க. சமூகம் மாறிட்டே இருக்கும், ஆனா சுயமரியாதைதான் வாழ்க்கை முழுக்க கூட வரும்.

56
பொம்பள பிள்ளைகளுக்கு இது போதும்னு சொல்றது
Image Credit : Getty

பொம்பள பிள்ளைகளுக்கு இது போதும்னு சொல்றது

படிப்பு, வேலை, பொருளாதாரம்னு எந்த விஷயத்திலயும் பெண் பிள்ளைகளுக்கு ஒரு எல்லையை நிர்ணயிக்காதீங்க. அது அவங்களோட வளர்ச்சியை தடுத்துடும். இன்னைக்கு பொண்ணுங்க எல்லா துறையிலயும் சாதிச்சுட்டு இருக்காங்க. மகளோட கனவுகளுக்கு தடையா இல்லாம, அதை அடையுறதுக்கு துணையா நிக்கிறதுதான் பெற்றோரோட கடமை. 'நீ நினைச்சதை சாதிக்க முடியும்'ங்கிற நம்பிக்கையை அம்மா கொடுக்கணும்.

66
கல்யாணம் பண்ணா எல்லாம் சரியாகிடும்னு சொல்றது
Image Credit : AI

கல்யாணம் பண்ணா எல்லாம் சரியாகிடும்னு சொல்றது

எல்லா பிரச்சினைக்கும் கல்யாணம்தான் தீர்வுனு உங்க மகளுக்கு சொல்லிக் கொடுக்காதீங்க. கல்யாணம் வாழ்க்கையோட ஒரு பகுதிதான், அதுவே முழு வாழ்க்கை இல்லை. முதல்ல அவளை தன் கால்ல நிக்கிறதுக்கும், பொருளாதார ரீதியா தைரியமா இருக்கவும் ஊக்கப்படுத்துங்க. தன்னிச்சையா முடிவெடுக்குற அளவுக்கு அவ வளர்ந்தாதான், எந்த உறவும் ஆரோக்கியமா இருக்கும். சுதந்திரமா வாழக் கத்துக்கிட்ட பொண்ணு எங்க இருந்தாலும் சந்தோஷமா இருப்பா.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெற்றோர் ஆலோசனை
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Fact: அமெரிக்காவில் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கினாலும் இவ்வளவு தான் கையில் நிக்குமாம்.! ஒரு மாத செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?
Recommended image2
Coriander: மண் இல்லாம, பிளாஸ்டிக் பாட்டில்ல கொத்தமல்லி வளர்க்கலாம்! எப்படினு தெரிஞ்சுக்கோங்க
Recommended image3
உதடு கருமை நீங்கணுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை குறிப்புகள் இதோ
Related Stories
Recommended image1
Fake Rice: உங்க அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருக்கா? கலப்படத்தை கண்டறிய 4 ஈஸி டிப்ஸ்.!
Recommended image2
Now Playing
சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு பயணம் செய்த முதல்வர் முதலமைச்சர் விஜய் ! மகிழ்ச்சியில் மக்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved