Tamil

பொடுகை விரட்ட 6 எளிய வீட்டுக்குறிப்புகள்

பொடுகுத் தொல்லை என்பது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. இதை சரிசெய்ய வீட்டிலேயே இருக்கும் 6 எளிய வீட்டுக்குறிப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

Tamil

வீட்டிலேயே இருக்கு தீர்வு

தலையில் தோல் செதில் செதிலாக உதிர்வதுதான் பொடுகு. இந்தப் பிரச்சனையை கட்டுப்படுத்த நம்ம வீட்டு கிச்சனிலேயே பொருட்கள் இருக்கு.

Image credits: Social media
Tamil

டீ ட்ரீ ஆயில்

சில துளிகள் டீ ட்ரீ ஆயிலை, அதே அளவு தேங்காய் எண்ணெயுடன் கலக்குங்க. ஒரு காட்டன் பஞ்சை அதில் நனைத்து, தலையில் தடவுங்க. வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை இப்படி செய்யலாம்.

Image credits: Getty
Tamil

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை தலையில் நன்றாக மசாஜ் செய்யுங்க. சுமார் ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, பிறகு மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசுங்க. 

Image credits: Getty
Tamil

வெங்காயச் சாறு

வெங்காயச் சாற்றை எடுத்து தலையில் நன்றாகத் தடவுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசிடுங்க. வாரத்திற்கு இரண்டு முறை வெங்காயச் சாற்றை தலையில் தடவலாம்.

Image credits: Getty
Tamil

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை தலையில் நன்றாகத் தடவி மசாஜ் செய்யுங்க. 20 நிமிடம் கழித்து தலையை அலசிவிடலாம். வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது இதை தலையில் தடவலாம்.

Image credits: Getty
Tamil

வேப்பிலை

வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் குணங்கள் இருக்கு. இது பொடுகை விரட்ட உதவும். வேப்பிலை ஊறவைத்த தண்ணீரைக் கொண்டு தலையை அலசுங்க.

Image credits: Instagram
Tamil

விளக்கெண்ணெய்

பொடுகை விரட்ட வாரத்தில் ஒரு நாள் விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். இது ஒரு ஆன்டி-மைக்ரோபியல் ஏஜென்டாக செயல்பட்டு, தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image credits: Social Media

Hair Clips: நொடியில் உங்கள் தோற்றத்தை மாற்றும் அசத்தலான ஹேர் கிளிப்ஸ்!

Gold Haaram: அட்டகாசமான லைட் வெயிட் ஹாரம் டிசைன்கள்! ஹிரோயின் லுக்.!

Rice : அரிசியில் வண்டு வராமல் இருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

Anklet Designs : உங்க பாதத்துக்கு ராயல் லுக் தரும் அசத்தலான கொலுசு டிசைன்ஸ்!