Tamil

அரிசியில் வண்டு வராமல் இருக்க டிப்ஸ்!

அரிசியில் வண்டு வராமல் தடுக்கவும், அவற்றை ரசாயனம் இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே விரட்ட சில எளிய வழிகள் இதோ!

Tamil

பிரியாணி இலை மற்றும் கிராம்பு

அரிசி டப்பாவில் 4-5 பிரியாணி இலை அல்லது 8-10 கிராம்பு வையுங்கள். இதன் நெடிக்குப் பூச்சிகள் விலகிவிடும்!

Image credits: social media
Tamil

தோல் உரிக்காத பூண்டு

பூண்டின் 5-6 பற்களைத் தோல் உரிக்காமல், அரிசியின் நடுவே ஆங்காங்கே புதைத்து வையுங்கள். பூண்டு காய்ந்ததும், அதை எடுத்துவிட்டு புதிய பற்களை வைக்கவும். இதன் நெடி பூச்சிகளை அண்டவிடாது.
Image credits: Getty
Tamil

வேப்பிலையின் மேஜிக்

காய்ந்த வேப்பிலைகளை ஒரு மெல்லிய பருத்தித் துணியில் கட்டி, அரிசி டப்பாவிற்குள் போட்டு வையுங்கள். வேப்பிலையின் இயற்கையான பூச்சிக்கொல்லி குணம், அரிசியில் புழு, வண்டு வராமல் தடுக்கும்.
Image credits: Getty
Tamil

காய்ந்த மிளகாய்

அரிசியில் 3-4 முழு காய்ந்த மிளகாய்களைப் போட்டு வையுங்கள். மிளகாயின் காரமான நெடிக்கு, அரிசியில் மறைந்திருக்கும் வண்டுகள் வெளியே வந்துவிடும்.
Image credits: Getty
Tamil

வெயிலில் உலர்த்துதல்

ஒருவேளை அரிசியில் பூச்சித் தொல்லை அதிகமாக இருந்தால், அரிசியை ஒரு துணியில் பரப்பி, 2-3 மணி நேரம் நல்ல வெயிலில் காய வையுங்கள். வெப்பம் தாங்காமல் பூச்சிகள் தானாகவே வெளியேறிவிடும்.

Image credits: pixabay

Anklet Designs : உங்க பாதத்துக்கு ராயல் லுக் தரும் அசத்தலான கொலுசு டிசைன்ஸ்!

Hair Clips : நொடியில் உங்கள் தோற்றத்தை மாற்றும் அசத்தலான ஹேர் கிளிப்ஸ்!

Gold Earrings: டெய்லி யூஸிற்கு ஏற்ற அசத்தலான 5 தங்க கம்மல் டிசைன்ஸ்!

Gas Stove: இனி உங்க கேஸ் ஸ்டவ் ரிப்பேரே ஆகாது.! சீக்டெட் டிப்ஸ்.!